Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதப்படு - தல் | pata-p-paṭu-, v. intr. <>பதம்+. (W.) 1.To be seasoned ; பக்குவப்படுதல். . 2. To ripen ; |
| பதப்படுத்து - தல் | pata-p-paṭuttu-, v. tr. caus. of பதப்படு-. 1. To make a thing fit for use; உபயோகப்படும்படி செய்தல். 2. To reconcile; |
| பதப்பர் | patappar, n. Heaped sand to prevent inroads of flood; வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை. பலசூழ் பதப்பர் பரிய (பதிற்றுப்.30, 18). |
| பதப்பலம் | pata-p-palam, n. <>பதம்2+. Quarter of a palam; காற்பலம். (தைலவ. தைல.) |
| பதப்பாடு | pata-p-pāṭu, n. <>பதம்1+. Being seasoned, tempered, fitted, adapted or trained; பக்குவமாகை. (W.) 2. Ripening; 3. Component parts of a fortification including ornamental figures; |
| பதப்பிரயோசனம் | pata-p-pirayōcaṉam, n.<>பதம்2+. The significance of a word; சொல்லின் பொருணயம். |
| பதப்புணர்ச்சி | pata-p-puṇarcci, n. <>id. +. (Gram.) Sandhi, combination of one word with another; நிலைமொழியும் வருமொழியும் ஒன்றுபடுகை (நன்.242, மயிலை.) |
| பதப்பேறு | pata-p-pēṟu, n. <>id. +. (šaiva.) See பதழுத்தி. (யாழ். அக.) . |
| பதப்பொருள் | pata-p-poruḷ, n. <>id. +. See பதவுரை. கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும் (நன்.22) |
| பதபதெனல் | pata-pateṉal, n. Expr. signifying (a) The sound of water in swift motion or of a storm; ஒர் ஒலிக்குறிப்பு. (சூடா.) (b) The trembling of the heart; |
| பதபாகம் | pata-pākam, n. <>பதம்1+. (1) Gentleness, mildness, calmness; அமரிக்கை. (W.) 2. Fitness, suitability; |
| பதபாடம் | pata-pāṭam, n. <>பதம்2+. Method of reciting vēda word by word; வேதவாக்கியங்களைப் பதம்பதமாக எடுத்தோதுமுறை. (Insc.) |
| பதபாதம் | pata-pātam, n. <>id. +. Footstep; காலடி. (W.) |
| பதபூர்த்தி | pata-pūrtti, n. <>id. +. (Gram.) Augment; சாரியை. (பி.வி.30, உரை.) |
| பதம் 1 | patam, n. 1. [K. hada.] 1. Proper consistency; required degree of hardness or softness, quality or fitness; பக்குவம், சில்பதவுணவின் (பெரும்பாண்.64) 2. Cooked food; 3. Boiled rice; 4. A grain of boiled rice; 5. Water; 6. Dampness, moisture; 7. Toddy; 8. cf. பதவம். Bermuda grass. 9. Tender grass; 10. Gentleness, sweetness; 11. Joy, delight; 12. Beauty; 13. Fit occasion, opportunity; 14. Suitability; 15. Time; 16. Indian hour of 24 minutes; 17. Sharpness, as of the edge of a knife; 18. Sign, indication; 19. Measure; 20. Thing substance; 21. Watch; 22. cf. baka. Crane; 23. Effort; 24. Disguise; |
| பதம் 2 | patam, n. <>pada. 1. Foot, leg; கால் எறிபதத்தா னிடங்காட்ட (புறநா.4). 2. Foot or line of a stanza; 3. Quarter; 4. The 25th nakṣatra; 5. Word, vocable; 6. See பதபாடம் செளிசிறார் பதமோதும் திருத்தோணிபுரத்து (தேவா. 88, 2) 7. A kind of musical composition; 8. Place, site, location; 9. Situation, rank; 10. State of future bliss; 11. Way, •road, path; 12. Circumstance, capacity; 13. Row, order, series; 14. (Astrol.) Compartments drawn on a chart for determining the site for building a house; 15. Light, brightness; |
| பதம்பத்மாசனம் | patam-patmācaṉam, n. <>பதம்2+. A yōgic posture; யோகநிலைவகை . |
