Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதம்பார் - த்தல் | patam-pār-, v. tr. <> பதம்1 +. 1. To try the taste or consistency of boiling rice; to try a fruit by feeling, smelling; சுவையறிதல். (W.) . 2. To exercise great caution before entering on a business; 3. To examine the moistness of land in order to ascertain its fitness for sowing; 4. To test; |
| பதமத்தியம் | pata-mattiyam, n. <>pada +. (Astron.) Nadir; ககோளத்தைப் பார்ப்போனுக்கு நேர்கீழாகவுள்ள இடம். (C. G.) |
| பதமம் | patamam, n. <>patama. (யாழ். அக.) (w.) 1. Moon; சந்திரன். 2. Bird; 3. A kind of moth; |
| பதமுடி - த்தல் | pata-muṭi, v. intr. <>பதம்2 +. To split a word into its component parts; பகுபதவுறுப்புக் கூறுதல். (W.) |
| பதமுத்தி | pata-mutti, n. <>id. +. (šaiva.) Inferior state of bliss; பரமுத்திக்குக் கீழ்ப்பட்ட இந்திரன் முதலிய இறையவர் பதங்கள். அத்தவங்களின்பயனாகிய பதமுத்திகளை (சி. போ. பா. 8, 1, பக்.168). |
| பதமை | patamai, n. <>பதம்1. (யாழ். அக.) 1. Softness, tenderness, mellowness, as of ripe fruits, of well boiled food; மென்மை. பதமையான ஒலை. 2. Slowness, dullness; 3. Lowness, softness of voice; 4. Gentleness; mildness; deliberateness; calmness; 5. pliancy; smoothness; 6. Submission; resignation; |
| பதயுகம் | pata-yukam, n. <>pada + yuga. A pair of feet; இணையடிகள். பதயுகத் தொழில் கொடு (கம்பரா. நகரப்.49). |
| பதர் | patar, n. 1. Chaff, husk, empty ears of grain; உள்ளீடற்ற நெல். 2. Unsubstantiality; emptiness; worthlessness; insipidity; inferiority; 3. Worthless person; 4. Fault, defect; |
| பதர் - த்தல் | patar-, 11 v. intr. <>பதர். To become useless; பதராய்ப்போதல் ஒருகால் பதர்த்ததிறே (ஈடு, 2, 8, 5) |
| பதர்ச்சொல் | patar-c-col, n. <>id. +. Meaningless word; பொருளில்லாத சொல். பதர்ச்சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கி (பெருங். இலாவாண.4, 51). |
| பதர்பேணி | patar-pēṇi, n. <>U.padar + uphēni. A kind of cake prepared from wheat; கோதுமையாற் செய்யப்படும் ஒருவகைப் பணிகாரம். (இந்துபாக.) |
| பதரி | patari, n. <>badarī. 1. Jujube-tree. See இலந்தை. (தைலவ. தைல.) 2. See பதரிகாசிரமம். |
| பதரிகாசிரமம் | patarikāciramam, n. <>badarikāšrama. A sacred place on the Himālayas said to be the hermitage of Nara and Nārāyaṇa, sacred to Viṣṇu; இமயச்சாரலில் உள்ளதும் நரநாராயணர் தவம்புரிந்ததும் திருமாலுக்குச் சிறந்ததுமான தலம். (W.) |
| பதல் | patal, n. <>U. badl. See பதில். (C. G.) . |
| பதலம் | patalam, n.perh. bhadra. [K.paduḷa.] Care, caution; safety, security; பத்திரம். திருவாபரணங்கள். . . கருவுகலத்திலே பதலம் பண்ணுகிறதும் (கோயிலொ. 76). |
| பதலை | patalai, n. 1. Mountain; மலை. (பிங்.) இப்பதலைக்கல்லவோ (இரகு. தேனுவ. 62). 2. Hill; 3. A kind of drum; 4. Single-headed large drum; 5. Large-mouthed pot; 6. Ornamental pitcher mounted on a tower, etc.; 7. Boat; |
| பதலைவங்கு | patalai-vaṅku, n. <>பதலை +. Cave; மலைக்குகை. பாம்பதாய்ப் பதலைவங்கிற் பாவிதான் பரிணமித்தான் (மேருமந். 741). |
| பதவம் | patavam, n. <>பதவு. Bermuda grass. See அறுகு. பெரும்பதவப் புல்மாந்தி (கலித். 109). |
| பதவல் | pataval, n. prob. id. Rubbish, refuse; குப்பை. Loc. |
| பதவாடை | pata-v-āṭai, n. <>பதம்1 + அடை. Poultice; மாக்களி. (C. E. M.) |
| பதவாயுதம் | pata-v-āyutam, n. <>பதம்2 +. Cock, as having its feet for weapons; [காலைப்படையாக உடையது] கோழி. பதவாயுதக்கொடிவேள் (மறைசை. 89). |
| பதவி 1 | patavī, n. <>பதம்1. Person of real humility; நீர்மையுள்ளவன். பதவியாய்ப் பாணியானீ ரேற்று (திவ். இயற். 2, 89). |
| பதவி 2 | patavi, n. <>padavi. 1. Station, situation, position, rank; நிலை. 2. Road, path, way; 3. Worlds of the gods, lower states of bliss; 4. Final states of bliss, four in number, viz., cāḷōkam, cāmīpam, cārūpam, cāyucciyam; |
