Word |
English & Tamil Meaning |
|---|---|
| பணிமொழி 2 | paṇi-moḻi, n. <> பணி-+. Word of command ; கட்டளை. படையுள் படுவோன் பணிமொழி கூற (சிலப் 8, 13). |
| பணியல் | paṇiyal, n. <>பணி-. Worship, obeisance ; வழிபாடு. (சங். அக.) |
| பணியறு - த்தல் | paṇi-y-aṟu-, v. intr. <>பணி+. To be free from all egoistic actions ; நன்செயலற்று நிற்றல். பற்றடங்கலும் விடுமாகில். . . பணியறுத்தல் என்கிற நிலைக்கு . . . துணியாக நிற்கும் (திருக்களிற்றுப். 39, உரை) . |
| பணியார் | paṇiyār, n. <>பணி-+ஆ neg. Foes, enemies ; பகைவர். பணியார் பகையரணம் வேண்டி லெளிதென்றான் வேந்து (பு. வெ, 6, 12) . |
| பணியாரக்குடம் | paṇiyāra-k-kuṭam, n. <> பணியாரம்+. A pot full of cakes, being one of the marriage presents commonly given by the bride's party ; மணமகள் வீட்டாரால் மணமகன் வீட்டுக்கு வரிசையாக அனுப்பப்படும் பணியாரம் நிறைந்த குடம். Loc. |
| பணியாரச்சட்டி | paṇiyāra-c-caṭṭi, n. <>id. +. Pot for preparing cakes ; பணியாரஞ்சுடுஞ்சட்டி. |
| பணியாரத்துத்தி | paṇiyāra-tutti, n. Common evening mallow . See பெருந்துத்தி. . |
| பணியாரம் | paṇiyāram, n. <>paṇyā. [T. paṇyāramu.] Cakes, pastry, fritters ; தின்பண்டம். பணியாரந் தோசை முன்னோனுக் கிட்டேத்தி (தனிப்பா, i, 185, 12). |
| பணியிறை | paṇi-iṟai, n. <>பணி+. āticēṭaṉ, the king of serpents; ஆதிசேடன். பணியிறையுஞ் சொலவரிதால் (பிரபுலிங். சூனியசிங்கா தனத்தி. 4) . |
| பணியினாக்கு | paṇiyiṉākku, n. prob. id.+ நாக்கு. A common climber with many fleshy roots . See தண்ணீர்விட்டான். (மலை.) |
| பணியோள் | paṇiyōḷ, n. <>பணி. Maid-servant ; பணிப்பெண் தன்புடைநின்ற பணியோள் (பெருங். உஞ்சைக். 34, 46). |
| பணிலம் | paṇilam, n. 1. Conch ; சங்கு. வெண்மணிப் பணிலங் கொழித்து (திருவாச. 6, 47). 2. A fabulous conch . |
| பணிவிடை | paṇi-viṭai, n. <>•பணி+விடு-. 1. Service; குறறேவல். பணிவிடை • வானவர்புரிய (குற்றா. தல. மூர்த்தி. 10). 2. Temple service; temple construction; 3. Work, business, occupation, office, work of an artist; 4. Commission, order, command; |
| பணிவிடைக்காரன் | paṇiviṭai-k-kāraṉ, n. <>பணிவிடை +. 1. Servant, house servant; வேலையாள். 2. Artisan, workman; 3. Sexton, church-attendant; |
| பணிவிளக்கு | paṇi-viḻakku, n. <> பணி+. A kind of lamp used in temples ; கோயில் விளக்குவகை. திருக்குத்துப் பணிவிளக்கு (கோயிலொ.15) . |
| பணிவு | paṇivu, n. <> பணி-. 1. Submission, subordination; ¢கீழ்ப்படிகை. பணிவுடையனின் சொலனாதல் (குறள், 95). 2. Humility. veneration; 3. Defect, demerit; 4. Low place, depression; |
| பணினம் | paṇiṉam, n. <>phaṇin. Serpent ; பாம்பு. (யாழ். அக.) |
| பணீசன் | paṇīcaṉ, n. <>phaṇīša. 1. āticēṭaṉ; ஆதிசேடன். 2. The sage patajali; |
| பணீசுரன் | paṇīcuraṉ, n. <> phaṇīšvara. See பணீசன், 1. (யாழ். அக.) . |
| பணை 1 - த்தல் | paṇai-, 11 v. intr. 1. To be thick, large; to extend; to ramify; to grow thick or close, as branches; பருத்தல். (பணைத்த வெம்முலை (கம்பரா. எழுச்சி. 33). 2. To thrive, flourish; 3. To miss, fail, err; |
| பணை 2 | paṇai, n. <>பணை-. 1. Thickness, bigness; பெருமை. (தொல். சொல். 339.) 2. Dignity, excellence, superiority; 3.[K. paṇe.] Branch of a tree; 4. Bamboo. 5. Pipal. See அரசு. (பிங்.) 6. [K. paṇe.] Agricultural tracls; 7. Paddy-field; 8. Tank, pond; 9. Stable for horses and elephants; 10. [ K. paṇe.] Lair of an animal; 11. [ K. paṇe.] Drum, large drum; 12. Musical instrument; 13. Drum used in agricultural tracts; 14. Watch-tower; 15. Height; 16. Failure; missing; 17. (Jaina.) A period of five years; 18. Whetstone, hone; |
