Word |
English & Tamil Meaning |
|---|---|
| படிகாரம் | paṭikāram, n. See படிக்காரம். (சங். அக.) . |
| படிகாரன் | paṭikāraṉ, n. <>pratīhāra. Gatekeeper; வாயில்காப்பாளன்.படிகாரிரெம் வரவு சொல்லுதிர் (கம்பரா. பள்ளி. 1). |
| படிகால் | paṭ-kāl, n. <>படி +. Generation; தலைமுறை. ஏழேழ்படிகா லெமையாண்ட பெம்மான் (தேவாம். 1086, 9). |
| படிகாலி | paṭ-kāli, n. <>படி -+. A flatfooted person; தட்டையாய்ப் படிந்திருக்கும் பாதமுடையவ-ன்-ள். Nā. |
| படிகை | paṭikai, n. prob. id. 1. Howdah and trappings of an elephant; 1. யானைமேலிடும் தவிசு.பரும முதுகிடு படிகையும் (கம்பரா. அதிகா 132). 2. East Indian rosebay. See |
| படிச்சந்தம் | paṭiccantam, n. <>prati-c-chanda. Image, figure; ஒன்றைப்போன்ற வடிவு. படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே (திருக்கோ.78). |
| படிச்சுருக்கு | paṭ-c-curukku, n. <>படி +. A stringed bag containing weights, used by gold-smiths; தட்டார் படிக்கற்களையிட்டுவைக்குஞ்சுருக்குப்பை. Nā. |
| படிச்செலவு | paṭ-c-celavu, n. <>id. +. Daily expense; தினசரிச்செலவு. Colloq. |
| படிசம் | paṭicam, n. <>badiša. Fish-hook, angling instrument; தூண்டில். (W.) |
| படிசியேற்றம் | paṭici-y-ēṟṟam, n. perh. படி -+ஏற்றம். Small picotta which can be worked by a single person treading on it; சிற்றேற்றம். (C. G.) |
| படிசு | paṭicu, n. <>படி. 1. State, condition, quality; 1. நிலைமை. ஒருபடிசாயிருக்கிறது. (W.) 2. Due proportion; |
| படித்தரம் | paṭ-t-taram, n. <>id. +. (w.) 1. [K. paditara.] Daily allowance, as to a temple; 1. கோயில் முதலியவற்றுக்கு உதவும் தினசரிக்கட்டளை. 2. [M. paṭittaram.] Rule, regulation; 3. Middling quality; |
| படித்தனம் | paṭ-taṉam, n. <>id. +. See படித்தரம், 1. ஒருநாளையிலே படித்தனத்துக்கு அமுது படி (கோயிலொ. 62). |
| படித்திரம் | paṭittiram, n. <>bhaṭitra. Roast meat; சூட்டிறைச்சி. (பிங்.) |
| படித்துறை | paṭi-t-tuṟai, n. <>படி +. Bathing ghat provided with steps; படிக்கட்டுக்களமைந்த நீர்த்துறை.அச்சிவாலய மறு படித்துறை (குற்றா. தல கவுற்சன. 63). |
| படிதம் 1 | paṭitam, n. prob. paṭhita. cf. படுதம். 1. Dancing; 1. கூத்து. (பிங்.) கடுவ னிருங்கழைப்படிதம் பயிற்றுமென்ப (யாப். வி. பக். 190). 2. Eulogy; songs of praise, hymns; |
| படிதம் 2 | paṭitam, n. perh. prathita. A kind of ruby; மாணிக்கவகை விந்தமும் படித்துமும் (சிலப்.14, 186). |
| படிப்படி | paṭi-p-paṭi, adv. <>படி +. See படிப்படியாய். நான்மறை முற்றும் படிப்படி சொன்னதாம் (உபதேசகா. சிவபுண்ணி. 19). |
| படிப்படியாய் | paṭi-p-paṭi-y-āy, adv. <>id. +. Step by step, gradually; சிறுகச்சிறுக. Colloq. |
| படிப்படை | paṭi-p-paṭai, n. <>id. +. Mercenary force. See கூலிப்படை. கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇ (பெருங்க. மகத. 24, 39). |
| படிப்பணம் | paṭi-p-paṇam, n. <>id. +. Batta; தினசரிச் செலவுக்குக் கொடுக்கும் பணம். |
| படிப்பனவு | paṭippaṉavu, n. <>படி -. 1. Learning, study; படிப்பு. (J.) 2. Teaching; |
| படிப்பனை | paṭṭippaṉai, n. <>id. (w.) 1. See படிப்பு, 1, 2, 4. . 2. Proficiency, competency; |
| படிப்பாளி | paṭippāḷi, n. <>படிப்பு +. A man of learning; கல்விவல்லவன். Colloq. |
| படிப்பி - த்தல் | paṭippi-, 11 v. tr. Caus. of படி-. To teach; கற்பித்தல். |
| படிப்பினை 1 | paṭippiṉai, n. <>படி-. See படிப்பனை. (யாழ். அக.) . |
| படிப்பினை 2 | paṭippiṉai, n. perh. படி-. Lead ore; வங்கமணல். |
| படிப்பு | paṭippu, n. <>படி-. 1. Learning, study; கல்வி. 2. Reading, recitation; 3. Chanting, singing; 4. Instruction, teaching; 5. Scheme, subtlety, contrivance; |
| படிப்புக்காரன் | paṭippu-k-kāraṉ, n. <>படிப்பு +. (J.) 1. See படிப்பாளி. . 2. Person who attends a temple to hear the purāna chanted; 3. Cunning, scheming, subtle person; |
| படிப்புரை | paṭi-p-purai, n. <>படி +. Pial; ஒட்டுத்திண்ணை. Nā. |
