Word |
English & Tamil Meaning |
|---|---|
| படு 3 | paṭu, n. <>படு-. 1. Toddy; கள். (திவா). படுவை வாயா லுண்ணாமல் (சேதுபு.துரா.40). 2. Cluster, bunch of flowers or fruits; 3. Tank, pond; 4. Deep pool; 5. (Mus.) A secondary meldoy-type of the marutam class; 6. Salt; 1. Big; great; 2. Cruel; 3. Base, low; |
| படு 4 | paṭu, n. <>paṭu. 1. Clever, skilful person; கெட்டிக்காரன். அவன் வெகு படு. 2. Sound intellect; 3. Goodness, excellence; |
| படுக்கவை - த்தல் | paṭukka-vai-, v. tr. <>படு-+. 1. To lay down, as a child to sleep; கிடக்கும்படி செய்தல். 2. To overthrow, defeat; 3. To ruin; |
| படுக்களம் | paṭu-k-kaḷam, n. <>id. +. Sleeping place, bed; பதுக்கும் இடம். Tinn. |
| படுக்காங்கொள்ளி | paṭukkāṇ-koḷḷi, n. See படுக்காளிமாடு. (அபி. சிந். 788.) . |
| படுக்காளி | paṭukkāḷi, n. perh. படு-+ஆள்-. See படுக்காளிப்பயல். . |
| படுக்காளிப்பயல் | paṭukkāḷi-p-payal, n. <>படுக்காளி +. 1. Rascal; போக்கிரி. (அருட்பா, vi, திருமு. தான்பெற்ற. 5, 707). 2. Liar; |
| படுக்காளிமாடு | paṭukkāḷi-māṭu, n. <>id. +. A recalcitrant bull; வேலைசெய்யாத மாடு. Colloq. |
| படுக்காளிவிசேஷம் | paṭukkāḷi-vicēṣam, n. <>id. +. Fable, story invented for a purpose; கட்டுக்கதை. (W.) |
| படுக்கெனல் | paṭukkeṉal, n. An onom. expression; See பொடுக்கெனல். Loc. |
| படுக்கை | paṭukkai, n. <>படு-. 1. Lying down; சயனிக்கை. 2. Bed, bedding, couch, sleeping place litter, lair; 3. Straw or olas or boards placed in a boat to protect goods from the bilge-water; 4. Olas or straw laid down as a bed on which to place grain, tobacco, palmyra fruit, earthen ware, etc.; 5. Anvil; 6. One-day festival, opp. to koṭai; 7. Offerings laid before a deity; |
| படுக்கைப்பற்று | paṭukkai-p-paṟṟu, n.<>படுக்கை +. 1. Dowry; சீதனம். தன் ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப்பற்றாக்கி. (ஈடு, 4, 1, 5) 2. Women's apartment in a palace, zenana; |
| படுக்கைப்புண் | paṭukkai-p-puṇ, n. <>id. +. Bed-sore; பெருங்கிடையால் நோயாளிக்கு உண்டாம் புண். (M. L.) |
| படுக்கைமரம் | paṭukkai-maram, n <>id. +. Boards laid loosely under the cargo of a boat; தோணியிற் பண்டாங்களை வைக்குமாறு அமைக்கும் பலகை. (W.) |
| படுக்கையறை | paṭukkai-y-aṟai, n. <>id. + Bedroom; பள்ளியறை. |
| படுக்கைவீடு | paṭukkai-vīṭu, n. <>id. +. See படுக்கையறை. (W.) . |
| படுகட்டை | paṭu-kaṭṭai, n. <>படு-+. 1. Dead stump of tree, dry log; உலர்ந்த மரத்துண்டு. (W.) 2. Old person fit for nothing; |
| படுகண் | paṭu-kaṇ, n. <>id. +. See படுகண்ணி. படுகண்ணும் கொக்குவாயும் உட்படா நிறை (S. I. I. ii, 157). |
| படுகண்ணி | paṭu-kaṇṇi, n. <>id. +. The eye in which the hook of an ornament is fastened; ஆபரணத்தில் கொக்குவாய் மாட்டப்படும் உறுப்பு கொக்குவாயும் படுகண்ணியும் போலே (திவ் பெரியதி, 5, 4, 7, வ்யா.). |
| படுகர் 1 | paṭukar, n. <>id. 1. Path of ascent and descent; இழிந்தேறும் வழி. (பிங்.) ஆரிப்படுகர்ச் சிலம்பு (மலைபடு. 161). 2. Pit, hole, hollow; 3. Tank; 4. Rice field; 5. Agricultural tract; |
