Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டினிவிடு - தல் | paṭṭiṉi-viṭu-, v. intr. <>id.+. To fast; உண்ணாதிருத்தல் இரண்டுவவு மட்டமியும் பட்டினிவிட்டு (சிவக.1547). |
| பட்டீசம் | paṭṭīcam, n. <>paṭṭiša. A kind of weapon with flat edges on either side and base of a cubit long; ஒருமுழ அளவுள்ள அடிப்பாகத்தை யும் இருக்கத்து கூரிய முகங்களையும் உடைய ஒராயுதம் (சுக்கிரநீதி.331.) |
| பட்டு 1 | paṭṭu, n. cf. பேடு. Hamlet, small town or village; சிற்றுர். (பிங்.) |
| பட்டு 2 | paṭṭu, n. cf. paṭṭa. [T. M. paṭṭu, K. paṭṭe.] 1. Silk cloth, woven silk; பட்டாடை. (பிங்) பட்டிசைந்த வல்குலாள் பாவையாள் (தேவா, 863, 2). 2. Silk yarn; 3. Sack cloth of Indian hemp; |
| பட்டு 3 | paṭṭu, n. <>T. baṭṭu. 1. A clase of penegyrists; இருந்தேத்தும் மாகதர். (சிலப். 5, 48, அரும்.) 2. Panegyric chanted before kings or other great persons; |
| பட்டு 4 | paṭṭu, n. Poinsettia, l.sh., Enphorbia pulcherrima; கள்ளிவகை. Loc. |
| பட்டுக்கயிலி | paṭṭu-k-kayili, n. <>பட்டு+. Silk cloth worn by Muhammadans; முகம்மதியர் அணியும் பட்டாடை. |
| பட்டுக்கரை | paṭṭu-k-karai, n. <>id.+. Silk stripe or border in a cloth, opp. to paḻuk-kā-k-karai; ஆடையில் பட்டாலியன்ற கரை. |
| பட்டுக்கிடப்பான் | paṭṭu-k-kiṭappāṉ, n. <>படு-+. A term of reproach, meaning one who lies dead; செத்துக்கிடப்பவன் என்று பொருள்படும் ஒருவகைச்சொல். Brāh. |
| பட்டுக்குஞ்சம் | paṭṭu-k-kucam, n. <>பட்டு+. Silk tassel; பட்டின் கற்றைத் தொங்கல். |
| பட்டுக்கூறு - தல் | paṭṭu-k-kūṟu-, v. intr. <>பட்டு+. To recite a panegyric; கட்டியங்கூறுதல். Loc. |
| பட்டுச்சோளாங்குறிச்சி | paṭṭu-c-cōḷāṅ-kuṟicci n. <>பட்டு+. A kind of silk saree; பட்டுப்புடைவகைவகை. |
| பட்டுத்தரி - த்தல் | paṭṭu-t-tari-. v. tr. <>படு-+. To suffer; துன்பத்தைப் பொறுத்தல். (W.) |
| பட்டுத்தெளி - த்தல் | paṭṭu-t-teḷi-, v. <>id.+. tr. To learn by experience; அனுபவத்தினாலறிதல். --intr. See பட்டுத்தேறு-. |
| பட்டுத்தேறு - தல் | paṭṭu-t-tēṟu-, v. intr. <>id.+. 1. To recover strength after severe illness; நோய்நீங்கி உடம்பு வலிபெறுதல். 2. To be fortified by experience; |
| பட்டுநூல் | paṭṭu-nūl, n. <>பட்டு+. Silk thread; பட்டாலாகிய மெல்லிய நூல் பருத்திநூல் பட்டுநூ லமைத்தாடை யாக்கலும் (சிலப்.5, 16, உரை). |
| பட்டுநூலி | paṭṭu-nūli, n. <>பட்டுநூல். Dialect of the Saurāṣṭras சௌராஷ்டிரர்பேசும் பாஷை. |
| பட்டுநூற்காரர் | paṭṭu-nūṟ-kārar, n. <>id.+. 1. Silk-weavers; பட்டுநெய்வோர். (w.) 2. The Seurāṣṭra caste. See |
| பட்டுநூற்பூச்சி | paṭṭu-nūṟ-pūcci, n. <>id.+. See பட்டுப்பூச்சி. (யாழ்.அக.) |
| பட்டுப்பட்டாவளி | paṭṭu-p-paṭṭāvaḷi, n. <>பட்டு+. Silk and other kinds of valuable stuff; பட்டு முதலிய விலையுயர்ந்த ஆடைவகைகள். (w.) |
| பட்டுப்படி - தல் | paṭṭu-p-paṭi-, v. intr. <>படு-+. To submit to an order; கட்டளைக்கு உட்படுதல். Loc. |
| பட்டுப்பணி - தல் | paṭṭu-p-paṇi-, v. intr. <>id+. To become humble after suffering; அனுபவத்தின்மேல் அடக்கமுண்டாதல். Loc. |
| பட்டுப்பருத்தி | paṭṭu-p-parutti, n. <>பட்டு+. Red silk-cotton. See இலவம். (சங்.அக.) |
| பட்டுப்பழம் | paṭṭu-p-paḻam, n. perh. id.+. Gaub. See காட்டத்தி, 2. (L.) |
| பட்டுப்பாய் | paṭṭu-p-pāy, n. <>id.+. [M. paṭṭupāvi.] Coloured mat, generally used on marriage occasions; கலியாணங்களில் உபயோகப்படுத்தப்படும் சாயமேற்றிய சோரைப்பாய் வகை. |
| பட்டுப்புடைவை | paṭṭu-p-puṭaivai, n. <>id.+. Silk saree; பட்டுச்சீலை. |
| பட்டுப்புழு | paṭṭu-p-puḻu, n. <>id.+. See பட்டுப்பூச்சி. |
| பட்டுப்பூச்சி | paṭṭu-p-pūcci, n. <>id.+. [T paṭṭupurugn.] Silkworm, Bombav mori; பட்டுநுல் உண்டாக்கும் புச்சிவகை. |
| பட்டுப்பூச்சிமரம் | paṭṭu-p-pūcci-maram, n. <>பட்டுப்பூச்சி+. White mulberry, m.tr., Morus alba; பட்டுப்பச்சிகளுக்கு உணவாக உதவும் இலைகொண்ட மரவகை. |
| பட்டுப்போ - தல் | paṭṭu-p-pō-, ā utr. <>படு-+. 1. To wither, fade; உலர்த்துபோதல். மரம் பட்டுப்போயிற்று. 2. To die; |
