Word |
English & Tamil Meaning |
|---|---|
| பந்தி 3 | panti, n. <>Pkt. panti <> paṅkti. 1. Row, order, series, line; ஒழுங்கு. (சூடா.) பண்ணமை வயப்பரிகள் பந்தியி னிரைத்தார் (கம்பரா வரைக்காட்சி.13). 2. Line of persons seated for dining; 3. Stable for horses or elephants; |
| பந்திகானா | pantikāṉā, n. <>U. bandikhāna. See பந்தேகானா. . |
| பந்தித்திரம் | pantittiram, n. perh. bandhutva. Friendship; சினேகம். (யாழ்.அக.) |
| பந்திப்பாய் | panti-p-pāy, n. <>பந்தி3 +. Long narrow mat for seating persons while dining; விருந்தினர் உண்ணும்போது உட்காரவிரிக்கும் நீண்டபாய். (W.) |
| பந்திப்பாவாடை | panti-p-pāvāṭai. n. <>id. +. Cloth for a row of guests to sit on; விருந்தினர் உட்கார விரிக்கும் ஆடை. (W.) |
| பந்திபேதம் | panti-pētam, n. <>id. +. Invidious distinction in serving food; அழுதுப் படைப்பதிற் காட்டும் பட்சபாதம். |
| பந்திபோசனம் | panti-pōcaṉam, n. <>id. +. Dining in company; உடனுண்ணுகை. |
| பந்தியர் | pantiyar, n. <>id. Persons of the same group; ஒருவகுப்பினர். தழுவத்தக்க பந்தியரெவரும் (கம்பரா.மாயாசீ.1). |
| பந்தியேற்று - த்தல் | panti-y-ēṟṟu-, v. tr. <>id. +. To raise a person's status in society by dining with him; உடனுண்டு ஒருவன் நிலையை உயர்த்துதல். Tinn. |
| பந்திவஞ்சனை | panti-vacaṉai, n. <>id. +. See பந்திபேதம். (யாழ்.அக.) . |
| பந்திவிசாரணை | panti-vicāraṇai, n. <>id. +. Attending on persons dining in a panti; உணவளிக்கும்போது பந்தியிலுள்ளாரை உபசரிக்கை. |
| பந்தினம் | pantiṉam, n. <>பந்து1 + இனம். See பந்துசனம். (W.) . |
| பந்து 1 | pantu, n. <>bandhu. Relation, kinsman; சுற்றம். சிந்தையா னினைவார்களைச் சிக்கெனப் பந்துவாக்கி (தேவா.263, 9). |
| பந்து 2 | pantu, n. cf. bandh. 1. [M.pantu.] Ball used in play; உண்டைவடிவான விளையாட்டுக்கருவி. பந்தார் விரலி (திவ்.திருப்பா. 8). 2. [M. pantu.] Roll, as of string or thread; 3. Water squirt; 4. Bellows; 5. Mill, handmill, potter's wheel; 6. Tie, fastening; 7. Conspiracy, plot; |
| பந்து 3 | pantu. n. perh. paṅkti. [K. bandu.] Playing-card marked with pips other than ace; ஆஸ் நீங்க, இரண்டுமுதற் பத்துவரைப் புள்ளியுள்ள ஆட்டச் சீட்டு. |
| பந்து 4 | pantu, n. <>U. band. Whip, scourge; அடிக்குஞ் சவுக்கு. |
| பந்து 5 | pantu, part. <>K. bandu <> வா-. An expletive; பொருளின்றிவழங்கும் ஒரு சொல் விழுக்காடு. என்னைக் கொண்டு பந்து (திருவாலவா.30, 29). |
| பந்துக்கட்டு 1 | pantu-k-kaṭṭu, n. <>பந்து1 +. 1. Large circle of relations; சுற்றமிகுதி. 2. Relation by marriage ; |
| பந்துக்கட்டு 2 | pantu-k-kattu, n. <>பந்து +. (W.) 1. Plot, conspiracy; சதியாலோசனை. Confederacy, league; Fabrication, forgery |
| பந்துக்குடி | pantu-k-kuti, . A sect of Cetti caste; ஒருசார் செட்டிவகுப்பினர். Madu |
| பந்துசனம் | pantu-caṉam, n. <>பந்து +. Relations, kindred; சுற்றத்தார். |
| பந்துத்துவம் | pantuttuvam, n. <>bandhu-tva. Relationship; உறவு . |
| பந்துமாலை | pantu-mālai, n. <>பந்து +. Flower garland rolled into a ball; பூப்பந்து. (W.) |
| பந்துரம் | panturam, n. <>bandhura. Line of beauty, beauty; அழகு. (W.) |
| பந்துவராளி | pantu-varāli, n. <>T. pantu +. [M. pantuvarāḷi.] (Mus.) A melody-type; இராகவகை |
| பந்தெறிகளம் | panteṟi-kalam, n. <>பந்து +. See பந்தடிமேடை பந்தெறிகளத்து மணிக்கயிற்றூசன் மறலியவிடத்தும் (பெருங்.உஞ்சைக்.34.115). . |
| பந்தேகானா | pantēkāṉā, n. <>U. bandē-khāna. Prison, jail; சிறைக்கூடம். (C. G.) |
| பந்தோக்கு | pantōkku, n. <>U. bandq. Gang; கூட்டம். Loc. |
| பந்தோபஸ்து | pantōpastu, n. <>U. bandōbast. 1. Agreement, settlement; bargain; adjustment, arrangement; any system or mode of regulation; revenue settlement (R. F.); திட்டப்படுத்தப்பட்ட ஒழுங்கு. 2. Care, safety, safe custody (R. F.); |
