Word |
English & Tamil Meaning |
---|---|
ஆலோலிதமுகம் | ālōlita-mukam n. <>ā-lōlita+. (Nāṭya.) The gesture of calling one with a cheerful countenance indicative of joy, one of 14 muka-v-apiṉayam, q.v.; ஆசை யால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநய வகை. (சது.) |
ஆலோன் | ālōṉ n. prob. ஆல்2. Moon, as one born of the sea; சந்திரன். ஆலோன் கிளருடு வளைவும் (இரகு. குறை. 9). |
ஆவ | āva int. 1. An exclamation expressive of pity; இரக்கக்குறிப்பு. நாயினேனை யாவவென் றருளுநீ (திருவாச. 5, 74). 2. An exclamation expressive of distress; |
ஆவச்சீவாளம் | āva-c-cīvāḷam n. <>yāvat+jīva. Life history, details of life private and public; முழுநிலைமை. அவன் ஆவச்சீவாளமும் அறிந்திருக்கிறேன். Loc. |
ஆவசியகம் | āvaciyakam n. <>āvašyaka. That which is indispensable; இன்றியமையாதது. |
ஆவஞ்சி | ā-vaci n. <>ஆ8+. A drum made of cow hide; இடக்கை. (சிலப். 3, 27, உரை.) |
ஆவட்டங்கொட்டு - தல் | āvaṭṭaṅ-koṭṭu- v. intr. cf. ஆவலங்கொட்டு-. To go around denying something; இல்லையென்று சொல்லித்திரிதல். (யாழ். அக.) |
ஆவட்டைசோவட்டை | āvaṭṭai-cōvaṭṭai n. redupl. Weariness, exhaustion; சோர்வு. அவன் ஆவட்டைசோவட்டையிட்டுவந்து விழுந்தான். Loc. |
ஆவடி | āvaṭi n. cf. சாவடி. Depot. ஆளேற்று கிற ஆவடி. Loc. . |
ஆவணக்களம் | āvaṇa-k-kaḷam n. <>ā-paṇa.+. Registration office; பத்திரப்பதிவுச் சாலை. ஆவணக்களத்தே அறக்கொண்டுவிற்று (S.I.I. iii, 108). |
ஆவணக்களரி | āvaṇa-k-kaḷāi n. <>id.+. See ஆவணக்களம். ஆவணக்களரியே காட்டிக் காப்பிட்டு (சோழவ. 68). |
ஆவணம் | āvaṇam n. <>ā-paṇa. 1. Market, bazaar; கடைவீதி. (பிங்.) 2. Street; 3. Right to property, ownership; 4. Slavery, bondage, service; 5. Bond, deed; |
ஆவணமாக்கள் | āvaṇa-mākkaḷ n. <>id.+. Those who administer the oath; பிரமாணம் வாங்குவோர். (அகநா. 77.) |
ஆவணவீதி | āvaṇa-vīti n. <>id.+. Bazaar; கடைத்தெரு. ஆவணவீதிப் பூவணம் (திருவிசை. கரு. 7, 1). |
ஆவணவோலை | āvaṇa-v-ōlai n. <>id.+. Title-deed; உரிமைப்பத்திரம். அண்ணலோர்விருத்தன் போல்வந் தாவணவோலை காட்டி (கந்தபு. வழிநடை. 12). |
ஆவணி | āvaṇi n. <>šrāvaṇa. [K. M. āvaṇi.] 1. The fifth Tamil mouth, August-September; ஐந்தாமாதம். (திவா.) 2. The 22nd nakṣatra. See அவிட்டம். |
ஆவணிமுழக்கம் | āvaṇi-muḻakkam n. <>id.+. (Astrol.) Thunder after the sixth day of Avaṇi, which indicates good rains; ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம். (சோதிட. சிந். 207.) |
ஆவணியவிட்டம் | āvaṇi-y-aviṭṭam n. <>id. 1. An annual ceremony, performed by the twice born on the full-moon day in Avaṇi when the moon is in conjunction with šravaṇam or aviṭṭam when they renew their sacred thread as a preliminary to reciting the Vēdas; உபாகர்மம். 2. An ancient festival in Madura which has now ceased to be observed; |
ஆவத்தனம் | āvattaṉam n. <>ā-pad+dhana. Property kept in reserve against future dire needs; ஆபத்தனம். ஆவத்தனமென்று . . . சேவித்திருக்கும் (திவ். பெரியாழ். 4, 2, 6). |
ஆவத்து | āvattu n. <>Pkt. āvat, <>ā-pad. Distress. See ஆபத்து. (கம்பரா. சூர்ப்ப. 86.) |
ஆவது | āvatu n.; conj.; part. Thing to be done; Either . . . or; 1. Affix indicating that explanation follows, that is to say; ஆகவேண்டியது. ஆவதாகிய பரிசெலாம் (கந்தபு. திக்குவி. 3).; விகற்பப்பொருள் தரும் ஓரிடைசொல். அவ்வாறாவது இவ்வாறாவது செய். விவரம் பின்வருதலைக்குறிக்குஞ் சொல். கொல்லையாவது (S.I.I. i, 103). 2. Affix of ordinal numbers; |
ஆவநாழி | āva-nāḻi n. <>ஆவம்1+. [M. āva-nāli.] Quiver; அம்பறாத்தூணி. (தேவா. 531, 8.) |
ஆவநாழிகை | āva-nāḻikai n. <>id.+. See ஆவநாழி. (சீவக. 176.) |
ஆவம் 1 | āvam n. cf. cāpa. 1. Quiver; அம்பறத்தூணி. ஆவக் கணைக்கால் காணாயோ (மணி 20, 63). 2. Bowstring; |