Word |
English & Tamil Meaning |
|---|---|
| பண்புகாட்டு - தல் | paṇpu-kāṭṭu-, v. intr. <> பண்பு +. To betray one's true nature; இயற்கைக்குணத்தை வெளிப்படுத்துதல். (J.) |
| பண்புகொள்பெயர் | paṇpu-koḷ-peyar, n. <> id. +. 1. Noun qualified by an adjective denoting quality, as ceāyiṟu; பண்புச்சொல் தழுவிய பெயர். பண்புகொள் பெயர்க்கொடை (தொல். சொல். 18). 2. Concrete noun derived from a quality, as kariyatu; 3. Word of quality denoting the object which has the quality; |
| பண்புச்சொல் | paṇpu-c-col, n. <> id. +. Word denoting quality; பண்புணர்த்துஞ் சொல். |
| பண்புத்தொகை | paṇpu-t-tokai, n. <> id. +. (Gram.) An appositional compound word in which the first member stands in adjectival relation to the second; விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய சொற்களால் ஆகிய தொகை. முன்மொழிப் பண்புத்தொகையும் (வீரசோ. தொகை. 5, உரை). |
| பண்புதொகுமொழி | paṇpu-toku-moḻi, n. <> id. +. See பண்புத்தொகை. ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் (தொல். எழுத். 482). . |
| பண்புப்பெயர் | paṇpu-p-peyar, n. <> id. +. See பண்பு, 6. . |
| பண்புருபு | paṇpurupu, n. <> id. + உருபு. The word ākiya denoting adjectival relation of one word to another; பண்பைக் குறிக்கும் ஆகிய என்னும் சொல்லுருபு. (நன். 365, உரை.) |
| பண்புரைப்பார் | paṇpuraippār, n. <> id. + உரை-. Messengers, agents, emissaries; து£தர். (பிங்.) |
| பண்புலம் | paṇ-pulam, n. <> பண் +. Wellmanured field; உரமிட்ட வயல். பண்புல வுழவர் (பெருங். வத்தவ. 2, 65). |
| பண்புவமை | paṇpuvamai, n. <> பண்பு + உவமை. (Rhet.) A species of simile in which the point of comparison is in regard to qualities and properties; ஒத்த பண்பு சொல்லி உவமிக்கும் உவமை. (தண்டி. 29.) |
| பண்பொட்டு | paṇpoṭṭu, n. <> id. + ஒட்டு. (Gram.) See பண்புத்தொகை வடாஅ தென்னும் முற்றுவினைக் குறிப்பைப் பெயர்ப்படுத்திப் பனிபடுநெடுவரையொடு பண்பொட்டாக்கி (புறநா.6, உரை). . |
| பண்மகள் | paṇ-makaḷ, n. <> பண் +. Songstress; விறலி பண்மகளும் . . . தேர்ப்பவனியுண்டென்றாள் (திருவாரு. 319). |
| பண்மாறு | paṇ-māṟu, n. <> id. +. Completing one round or turn of tēci-k-kūttu; தேசிக்கூத்தை ஒருமுறை ஆடிமுடிக்கை. (சிலப். 3, 153, உரை.) |
| பண்விடு - தல் | paṇ-viṭu-, v. intr. <> id. +. To go to pieces; to be wrecked, shattered; நிலைகுலைதல். நெஞ்சம் பண்விட்டது (சீவக. 676). |
| பணக்கலியாணம் | paṇa-k-kaliyāṇam, n. <> பணம் +. Feast given at the time of receiving presents from friends on a marriage occasion; கலியாணத்தில் மொய்யிடுங்காலத்துச் செய்யும் விருந்து. (J.) |
| பணக்காரன் | paṇa-k-kāraṉ, n. <> id. +. Rich man; செல்வன். |
| பணக்காரி | paṇa-k-kāri, n. Fem. of பணக்காரன். Rich woman; செல்வமுள்ளவன். |
| பணக்கொழுப்பு | paṇa-k-koḷuppu, n. <> பணம் +. See பணச்சலுகை. . |
| பணச்சலுகை | paṇa-c-calukai, n. <> id. +. Show, parade, insolence of wealth; செல்வச்செருக்கு. (W.) |
| பணத்தட்டு | paṇa-t-taṭṭu, n. <> id. +. Want of money; பணமில்லாக்குறைவு. |
| பணத்து£க்கம் | paṇa-t-tūkkam, n. <> id. + து£க்கு. A measure of weight = 2 maūcāṭi; இரண்டு மஞ்சாடி கொண்ட ஒரு எடுத்தலளவை. |
| பணதரம் | paṇa-taram, n. <> phaṇa-dhara. Serpent, as hooded; [படத்தையுடையது] பாம்பு (சங். அக.). |
| பணதி | paṇati, n. prob. பண்ணு-. 1. Workmanship; வேலைப்பாடு. வாய்ப்புடைப் பணதிவல்லோர் வகுத்த . . . கம்மாத்தழகொடு புணர்ந்து (பெருங். மகத. 3, 27). 2. Action; 3. Creation; 4. Jewels, ornament; 5. Fancy, delusion; |
| பணப்பலகை | paṇa-p-palakai, n. <> பணம் +. A flat piece of wood with small dents each equal in size to a small coin, used in counting coins; சிறு நாணயங்களை எளிதில் எண்ணியறிதற்குச் செய்த குழிகளுள்ள மரப்பலகை. Nā. |
| பணப்பித்து | paṇa-p-pittu, n. <> id. +. Greed of money, avarice; பணவசை. |
| பணப்புரட்சி | paṇa-p-puraṭci, n. <> id. +. Command of money, abundance of wealth; செல்வமிகுதி. (J.) |
