Word |
English & Tamil Meaning |
|---|---|
| பந்தடி - த்தல் | pantaṭi-, v. intr. <>பந்து2 +. To play with ball; பந்துவிளையாடுதல். சென்று பந்தடித்துமே (சிலப், 29, கந்துகவரி.). |
| பந்தடி | pantaṭi, n. <>id. +. Game with balls; பந்துவிளையாட்டு, தேவியரிருவரும்....பந்தடி காணிய நிற்ப (பெருங்.வத்தவ, 12, 15). |
| பந்தடிமேடை | pantaṭi-mēṭai, n. <>பந்தடி +. Ground where ball is played; tennis court; பந்துவிளையாடும் இடம். |
| பந்தணம் | pantaṇam, n. <>bandhana. Attachment; பற்று. பந்தணம் மவையொன்றிலம் (தேவா.859, 7). |
| பந்ததயிலம் | panta-tayilam, n. <>bandha +. Medicinal oil formed of drops of compounds burnt with oil; எரித்துத் துளித்துளியாக மருந்துக்கு எடுக்கும் சுடரெண்ணெய்.(W.) |
| பந்ததிகாரி | pantatikāri, n. See பந்தாதிகாரி. (திருவாலவா.அரும்.) . |
| பந்தம் | pantam, n. <>bandha. 1. Tie ; முடிச்சு (யாழ்.அக.) 2. Bandage, ligature ; 3. Bondage, earthly attachment, opp. to mōṭcam; 4. (Jaina.) Bondage of the soul by karma, one of nava-patārttam, q.v.; 5. Relationship, kindred; 6. Link, connection; 7. Affinity, tie of friendship, attachment; 8. Metrical connection of the last syllable of a foot with the first syllable of its succeeding foot; 9. Social code, custom, law; 10. Constitution, binding agreement; 11. Tied hair; 12. Encumbrance on property; alienation of property; 13. Surrounding wall, fortification; 14. Beauty; 15. Lamp; 16. Torch; flambeau; 17. Fireball; 18. Ball, anything globular; 19. Gold; 20. Yarn, single twisted thread; 21. A large kind of bellows; |
| பந்தம்பறி | pantam-paṟi, n. <>பந்தம்+. 1. See பந்தக்காட்சி (W.) . 2. A festival in Viṣṇu temples in honour of Tirumaṅkai-maṉṉaṉ. |
| பந்தம்பிடி - த்தல் | pantam-piṭi-, v. intr. <>id. +. 1. To carry torches; தீவட்டி தாங்குதல். 2. To carry a lighted stick steeped in ghee by the side of the corpse of one's grand-parent when it is carried to the cremation ground; |
| பந்தமுட்டி 1 | panta-muṭṭi, n. <>id. +. Torches arranged so as to look like an elephant; ஆனைவடிவுள்ள தீப்பந்தம். (W.) |
| பந்தமுட்டி 2 | panta-muṭṭi, n. Corr. of See பந்தர்முட்டி. Loc. . |
| பந்தயக்குதிரை | pantaya-k-kutirai, n. <>பந்தயம்1 +. Race horse; போட்டியோட்டத்தில் விடப்படுங் குதிரை. Mod. |
| பந்தயச்சாலை | pantaya-c-cālai, n. <>id. +. Race-course; பந்தயத்துக்காகக் குதிரைகள் ஒடும் களம். Mod. |
| பந்தயச்சீட்டு | pantaya-c-cīṭṭu, n. <>id.+. Lottery-ticket; அதீர்ஷ்டநிதியிற் பங்குரிமையைக் குறிக்குஞ்சீட்டு. (W.) |
| பந்தயச்சேவல் | pantaya-c-cēval, n. <>id. +. Game-cock; போட்டியிற் போர்புரியும் ஆண்கோழி. |
| பந்தயம் 1 | pantayam, n. [T. pandemu, K. pandya.] 1. Contest for a prize, competition; போட்டி. 2. Stake, wager, prize ; |
| பந்தயம் 2 | pantayam, n. Corr. of See பந்தகம். . |
| பந்தயமொட்டு - தல் | pantayam-oṭṭu-, v. tr. <>பந்தயம்1 +. To lay a wager; ஒட்டம் வைத்தல். |
| பந்தர் 1 | pantar, n. 1. [K. pantar.] Pandal ; கால்நட்டுக் கீற்றுக்கள் பரப்பிய இடம். படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே (புறநா.260). 2. Shade; 3. Storehouse; 4. The state-chamber; 5. Bower, arbour ; |
| பந்தர் 2 | pantar, n. <>bandha. Persons subject to the influence of karma and not yet eligible for divine illumination; முற்பிறப்பிற் செய்த தீவினையால் ஞானம்பெறாது பாசத்துக்கு உள்ளானவர். (W.) |
