Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதிப்பிராணை | pati-p-pirāṇai, n. <>pati-prāṇā. See பதிவிரதை. (W.) . |
| பதிப்பு | patippu, n. <>பதி-. 1. Imprinting, indentation; பதிய அழுத்துகை. 2. Editing, printing, as a work; 3. That which is edited; |
| பதிபடை | pati-paṭai, n. <>பதி - + . Army lying in ambush; மறைந்துநிற்குஞ் சேனை. (W.) |
| பதிபுண்ணியம் | pati-puṇṇiyam, n. <>pati +. Service to siva; சிவபிரானுக்குப் புரியும் திருப்பணி. (சி. சி. 2, 24.) |
| பதிபோடு 1 - தல் | pati-pōṭu-, v. tr. <>பதி +. 1. To transplant; நாற்று நடுதல். 2. To plant, as slips; to insert, as grafts; |
| பதிபோடு 2 - தல் | pati-pōṭu-, v. intr. <>பதி - To crouch; பதுங்குதல். புலி பதிபோடுகின்றது. Loc. |
| பதிபோதம் | pati-pōtam, n. <>pati + bōdha. Knowledge and experience of the Supreme Being; பரம்பொருளைப்பற்றிய அனுபவஞானம். |
| பதிமினுக்கி | pati-miṉukki, n. <>பதி + . Broom, as cleaning a place; [இடத்தைத் துலக்குவது] துடைப்பம். (தைலவ. தைல.) |
| பதிமை | patimai, n. <>Pkt. paṭimā Puppet; பிரதிமை. |
| பதியஞ்சர்க்கரை | patiya-carkkarai, n. <>பதி - + . Molasses in a viscous condition; ஒட்டும் பதத்திலுள்ள சர்க்கரை. Nāṉ. |
| பதியம் 1 | patiyam, n. <>id. 1. Sapling or cluster of saplings planted; layer or runner inserted; நாற்று. 2. Slip, shoot, graft; 3. A species of duckweed. |
| பதியம் 2 | patiyam, n. <>padya. 1. Stanza; பாடல். பன்னு திருப்பாவைப் பல்பதியம் (திவ். திருப்பா. தனியன்.). 2. See பதிகம். (Insc.) |
| பதியரி | pati-y-ari, n. <>பதி - + . Saplings for transplanting; நாற்று. (அக. நி.) |
| பதியிலார் | pati-y-ilār, n. <>பதி + . Dancing-girls; கணிகையர். உருத்திர கணிகைமாராம் பதியிலார் குலத்திற் றோன்றி (பெரியபு. தடுத்தாட். 132). (Insc.) |
| பதியெழவு | pati-y-eḻavu, n. <>id. + எழு-. Flight from home from fear of the king or a hostile army; வலசைபோகை. பதியெழவறியாப் பழங்குடி (மலைபடு. 479) . |
| பதியெழு - தல் | pati-y-eḻu-, v. intr. <>id. + . To flee from home from fear of the king or a hostile army; வலசைபோதல். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15). |
| பதிரன் | patiraṉ n. <>badhira. Deaf person; செவிடன். (யாழ். அக.) |
| பதில் | patil, n. <>U. badl. 1. Exchange, substitution; பிரதி. Reply; |
| பதிலாமை | patilāmai, n. <>U. badnāmi. Accusation, charge; குற்றச்சாட்டு. Loc. |
| பதிலாள் | patil-āḷ, n. <>பதில் + . Substitute, deputy, representative, proxy; பிரதியாக நியமிக்கும் ஆள். |
| பதிலாளி | patil-āḷi, n. See பதிலாள். (W.) . |
| பதிலி | patili, n. <>U. badli. Substitute; person or thing substituted for some other person or thing (R.F.); பிரதியாக நியமிக்கும் ஆள் அல்லது பொருள். |
| பதிலிப்பத்திரம் | patili-p-pattiram, n. <>பதிலி +. Writ of authority or proxy; அதிகாரபத்திரம். Mod. |
| பதிவதம் | pativatam, n. See பதிவிரதம், பதிவத மாதர் பரத்தையர் (பரிபா. 10, 23). . |
| பதிவிடம் | pativiṭam, n. <>பதிவு + இடம். Ambush, hiding place; ஒளித்திருக்குமிடம். |
| பதிவிடை | pativiṭai, n. See பதிவிடம். (W.) . |
| பதிவிம்பம் | pativimpam, n. <>Pkt. padibimba <>prati-bimba. Reflection, reflected image; பிரதிபிம்பம். துரிய சுடர்ப் பதிவிம்பம் (வேதா. சூ.106). |
| பதிவிரதம் | pati-viratam, n. <>pati-vratā. See பதிவிரதாதர்மம். (தக்கயாகப். 119, உரை.) . |
| பதிவிரதமுல்லை | pativirata-mullai, n. <>பதிவிரதம் +. (Puṟap.) Mullai flower worn by a woman to indicate her chastity; கற்புக்கு அறிகுறியாக அணியும் முல்லை. (தக்கயாகப். 119, உரை.) |
| பதிவிரதாதர்மம் | pativiratā-tarmam, n. <>pativratā + . The law of chastity; கற்புநெறி. |
| பதிவிரதாபுண்ணியம் | pativiratā-puṇṇiyam, n. <>id. +. See பதிவிரதாதர்மம். (W.) . |
| பதிவிரதை | pativiratai, n. <>pati-vratā. Chaste and virtuous wife; கற்புடைமனைவி. அன்பு கூரும் பதிவிரதை (திருப்பு. 126). |
| பதிவிரு - த்தல் | pativiru-, v. intr. <>பதிவு + . To lie in wait, as a thief or an enemy; to lurk, as a beast ready to spring; ஒளித்திருத்தல். |
