Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டியூண் | paṭṭi-y-ūṇ, n. <>id.+. Hire for folding a flock in a field to manure it; எருவுக்காக ஆடுமாடுகளை மறித்துவைத்தற்குக் கொடுகுங் கூலி. (J.) |
| பட்டியெடு - த்தல் | paṭṭi-y-eṭu, v. intr. <>id.+. To collect poundage; கொண்டித்தண்டம் வாங்குதல். |
| பட்டில் | paṭṭil, n. See பட்டியல். Nā. . |
| பட்டிலுப்பை | paṭṭiluppai, n. Date plum, m. tr., Diospyros sapota; மரவகை. |
| பட்டிவழி | paṭṭi-vaḻi, n. prob. பட்டி4+. Lands of a village divided into lots with reference to the quality of the soil and assigned to holders; கிராமத்தில் தரவாரியாகப் பங்கிட்ட நிலம். |
| பட்டிவாய் | paṭṭi-vāy, n. <>பட்டி1+. Person of loose tongue; வாய்க்குவந்தவாறு பேசுபவ-ன்-ள். |
| பட்டிவிடுதி | paṭṭi-viṭuti, n. Cessation of rain in the evening அந்திக்காலத்தில் மழைவிடுகை. (யாழ். அக.) |
| பட்டிவைரி | paṭṭi-vairi, n. <>பட்டி1+. Watchman to keep off beasts and thieves from fields; வயலைப் பட்டிமேயாதபடி காப்பவன். |
| பட்டினச்சேரி | paṭṭiṉa-c-cēri, n. <>பட்டினம்+. Hamlet of fishermen; நுளையர் வாழிடம். |
| பட்டினசுட்டான்நாக்கு | paṭṭiṉa-cuṭṭāṉ-nākku, n. A sea-fish, rich brown, attaining 8 in. in length, Psendorhombus tricellatus; எட்டு அங்குலநீளம் வளர்வதும் செம்பழுப்பு நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. |
| பட்டினத்துப்பிள்ளையார் | paṭṭiṉattu-p-piiḷaiyār, n. <>பட்டினம்+. A famous poet of Kāviri-p-pūm-paṭṭiṉam who renounced the world and became a saint, one of the authors of Patiṉorān-tirumuṟai; காவிரிப்பூம்பட்டினத்தவரும் பதினொராந்திருமுறை ஆசிரியருள் ஒருவரும் முற்றத்துறந்தவருமாகிய ஒரு பெரியார். |
| பட்டினத்துப்பிள்ளையார்பாடல் | paṭṭinattu-p-piḷḷaiyār-pāṭal, n. <>பட்டினத்துப்பிள்ளையார்+. Poctic works of paṭṭinattu-p-piḷḷaiyār; பட்டினதுப்பிள்ளையார் இயற்றிய பாடாற்றொகுதி. |
| பட்டினப்பாக்கம் | paṭṭiṉa-p-pākkam, n. <>பட்டினம்+. The part of Kāviri-p-pūm-paṭṭiṉam away from the sea occupied by its king and nobles; அரசாரும் மேன்மக்களும் வாழ்ந்து வந்த புகார்நகரின் ஒரு பகுதி. பாடல்சால் சிறப்பிற்பட்டினப் பாக்கமும் (சிலப். 5, 58). |
| பட்டினப்பாலை | paṭṭiṉa-p-pālai, n. <>id. +. A poem on the Cōḻa king Karikāṟperu-vaḷattāṉ by Kaṭiyalūr-uruttiraṅ-kaṇṇaṉār, one of Pattu-p-pāṭṭu; பத்துப்பாட்டுள் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியபாட்டு. |
| பட்டினம் | paṭṭiṉam, n. cf. paṭṭana. Maritime town; நெய்தனிலத்தூர். பட்டினம் பதாரின் (சிறுபாண்.153). 2. Kāviri-p-pūm-paṭṭiṉam; 3. Small town; 4. Body; |
| பட்டினவச்சேரி | paṭṭiṉava-c-cēri, n. <>பட்டினவன்+. See பட்டினச்சேரி. |
| பட்டினவன் | paṭṭiṉavaṉ, n. <>பட்டினம். Fisherman, as dwelling in a maritime town; பரவசாதியான். (சிபப்.5, 25, உரை.) |
| பட்டினி 1 | paṭṭiṉi, n. [M. paṭṭiṇi.] Fasting; abstinence; starvation; உண்வுகொள்ளாமை. பட்டினிவைக் (புறநா.371). |
| பட்டினி 2 | paṭṭiṉi, n. <>bhaṭṭinī. (யாழ். அக.) 1. Queen; இராணி. 2. Brahmin woman; |
| பட்டினிகா - த்தல் | paṭṭiṉi-kā-, v. intr. <>பட்டினி+. 1. To starve, fast; உணவின்றியிருத்தல். 2. To go without food at a house of mourning; |
| பட்டினிகிட - த்தல் | paṭṭiṉi-kiṭa-, v. intr. <>id.+. See பட்டினிகா-. Nā, |
| பட்டினிதவிர் - த்தல் | paṭṭuṉi-tavir-. v. intr. <>id.+. To break fasting at a funeral house; சாவிட்டில் பட்டினிநீங்கி யுண்ணுதல். Loc. |
| பட்டினிநோன்பிகள் | paṭṭiṉi-nōṉpikal, n. <>id.+. Jaina ascetics who fast on new and full moon days, the eighth day of the lunar fortnight and whenever they meet with obstacles; இரண்டு உவாவும், அட்டமியும், முட்டுப்பாடும் உண்ணாதவிரதியரான சைனத்துறவிகள். பட்டினி நோன்பிகள் பலருபு மனையில் (சிலப்.15, 164). |
| பட்டினிப்பண்டம் | paṭṭiṉi-p-paṇam, n. <>id.+. 1. Simple food taken during the mourning period; சாவீட்டில் உண்ணும் உணவு. 2. Articles of food sent to a house in mourning; |
| பட்டினிபொறு - த்தல் | paṭṭiṉi-poṟu-, v. intr. <>id.+. To suffer from hunger; பசியால் வருந்துதல். (J.) |
| பட்டினிபோடு - தல் | paṭṭiṉi-pōṭu-, v. <>id.+. tr. To starve a person; பிறரைப் பட்டினியாயிருக்கச் செய்தல். To abstain from food;ṟ |
