Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதுமாசனி | patumācaṉi, n. <>padmāsanā. Lakṣmī, as seated on a lotus; [தாமரையில் வீற்றிருப்பவள்] இலக்குமி. |
| பதுமாசனை | patumācaṉai, n. <>id. See பதுமாசனி. . |
| பதுமாஞ்சலி | patumācali, n. <>padma +. (Nāṭya.) A gesture with both hands in which they are joined in patuma-kōcikam pose; இருகையையும் பதுமகோசிகமாகக் கூட்டும் இணைக்கை வகை (சிலப், 3, 18, உரை.) |
| பதுமாதனம் | patumātaṉam, n. See பதுமாசனம். (தத்துவப். 108, உரை.) . |
| பதுமார்க்கம் | patumārkkam. n. prob. padma + arka. A low annual, flourishing in dry localities. See கவிழ்தும்பை. (மலை.) |
| பதுமாவதி | patumāvati, n. <>padmāvatī. See பதுமாசனி. . |
| பதுமினி | patumiṉi, n. <>padminī. Woman of the superior order, one of four peṇ, q.v.; நால்வகைப் பெண்டிருள் உத்தமவிலக்கணமுடையவள் (கொக்கோ.) |
| பதுமுகம் | patumukam, n. <>padmaka. 1. See பதுமாசனம். (சிலப். 8, 26, உரை.) . 2. A fragrant substance, used in bathing, one of 32 ōmālikai, q.v. ; |
| பதுமை 1 | patumai. n. <>padmā. 1. Lakṣmī; திருமகள். (திவா.) பதுமைபோலிய பொற்பினாள் (கம்பரா. தாடகை. 32). 2. Kāḷi; 3. See பதுமகோமளை. பழிதவிர் கற்புடைப் பதுமை தன்மகன் (கந்தபு. சூரனகர்புரி. 5). 4. A Himālayan lake where Lakṣmī was born; 5. A small plant; |
| பதுமை 2 | patumai, n. <>pratimā. 1. Puppet, பாவை.2. விக்கிரகம். எந்தைபிரான் வடிவத்தொடு பொருந்து பதுமையை (உபதேச கா சிவவிரத.404) 2. Idol; |
| பதுமைக்கதை | patumai-k-katai, n. <>பதுமை2 +. Stories of Vikramāditya said to have been told by 32 puppets to the king Bhōja; விக்கிரமாதித்தனைப்பற்றிப் போசராசனுக்கு முப்பத்திரண்டு பதுமைகள் கூறியதாக வழங்கும் கதைத்தொகுதி. (W.) |
| பதுமையாட்டம் | patumai-y-āṭṭam, n. <>id. +. Puppet show; பாவைக்கூத்து. |
| பதுமோத்தரர் | patumōttarar, n. One of the Buddhas that preceded Gautama Buddha; பழைய புத்தருள் ஒருவர் (மணி.பக்.369.) |
| பதேசம் | patēcam, n. <>pra-dēša. Country; நாடு. நரகமேழும் நிகோதமும் பதேசமும் (மேருமந்.110). |
| பதை - த்தல் | patai-, 11 v. intr. [K. pade.] 1. To throb, as in sympathy; to flutter, quiver, beat, as the heart through fear, pain or grief ; துடித்தல் பாடுகின்றிலை பதைப்பதுஞ் செய்கிலை (திருவாச, 5, 31). 2. To be in agony, as a creature in fire; to suffer intensely ; 3. To shake ; 4. To be anxious; 5. To be conceited; |
| பதைத்துவிழு - தல் | pataittu-viḻu-, v. intr. <>பதை- +. 1. To burst forth in agony, as on hearing sad news ; வேதனை மிகுதல். 2. To be very eager, anxious or restless; |
| பதைப்புக்கெட | pataippu-k-keṭa, adv. <>id. +. Leisurely; சாவகாசமாக. (W.) |
| பதைபதை - த்தல் | patai-patai, v. intr. Redupl. of பதை-. To throb through pain, fear or grief; to be in anguish; to suffer excruciating pain; மிகத்துடித்தல். அங்கமும் பதைபதைத்து (பிரபோத, 26, 21). |
| பந்தக்காட்சி 1 | panta-k-kāṭci, n. Corr. of பக்தக்காட்சி. Loc. . |
| பந்தக்காட்சி 2 | panta-k-kāṭci, n. <>பந்தம்1 +. Ceremony observed at the close of some šaiva festivals, when the torches of šiva are snatched away by the retinue of the goddess in indication of Her love-quarrel ; சிவன்கோயிலின் நடைபெறும் சில திருவிழாவிறுதியில் உமாதேவியின் ஊடற்குறியாகச் சுவாமியின் தீவட்டிகளைத் தேவியின் பரிவாரத்தார் பறித்துச்செல்லும் உற்சவம். (W.) |
| பந்தகபத்திரம் | pantaka-pattiram, n. <>பந்தகம்+. Hypothecation deed; ஈடுகாட்டி எழுதிய பத்திரம். |
| பந்தகம் | pantakam, n. <>bandhaka. 1. See பந்தம், 1, 2, 3. . 2. Pledge, mortage; 3. Alienation; |
| பந்தசாரம் | panta-cāram, n. A kind of diamond; வயிரவகை. (S. I. I. ii, 78, 4.) |
| பந்தசேவை | panta-cēvai, n. <>bandha +. A festival in honour of Viṣṇu held on a Saturday in Puraṭṭāci, in which the devotees, possessed by the deity, dance with flaming torches in their hands; புரட்டாசிச் சனிக்கிழமையொன்றில் திருமாலின் பொருட்டுத் தீப்பந்தம் பிடித்து ஆவேசங்கொண்டு ஆடும் உற்சவம். Loc. |
