Word |
English & Tamil Meaning |
|---|---|
| படதீபம் | Paṭa-tipam, n. <>படம் +. A kind of lamp. See நாகதீபம். படதீப முதலாய பரிந்தியற்றி (உபதேசகா. உருத்திராக்.161). . |
| படந்தெரி - தல் | Paṭanteri-, v. intr. <>படர்+எரி-. To burn with a broad flame, as a wick without oil; விளக்கில் எண்ணெயற்றபோது திரி பரந்து எரிதல். |
| படப்பம் | Paṭappam, n. cf. மடப்பம். Town surrounded by villages; மருங்கி லூர்சூழ்ந்த நகரம். (W.) |
| படப்பயம் | Paṭa-p-payam, n. Perh. படு-+. Baseless panic; அகாரணமான பயம். Tinn. |
| படப்பு | paṭappy, n. <>படப்பை. 1. Hayrick; வைக்கோற்போர். மன்றத் தார்ப்பிற் படப்பொடுங் கும்மே (புறநா. 334). 2. Enclosed garden 3. See படப்பை, 8. (J.) |
| படப்பை | Paṭappai, n. Perh. படை-. 1. Garden; enclosed garden; தோட்டக்கூறு. பூவிரிபடப்பைப் புகார்மருங் கெய்தி (சிலப். 6, 32). 2. Backyard; 3. Adjoining region or locality; 4. Vicinity or outskirts of a town; 5. Rural parts, country; 6. Agricultural town or village; 7. Cow-stall; 8. Enclosure for collecting and drying palmyra fruits; |
| படப்பொறி | Paṭa-p-poṟi, n. <>படம் +. 1. Spots on the hood of a cobra; நாகத்தின் படத்திலுள்ள புள்ளிகள். (சூடா.) 2.Evening mallow. See துத்தி, 1. (மாலை.) |
| படபட - த்தல் | paṭa-paṭa-, 11 v. intr. 1. To be overhasty, as in speech; பேச்சு முதலியவற்றில் விரைதல். படபடத்துப் பேசினான். 2. To tremble through fear; to shiver, as from cold, fever or ague: 3. To be agitated through rage; 4. To rattle, as things falling, rolling of breaking; |
| படபடப்பு | Paṭapaṭappu, n. <>படபட-. 1. Precipitancy, agitation, as through fear or anger; துடிப்பு. 2. Overhastiness, as in speech 3.Shivering, quivering, as from cold or ague; |
| படபடெனல் | Paṭa-paṭeṉal, n. Onom. expr. signifying a.Throbbing, quivering; துடித்தற்குறிப்பு. படபடென நெஞ்சம் பதைத்து (தாயு. கருணா. 9): b. Speaking in haste, as through fear, anger; c. Shaking, Quaking, tottering; d. Bursting, breaking, falling with a rattling noise; e. hurry, as in preparation for a journey; (f) exhaustion; |
| படபை | Paṭapai, n. <>badabā. Submarine fire. See வடவை. . |
| படம் 1 | Paṭam, n. <>Paṭa. 1. Cloth for wear; சீலை. (பிங்.) மாப்பட நூலின் றொகுதிக் காண்டலின் (ஞானா.14, 21). 2. Painted or printed cloth; 3.Coat, jacket; 4. Upper garment, cloak; 5. Body; 6. Picture, map; 7. Curtain, screen of cloth, especially around a tent; 8. Large banner; 9. Distinguishing flag, ensign; |
| படம் 2 | Paṭam, n. <>Paṭṭa. Ornamental covering for an elephant's face; யானைமுகபடாம். வெங்கதக் களிற்றின்படத்தினால் (கலிங். 89). (பிங்.) |
| படம் 3 | Paṭam, n. <>Phaṭa. 1. Cobra's hood; பாம்பின் விரிந்த தலையிடம். பைந்நாப் படவரவே ரல்குலுமை (திரவாச. 34, 1). 2. Kite made of cloth or paper; |
| படம் 4 | Paṭam, n. <>pada. Instep; பாதத்தின் முற்பகுதி. படங்குந்திநிற்றல். (சூடா. 9, 53 ). |
| படம்பிடி - த்தல் | Paṭam-piṭi-, v. tr. <>படம் +. To photograph; ஒளியின் உதவியால் கருவிகொண்டு சாயாரூபம் பிடித்தல். Mod. |
| படம்புகு - தல் | Paṭam-puku-, v. intr. <>id.+. . To put on a coat or jacket; சட்டை யிடுதல். அடிபுதை யரண மெய்திப் படம்புக்கு (பெரும்பாண்.69). |
| படம்விரி - த்தல் | Paṭam-viri-, v. intr. <>படம் +. See படமெடு-. (W.) . |
| படமக்கி | Paṭa-makki, n. See படமடக்கி (சங். அக.) . |
