Word |
English & Tamil Meaning |
|---|---|
| பணித்தட்டார் | paṇi-taṭṭār, n. <>id. +. Goldsmiths; பொற்கொல்லர். பணித்தட்டார் பணி பண்ணுமிடங்களில் (சிலப். 6, 135, உரை). |
| பணித்திறக்கு | paṇittiṟakku-, v. tr. <>பணி2-+இறக்கு-. To put down, as a load ; கீழிறக்கி வைத்தல். (W.) |
| பணித்துக்கட்டு - தல் | paṇittu-k-kaṭṭu, v.tr.<>id.+.(W.) To build low, as a wall or a house; தாழக்கட்டுதல். To tie a garment so that it may hang low; |
| பணித்தூசு | paṇi-t-tūcu, n. <>பணி3+. Embroidered cloth ; அலங்காரச்சீலைவகை. (பிங்.) |
| பணிதம் | paṇitam, n. <>paṇita. Stake in gambling; பந்தயப்பொருள். பாய வகையாற் பணிதம் பலவென்றாள். (பு.வெ.12, வென்றிப்.16) |
| பணிதானம் | paṇitāṉam, n. <>pra-ṇidhāna. Prayer with profound religious meditation; தியானபூர்வகமாகத் தோத்திரஞ்செய்கை. (யாழ்.அக்) |
| பணிதி 1 | paṇiti, n. cf. பணதி. 1. Work, structure; வேலை. செங்கற்பணிதி (கோயிலொ.93). 2. Jewel, ornament; 3. Adorning, decoration; 4. perh. paṇita. A praiseworthy thing; 5. Insolence of wealth; |
| பணிதி 2 | paṇiti, n. <>bhaṇiti, Word, speech ; வார்த்தை. ஸ்நிக்தமான பணிதியாலும் (ஈடு, 1, 4, 7) . |
| பணிந்தவன் | paṇintavaṉ, n. <>பணி 1-. Dwarf; குள்ளன். (W.) |
| பணிநர் | paṇinar, n. <>பணி. Attendants, servants ; ஏவல் செய்வோர். வேந்தன் பணிநரைக்காண்மின் (பெருங்.உஞ்சைக்.40, 244) . |
| பணிப்பகை | paṇi-p-pakai, n. <>பணி +. The white-necked kite, as the enemy of the snake ; [பாம்பின் சத்துரு] கருடன். பணிப்பகை முன்னுழல் பரிசு (காஞ்சிப்பு. நகர.98). |
| பணிப்படுத்து - தல் | paṇi-p-paṭuttu-, v. tr. <> பணி+. 1. To adorn; அலங்கரித்தல். (யாழ். அக.) 2. To repair; 3. To make, manufacture; 4. To work into shape; |
| பணிப்பு 1 | paṇippu, n. <>பணி-. Lowness, as of tone; தணிவு. பணிப்புற வரற்றின பலப்பல பதங்கம் (இரகு. தேனு, 9). |
| பணிப்பு 2 | paṇippu, n. <>பணி-. Command, order ; ஏவல். பணிப்பின்றியும் (பு.வெ. 1, 1, கொளு) . |
| பணிப்பூட்டு | paṇi-p-pūṭṭu, n. <> பணி +. Lock of a clasp in an ornament ; ஆபரணக்கொக்கிப்பூட்டு. |
| பணிப்பெண் | paṇi-p-peṇ, n. <>id. +. [M. paṇippeṇ.] Maid-servant ; குற்றேவன்மகள் . |
| பணிப்பொத்தி | paṇi-p-potti, n. perh. id.+. A garment of ancient times ; துகில்வகை. (சிலப்.14, 108, உரை.) . |
| பணிப்பொன் | paṇi-p-poṉ, n. <>id. +. Gold in the form of ornaments, opp. to kaṭṭi-p-poṉ; ஆபரணவடிவான பொன், கட்டிப்பொன் போலே அவன், பணிப்பொன்போலே திருநாமம் (திவ். திருப்பா. 3, 60, வ்யா.) . |
| பணிபதம் | paṇi-patam, n. <>பணி-+. Humble, submissive language ; தாழ்ந்த சொல். பலநாள் பணிபதமுங் கூறி (பு. வெ.12, வென்றிப். 11) . |
| பணிபோ - தல் | paṇi-pō-, v. intr. <>பணி+. To be engaged fully in a single pursuit ; ஒரேகாரியமாயிருத்தல். இதுவே பணிபோந்திருக்கு மிறே (ஈடு, 3, 7, 4) . |
| பணிமக்கள் | paṇi-makkaḷ, n. <>id. +. Servants; temple servants ; தொண்டுபுரிவோர். பணிமக்கள் சட்டரைப் பிழைக்கப்பேசுவார் ஒருகாசு தண்டப்படுவது (T.A. S. i, 9). |
| பணிமடங்குதல் | paṇi-maṭaṅkutal, n. <>id. +. Closing of the work ; வேலைமுடிகை. கோயில் பணிமடங்கினால் மணியெறிந்து விடுதல் இயல்பு (மல்லைப். 50, உரை). |
| பணிமாறு - தல் | paṇi-māṟu-, v. tr. <>id. +. To render service to a deity or a superior person, as by waving a fan, carrying incense, blowing a trumpet, etc.; தொண்டு செய்தல். சாமரைகள் பணிமாற (உத்தரரா. இலவண.110) . |
| பணிமுட்டு | paṇi-muṭṭu, n. <>id. +. (T. paṇimuṭṭu.] Tools; instruments; requisites ; தளவாடம் . |
| பணிமுடக்கம் | paṇi-muṭakkam, n. <>id. +. Labourer's strike ; வேலைநிறுத்தம் .Nā. |
| பணிமூப்பிமார் | paṇi-mūppimār, n. <>id. +. • Temple dancing-girls ; தேவரடியார். பணிமூப்பிமாரில் ராசராசீச்சுரத்துப் பதியிலாரில் (S. I. I. v, 297). |
| பணிமொழி 1 | paṇi-moḻi, n. <>பணி-+. 1. See பணிபதம். . 2. Low, gentle speech, as of a woman; 3. Woman; |
