Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதுமப்பிரபர் | patuma-p-pirapar, n. <>Padma-prabha. (Jaina.) A Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரர் இருபத்துநால் வருள் ஒருவர் (திருக்கலம், கப்பு, உரை.) |
| பதுமபந்து | patuma-pantu, n. <>padma + bandhu. (யாழ். அக.) Lit., the friend of lotus. [தாமரைத்தோழன்] 1. The sun; 2. Bee; |
| பதுமபீடத்தன் | patuma-pīṭattan, n. <>id. +. Brahma; பிரமன். பதுபீடத்தன்னகரும் (கம்ரா.கையடைப்.7). |
| பதுமபீடம் | patuma-pīṭam, n. <>id. +. Seat in the shape of a lotus; தாமரை வடிவாகச் செய்யப்பட்ட பீடம். (மணி, 3, 66, அரும்.) |
| பதுமபுராணம் | patuma-purāṇam, n. <>padma-purāṇa. One of patiṉ-eṇ-purāṇam, q.v.; பதினெண்புராணத்தொன்று. |
| பதுமம் | patumam, n. <>padma. 1. Lotus. See தாமரை. அறுவர் மற்றையோரும்..பயந்தோ ரென்ப பதுமத்துப்பயல் (பரிபா, 5, 49). 2. See பதுமரேகை. (சங். அக.) 3. See பதுமபுராணம். பதுமமேலவன் புராணமாம் பிரமமே பதுமம் (கந்தபு பாயி.54). 4. See பதுமபீடம். இவர் எழுந்தருளிநின்ற...பதுமம் ஒன்று (S. I. I. ii, 135). 5. See பதுமாசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் (தத்துவப். 107). 6. Lotus-shaped section of a crown, one of five muṭi-y-uṟuppu, q.v.; 7. (Nāṭya.) A hand-pose; 4. Ten million crores; 9.See பதுமநிதி. 10. See பதுமராகம். பதுமமு நீலமும் விந்தமும் படிதமும் (சிலப். 14, 186). 11. The 15th nakṣatra. 12. A hell; 13. Curls of hair on the shoulders of a horse; |
| பதுமமணி | patuma-maṇi, n. <>id. +. See பதுமவீசம். (சங்.அக.) . |
| பதுமயோனி | patuma-yōṉi, n. <>padmayōni. Brahma, as lotus-born; [தாமரையிற் பிறந்தோன்] பிரமன். |
| பதுமர் | patumar, n. <>padma. One of the Buddhas that preceded Gautama Buddha; பழைய புத்தருள் ஒருவர் (மணி.பக்.369.) |
| பதுமராகம் | patuma-rākam, n. <>padmarāga. Jacinth, a species of ruby, hyacinth; மாணிக்கவகை. (திவா.) (திருவாலவா, 25, 12.) |
| பதுமரேகை | patuma-rēkai, n. <>padma +. Lotus-mark on the palm of the hand, believed to indicate one's good fortune; ஒருவனது அதிட்டத்தைக் குறிப்பதாகக் கருதப்படும் தாமரை வடிவமான கைரேகை . |
| பதுமரோகம் | patuma-rōkam, n. <>id. +. Red fleshy excrescence within the eyelid causin redness of the eye; கண்ணிமையில் செஞ்சதை வளர்ந்திருக்கும் நோய்வகை. (சங்.அக.) |
| பதுமவியூகம் | patuma-viyūkam, n. <>id. +. Array of an army in the form of a lotus; தாமரை வடிவமாக வகுக்கப்பட்ட படையணி. (சீவக.2311, உரை.) |
| பதுமவீசம் | patuma-vīcam, n. <>id. + bīja. Lotus seed; தாமரைமணீ. (யாழ்.அக.) |
| பதுமன் | patumaṉ, n. <>padma. 1. Brahmā; பிரமன். 2. A divine serpent believed to support the earth in the North-West, one of aṣṭa-mā-nākam, q.v. ; |
| பதுமனார் | patumaṉār, n. An ancient commentator on Nālaṭiyār who classified its stanzas; நாலடியாருக்குப் பாலியலதிகாரங்கள் வகுத்து உரையிட்ட பழைய ஆசிரியர். |
| பதுமாக்கம் | patumākkam. n. <>padmākṣa. See பதுமவீசம். (மூ.அ.) . |
| பதுமாக்கன் | patumākkaṉ, n. <>id. Viṣṇu, as lotus-eyed; [தாமரைபோலுங் கண்களுடையவன்] திருமால். பதுமாக்கனெறும் பெயரிற் றிகழ்வாய் (காஞ்சிப்பு. திருமால்.16). |
| பதுமாசனம் | patumācaṉam n. <>padmāsana. Lotus-posture, a yogic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh and grasping the toes with the hands crossed over the back, while the chin presses on the chest and the gaze is fixed on the ti ஆசனம் ஒன்பதனுள் இடக்காலை வலத்தொடையிலும் வலக்காலை இடத்தொடையிலும் வைத்து உட்கார்ந்து வலக்கையால் வலது பெருவிரலையும் இடக்கையால் இடது பெருவிரலையும் முதுகிற் கைமாற்றிப் பிடித்துக்கொண்டு மோவாய்க்கடையை மார்பின்மேலூன்றி நாசிநுனியில் நாட்டம் வைத்திருக்கும் ஆசனவகை.(சீவக,656,உரை.) |
| பதுமாசனன் | patumācaṉaṉ, n. <>id. Brahma, as seated on a lotus; [தாமரையில் வீற்றிருபவன்] பிரமன் பழியாது மில்லாத பதுமாசனற்கும் (பிரபோத, 3, 6). |
