Word |
English & Tamil Meaning |
---|---|
ஆலாலம் 1 | ālālam n. prob. ஆல்1+ஆலு-. Small house-bat. See துரிஞ்சில். (பிங்.) |
ஆலாலம் 2 | ālālam n. <>hālāhala. Poison produced at the time of the churning of the ocean; கடலிற்பிறந்த விஷம். ஆலால முண்டா னவன் சதுர்தா னென்னேடீ (திர்வாச. 12, 8). |
ஆலி 1 | āli n. <>ஆலு-. [K. M. āli.] 1. Raindrops; மழைத்துளி. (சூடா.) 2. Hail; 3. Opening shower of the rainy season; 4. Wind; |
ஆலி 2 - த்தல் | āli- 11 v. intr. <>id. To make a noise, roar; ஒலித்தல். வெங்கூற் றாலிப்ப (பு. வெ. 4,4.) |
ஆலி 3 | āli n. prob. ஆலி-. Huge hollow figure, like a man or woman, worn usually by dancers leading a procession in connection with temple festivals; பூதம். Tinn. |
ஆலி 4 | āli n. <>halī. Toddy, fermented liquor; கள். (திவா.) |
ஆலிகை | ālikai n. <>a-halyā. Ahalyā. See அகலியை. (கம்பரா. நட்புக். 6.) |
ஆலிங்கனம் | āliṅkaṉam n. <>ā-lingana. Embrace. தழுவுகை. (சூடா.) |
ஆலிடம் | āliṭam n. prob. அகல்-+இடம். Street row; தெருச்சிறகு. (திவா.) |
ஆலிநாடன் | āli-nāṭaṉ n. <>ஆலிநாடு. Tiru-magkai-y-āḻvār, who was the chief of the region about Tiru-v-āli in the Cōḻa kingdom; திருமங்கையாழ்வார். (திவ். பெரியதி. 3,4,10.) |
ஆலிப்பு | ālippu n. <>ஆலி-. [M. āli.] Great noise, uproar; ஆரவாரம். ஆலிப்பா லடுத்தவந் நூல்களும் விரித்தே (தாயு. ஆகார. 9). |
ஆலியகம் | āliyakam n. cf. ஆரியகம். Small Indian ipecacuanha. See சிறுகுறிஞ்சா. (மூ.அ.) |
ஆலியப்பறை | āliya-p-paṟai n. A class of Pariahs; பறையரில் ஒரு வகுப்பார். (W.) |
ஆல¦டம் | ālīṭam n. <>ā-līdha. (which however would correspond to Tamil பிரத்தியால¦டம். q.v.) Position of an archer in which the left leg is put forward and the right knee is bent, one of four villōr-nilai, q.v.; இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை. (பிங்.) |
ஆலு - தல் | ālu- 5 v. intr. [K. āl.] 1. To sound, make noise, cry aloud; ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநா. 128, 4). 2. To rejoice; 3. To dance; 4. To abide; |
ஆலூகம் | ālūkam n. cf. mālūra. Bael. See வில்வம். (மூ.அ.) |
ஆலை 1 | ālai n. <>ஆலு- [M. Ala.] 1. Sugarcane press; கரும்பாலை. ஆலைநீள்கரும் பன்னவன் றாலோ (திவ். பெருமாள். 7, 1). 2. Sugar-cane; |
ஆலை 2 | ālai n. <>hālā- Toddy, Spirituous liquor; கள். (பிங்.). |
ஆலை 3 | ālai n. <>šālā. 1. Apartment, hall; சாலை. ஆலைசேர் வேள்வி (தேவா. 844, 7). 2. Elephant stable or stall; |
ஆலைக்குழி | ālai-k-kuḻi n. <>ஆலை1+. Receptacle for the juice underneath a sugarcane press; கரும்பாலையிற் சாறேற்கும் அடிக்கலம். |
ஆலைத்தொட்டி | ālai-t-toṭṭi n. <>id.+. Cauldron for boiling sugar-cane juice; கருப்பஞ் சாறு காய்ச்சும் சால். |
ஆலைபாய் - தல் | ālai-pāy- v. intr. <>id.+. 1. To work a sugar-cane mill; ஆலையாட்டுதல். ஆலைபாயோதை (சேதுபு. நாட்டு. 93). 2. To move, toss, as a ship; 3. To be undecided, vacillating; |
ஆலைமாலை | ālai-mālai n. prob. ஆலை-+மலை-. Trouble, vexation; தொந்தரை. (W.) |
ஆலையடி - த்தல் | ālai-y-aṭi- v. intr. <>ஆலை1+. See ஆலையாட்டு-. (C.G.) . |
ஆலையாட்டு - தல் | ālai-y-āṭṭu- v. intr. <>id.+ To work a sugar-cane press; கரும்பாலை சுழற்றுதல். |
ஆலையோட்டு - தல் | ālai-y-ōṭṭu- v. intr. <>id.+. See ஆலையாட்டு-. (C.G.) . |
ஆலோகம் | ālōkam n. <>ā-lōka. 1. Sight; பார்வை. (W.) 2. Light; |
ஆலோகனம் | ālōkaṉam n. <>ā-lōkana. Seeing; பார்க்கை. (W.) |
ஆலோசனை | ālōcaṉai n. <>ā-lōcana. 1. Counsel, advice; யோசனை. 2. Reflection, consideration; |
ஆலோசனைச்சங்கம் | ālōcaṉai-c-caṅkam n. <>id.+saṅgha. Council; ஆலோசனைச்சபை. |
ஆலோசி - த்தல் | ālōci- 11 v. tr <>ā-lōc. 1. To take counsel, consult, deliberate in assembly; யோசனைசெய்தல். 2. To consider, reflect, think; |
ஆலோலம் | ālōlam n. <>ஆல்2+ஓலம். 1. Sound of rushing water; நீரொலி. (அக. நி.) 2. Expression employed to drive away birds; |