Word |
English & Tamil Meaning |
|---|---|
| படிப்புறம் | paṭi-p-puram, n. <>id. +. Land on free tenure, bestowed on temple-priests; அர்ச்சனாபோகம். பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து (சிலப். 30. 151). |
| படிபாதி | paṭi-pāti, n. <>id. +. See படிக்குப்பாதி. (W.) . |
| படிமக்கலம் | paṭima-k-kalam, n. <>படிமம் +. 1. Mirror; 1. முகம்பார்க்குங் கண்ணாடி. (தீவா.) தாய் சிறுகாலை படிமக்கலத்தொடும் புக்காள் (இறை. 14, 95). 2. Articles of offering; |
| படிமகன் | paṭi-makaṉ, n. <>படி +. Mars, as the son of Earth; [பூமியின் புதல்வன்] செவ்வாய். வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5). |
| படிமடங்கு - தல் | paṭ-maṭaṅku-, v. intr. <>பணி+. To be free from work. See பணிமடங்கு-. Colloq. |
| படிமத்தாள் | paṭimattāḷ, n. <>படிமம். Temple-priestess divinely inspired and possessed of oracular powers தேவராட்டி. (பிங்.) குறக்கொலப் படிமத்தாளை நேர்நோக்கி (பெரியபு. கண்ணப்ப. 49). |
| படிமத்தோன் | paṭimattōṉ, n. <>id. Temple-priest divinely inspired and possessed of oracular powers; தேவராளன். (திவா.) |
| படிமதாளம் | paṭima-tāḷam, n. (Mus.) A variety of time-measure, one of nava-tāḷam, q. v.; நவதாளத்தொன்று. (திவா.) |
| படிமம் | paṭimam, n. <>Pkt. padimā <>pratimā. 1. Image; பிரதிமை.படிமம்போன் றிருப்ப நோக்கி (சிவக. 2642). 2. Example, model; 3. Form, shape; 4. Guise of an ascetic; 5. Penance, austerities; 6. Temporary possession by a spirit; 7. See படிமக்கலம். தனது நிழல் பற்ற வுருகும் படிமத்தாள் (திருவாரூ. 342). 8. Purity; |
| படிமரவை | paṭ-maravai, n. <>படி +. A wooden vessel in which weights are kept by merchants; வியாபாரிகள் படிக்கற்களை யிட்டுவைக்கும் மரவை. |
| படிமவிரதம் | paṭima-viratam, n. <>படிமம் +. The vow of a Brahmacārin; பிரமசரிய விரதம் படிம விரதமொடு பயிற்றிய நல்லியாழ் (பெருங். வத்தவ, 3, 82). |
| படிமவுண்டி | paṭima-v-uṇṭi, n. <>id. +. Food taken after fasting; நோற்றுப் பட்டினிவிட்டுண்ணும் உணவு. பார்ப்பன முதுமகன் பதிமவுண்டியன் (மணி. 5, 33). |
| படிமா | paṭmā, n. <>Pka. padi-mā<>pratimā. similarity, likeness; ஒப்பு. அது படிமாவா மலிவித்தார் (கோயிற்பு. நட. 43). |
| படிமாத்தாள் | paṭimāttāḷ, n. See படிமத்தாள். (யாழ். அக.) . |
| படிமானம் | paṭimāṉam, n. <>படி-. 1. Tractableness, docility; அமைவு. 2. Alleviation; 3. Close fitting of planks, in carpentry; |
| படிமுழுதிடந்தோன் | paṭi-muḻutiṭantōṉ, n. <>படி + மழுது + இட-. Viṣṇu, as having lifted the whole earth; [நிலமுழுதும் பெயரத் துக்கினோன்] திருமால். (பிங்.) |
| படிமுறை | paṭi-muṟai, n. <>படி +. 1. Regular course; சோபானக் கிரமம். பதிமுறையானன்றி இவ்வொரு பிறவியிற் செய்த தவந்தானே யமையாது (சி. சி. 8, 1). 2. The fixed day or term for which extra allowance is granted; |
| படிமேடை | paṭi-mēṭai, n <>id. +. Gallery; படிப்படியா யுயர்ந்தமைந்த ஆசனவரிசை. Mod. |
| படிமை | paṭimai, n. <>Pkt. padimā<>pratimā. 1. See படிமம், 3. கட்டளைப் படிமையிற் படியாது (சீவக. 2752). . 2. See படிவம், 1. (தொல். பொ. 50, இளம்பூ.) 3. See படிமம், 5. பல்புகழ் நிறுத்த படிமையோனே (தொல். பாயி.). 4. See படிமம், 1. ஏனோர் படிமைய (தொல். பொ. 30, இளம்பூ.). |
| படியகம் | paṭiyakam, n. See படிக்கம், 1. படியக மிரண்டு பக்கமும் (சீவக. 2472). . |
| படியச்சு | paṭi-y-accu, n. <>படி +. [O. K. padiyaccu.] Model, prototype; நேரொப்புடையது படியச்சனைய வுதாரண நோக்கினர். (பி. வி. 50). |
| படியப்பாய் - தல் | paṭiya-p-pāy-, v. intr. <>படி -+. To sink, as a ship; கப்பல் முழ்குதல். (W.) |
| படியப்பார் - த்தல் | paṭiya-p-pār-, v. <>id. +. (W.) tr. 1. To bid too low a price; to undervalue; விலைகுறைத்தல். 2. To join boards, in carpentry; To be ready to sink; |
