Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டைத்தாறு | paṭṭai-t-tāṟu, n. <>id.+. Broad pleat of a man's cloth tucked in behind, dist. fr. mūlai-t-tāṟu; ஆடவர் உடையின் அகன்ற பின்கச்சம். |
| பட்டைத்தையல் | paṭṭai-t-taiyal, n. <>id.+. Flat seam; ஆதை முதலியவற்றை மடித்துப் பட்டையாய்த் தைக்குந் தையல். |
| பட்டைதட்டு - தல் | paṭṭai-taṭṭu-, v. tr. <>id.+. To set boiled rice in a cup-like form; அன்னத்தைக் கிண்ணத்தில் அடக்கிக் கவிழ்த்து வில்லைச் சாதமாகச் செய்தல். |
| பட்டைதாளி | paṭṭai-tāḷi, n. A kind of ray laurel, m.tr., Actinodaphne madraspatana; மரவகை. (L.) |
| பட்டைதீர் - தல் | paṭṭai-tīr-, v. intr. <>பட்டை+. 1. To be coated with stripes of red and white colour, as a temple-wall; கண்ணம் முதலியவற்றால் பட்டையடிக்கப் படுதல். 2. To give sides in cutting or polishing a gem, timber, etc.; |
| பட்டைநாமம் | paṭṭai-nāmam, n. <>id.+. Big-sized Vaiṣṇavaite mark; அகன்ற நாமம். |
| பட்டைநூல் | paṭṭai-nūl, n. <>id.+. Sewing thread wound on cards; காகித அட்டையிற் சுற்றப்பட்ட தையல் நுல். |
| பட்டைப்பறி | paṭṭai-p-paṟi, n. <>id.+. Fish-pass, fish-trap used at anicuts and kalingulas; மீன்பிடிக்க இடும் அணை. S. A. |
| பட்டைபானு | paṭṭai-pāṉu, n. Commonest wild nutmeg, l.tr., Myristica laurifolia; காட்டுச்சாதிக்காய் மரம். Kāṭar. |
| பட்டைமரம் | paṭṭai-maram, n. Bark tree. See நெட்டாவில். |
| பட்டைமுட்டு | paṭṭai-muṭṭu, n. <>பட்டை+. Striking of the ola-basket against the bottom of a well due to shallowness of water. ஆழமின்மையல் கேணி நீர் இறைக்குங்கூடை தரையிற்படுகை. (J.) |
| பட்டையடி - த்தல் | paṭṭai-y-aṭi-, v. tr. <>பட்டை+. 1. to mark the walls of houses, temples, etc., with stripes of red and white; கோயிற்சுவர், விட்டுச்சுவர்களிலும் மரம் முதலியவற்றிலும் சுண்ணாம்பு செம்மண்களால் பட்டையான நீண்ட கோடுகள் வரைதல். 2. To widen, flatten; . |
| பட்டையம் 1 | paṭṭaiyam, n. cf. paṭṭiša. Sword; வாள். |
| பட்டையம் 2 | paṭṭaiyam, n. <>U. paṭṭā. Title deed; பத்திரம். |
| பட்டையரைஞாண் | paṭṭai-y-arai-āṇ, n. <>பட்டை+. Flat ornamental band worn round the waist; இடுப்பில் அணியுப் பட்டையான அரைநாண். |
| பட்டையுரி - த்தல் | paṭṭai-y-uri-, v. tr. <>பட்டை+. To strip off bark; மரமுதலியவற்றிலிருந்து மேற்படையை நீக்குதல். |
| பட்டைவிட்டுப்போ - தல் | paṭṭai-viṭṭu-p-pō-, v. intr. <>id.+. 1. To be severe, as the sun; 1. வெயில் கடுமையாயிருத்தல். 2. To become loose, as the bark of a fire-log; |
| பட்டைவிரசு | paṭṭai-viracu, n. <>id.+. Ovate-leaved ivory wood. See குருவிச்சை. (L.) |
| பட்டோலிகை | paṭṭōlikai, n. <>paṭṭōlika. . See பட்டோலை. (யாழ்.அக.) |
| பட்டோலை | paṭṭōlai, n. <>படு-+ஓலை. 1. Ola, with the rib removed, folded and prepared for writing; 1. எழுதுதற்கு அமைக்கப்பட்ட ஒலை பண்ணிய பாவமெங்கள் பட்டோலைக் குட்படுமோ (சிவரக. கத்தரிப்பூ.31). 2. First draft of a petition, etc., especially what is written to dictation; 3. [M. paṭṭōla.] Document, edict, royal proclamation; 4. Consolidated statement of ledger accounts; 5. List, catalogue of articles, inventory; 6. Doctor's prescription; |
| பட்டோலைகொள்(ளு) - தல் | paṭṭōlai-koḷ-, v. tr. <>பட்டோலை+. To reduce to writing the utterances of the great; பெரியோர் கூறியதை எழுதுதல் ஒரு வியாக்கயானம் அருளிச்செய்து முற்றப்பட்டோலைகொண்டு (குருபரம்.538). |
| பட்டோலைச்சரக்கு | paṭṭōlai-c-carakku. n. <>id.+. Drugs, as distinguished from curry stuffs; மருந்துச்சரக்கு. (w.) |
| பட்டோலைபோடு - தல் | paṭṭōlai-pōṭu-, v. intr. <>id.+.(W.) 1. To make the draft of a writ; பத்திரத்துக்கு மூலநகல் எழுதுதல். 2. To make a list of articles; 3. To write a prescription; |
| பட்பு | paṭpu, n. <>பண்பு. Quality; குணம். மயக்கிய பட்படாவைகும் பயன்ஞாலம் (பு.வெ, 8, 34). |
