Word |
English & Tamil Meaning |
|---|---|
| பணவம் | paṇavam, n. <> paṇava. A small single-headed drum; தம்பட்டம். (திவா.) பணவந்து£ரி (கம்பரா. பிரமாத்திர. 5). |
| பணவன் | paṇavaṉ, n. <> பணம். Servant; வேலைக்காரன் (W.) |
| பணவிடை | paṇa-v-iṭai, n. See பணவெடை. (கணக்கதி. பக். 28.) . |
| பணவெடை | paṇa-v-eṭai, n. <> பணம் +. Goldmith's weight = 4 kuṉṟi-maṇi = 1/8 varākaṉeṭai; குன்றிமணி அல்லது அரைக்கால் வராகனெடையுள்ள பொன்னிறை. (W.) |
| பணவை | paṇavai, n. 1. Watch-tower; loft பரண். ஆசினிப்பணவை யேறி (கலித். 41). 2. Eagle; 3.Devil; 4. Measure; |
| பணவொடுக்கு | paṇa-v-oṭukku, n. பணம்+. Remittance of money, as into a treasury; பணஞ்செலுத்துகை. (j.) |
| பணறு | paṇaṟu, n. See பணர் (யாழ். அக.) . |
| பணாகரம் | paṇākaram n. <>phaṇākara. Serpent; பாம்பு. (சங்.அக்) |
| பணாங்கனை | paṇāṅkaṉai, n. <>paṇa + aṇganā. Prostitute; வேசி. (யாழ்.அக.) |
| பணாடவி | paṇāṭavi, n. <>phaṇā + aṭavī. Crowed of expanded hoods, as of the divine serpent āticēṭaṉ பாம்புப்படத்தின் கூட்டம். ஆயிரம் பணாடவி யருந்தவத் தொருவன் (கல்லா.41, 7) |
| பணாதரம் | paṇātaram, n. <>id. + dhara. See பணாகரம்.பணாதரேச்சுரப் படலம். (காஞ்சிப்பு.) . |
| பணாமகுடம் | paṇā-makuṭam, n. <>id. + makuṭa. The expanded hood of a cobra formed into a crown; பாம்பின் படமுடி |
| பணாமணி | paṇā-maṇi, n. <>id. +. 1.The gem in cobra's head; நாகரத்தினம். பாரகஞ் சுமந்த பாம்பின் பணாமணி பறிக்க வேண்டின் (கம்பரா. மகுடபங். 40.) 2. A kind of ruby; |
| பணாயிதம் | paṇāyitam, n. <>paṇāyita. Bowing, making obeisance; வணங்குகை. (யாழ்.அக.) |
| பணாயை | paṇāyai, n. <> paṇāyā. (யாழ். அக.) 1.Market-place; கடைவீதி. 2. Business; 3. Profit in a transaction; |
| பணி 1 - தல் | paṇi-, 4 v. cf. pan. [M. paṇiyuka] intr. 1. To be low in height, as a house, a roof or a branch; to be short, as a person or post; to be lowered; தாழ்தல். பணியியரத்தைநின் குடையே (புறநா.6). 2. To be humble; to be submissive, as in speech; 3. To decline, as a heavenly body; to descend lower, as a bird; 4. To spread; 5. To become inferior; 6. To fall, as prices, wages; 7. To be reduced in circumstances; 1. To bow to, make obeisance to; 2. To eat; |
| பணி 2 - த்தல் | paṇi-, 11 v. tr. Caus. of பணி-. 1. To lower or lead down, degrade, humble; தாழ்த்துதல். வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப (பு.வெ4, 9, கொளு). 2. To reduce, as price; 3. To set foot on, tread; |
| பணி 3 | pani, n. <>பண்ணு-. [M. pani.] 1. Act, action, performance; செயல். 2. Work, service, trade, art, pursuit; 3. Services to a deity, as by a devotee; services to a temple, as construction of buildings, etc.; 4. Bowing, reverencing; 5. Expanding, spreading; 6. Difficult task; 7. Object of enjoyment; 8. Jewel; ornament; 9. Decoration with flowers; 10. Silk cloth; 11. Drum; 12. Workmanship; 13. Row, class, order; |
| பணி 4 - த்தல் | pani, 11 v. tr. cf. bhan. [M. panikka.] 1. To say, speak, declare, user of a superior; அருளிச்செய்தல். வாய்திறந் தொன்று பணித்துண்டு (திவ்.பெரியதி.2, 8, 9); 2. To order, command, direct; 3. To give, bestow; |
| பணி 5 | pani, n. <> பணி4 -. 1. Saying, word; சொல். (பிங்) பல்லிருங் கூந்தல் பணிநோனாள் (கார் நாற்.24); 2. Command, order, direction; 3. Rule; 4. Profession of teaching archery and other allied arts; 5. Gift; |
