Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரார்த்தபூசை | parārtta-pūcai, n. <>id. +. (šaiva.) Pūjā performed for the benefit of others; public worship in temples; பிறர்பொருட்டுச் செய்யும் சிவபூசை |
| பரார்த்தம் 1 | parārttam, n. <>parārtha. That which is intended for the benefit of others; பிறர்பொருட்டானது. தன்னைப் பரார்த்தமாக்கி (திவ். திருக்குறுந். 3, வ்யா.பக்.15). |
| பரார்த்தம் 2 | parārttam, n. <>parārdha. (W.) 1. A large number=100,000 billion; ஒரு பேரெண். (பிங்.) 2. The number of human days corresponding to 50 years of Brahma's life; |
| பரார்த்தானுமானம் | parārttāṉumāṉam, n. <>parārtha +. (Log.) Inference employed to enlighten another person; பிறர் உணர்தற்பொருட்டெழுந்த அனுமானம். (தருக்கசங். பக். 106, நீலகண்.) |
| பரார்த்தானுமிதி | parārttāṉumiti, n.<>id. +. (Log.) Knowledge derived from parārttāṉumānam; பரார்த்தானுமானந்தா லுண்டாம் அறிவு. |
| பராரி | parāri, n. <>U. farārī. [ K. parāri.] 1. Absconding fugitive, runaway; ஒடிப்போனவன்.(C.G.) 2. Cultivator who has abandoned his lands and home, ryot who has disappeared from his village; 3. Heading under which the names of absconding revenue defaulters are entered (R. F.); |
| பராரை | parārai, n. <> பரு-மை + அரை. 1. Large trunk of a tree; ¢மரத்தின் பருத்த அடி. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுரு.10). 2. Hip or haunch, as of deer, sheep; 3. Internal sound, as the rumbling of the bowels; |
| பராவகம் | parāvakam, n. <>parāvaha. One of capta-maruttu, q.v.; சத்தமருத்துக்களுள் ஒன்று. (விஷ்ணுபுராணம்.) |
| பராவணம் | parāvaṇam, n. prob. பராவு-+வண்ணம். The object of worship; துதிக்கப்படும் பொருள். பராவணமாவது நீறு (தேவா. 857, 8). |
| பராவமுது | parā-v-amutu, n. <>id.+. Ambrosia; தெய்வங்கட்குரிய அமுதம். பராவமு தெய்துவதாகாதோ (திருவாச. 49, 2). |
| பராவர்த்திதம் | parāvarttitam, n. <>parāvarttita. (Nāṭya.) A kind of turning movement ; கூத்துறுப்பினுள் ஒன்று (சிலப்.3, 12, உரை.) |
| பராவர்த்து | parāvarttu, n. <>U. bar-āwurd. (w.) 1. Pay roll of an establishment, acquittance roll; சம்பளப்பட்டி. 2. Estimate; |
| பராவர்ப்பட்டி | parāvar-p-paṭṭi, n. <>பராவர்த்து+. See பராவர்த்து,1. (w.) . |
| பராவரம் | parāvaram, n. Confusion, disorder; that which is done in haste; ஒழுங்கின்மை. உன்வேலை பராவர வேலை. Loc. |
| பராவிருத்தமுகம் | parā-virutta-mukam, n. <>parāvrta +. (Nāṭya.) Turning one's face away in token of disapprobation or unwillingness, one of 14 muka-v-apiṉayam, q.v.; முகவபினயம் பதினான்கனுள் விருப்பமின்மையைக்குறிக்க முகத்தைத் திருப்பும் அபினயம். (சது.) |
| பராவு - தல் | parāvu-, 5 v. tr. <>பரவு-. 1. To praise; புகழ்தல். தற்பராய் நின்று (பு. வெ. 10, 15, உரை). 2. To worship; |
| பராற்பரம் | parāṟparam, n. <>parātpara. See பராபரன். (கோயிற்பு. பதஞ். 66.) . |
| பரான்னம் | parāṉṉam, n. <>para+anna. Food belonging to a stranger; தனக்குச் சொந்த மற்ற உணவு. |
| பரானுபவம் | parāṉupavam, n. <>id. + anubhava. The Supreme Bliss; பேரின்பம். பண்டறியாத பரானுபவங்கள் (திருவாச. 49, 7). |
| பரானுபூதி | Parāṉupūti, n. <>id. + anu-bhūti. Another's experience ; பிறரனுபவம்.(சைவப்) |
| பரி 1 - தல் | pari-, 4 v. intr. 1. cf. sprh. To covet; பற்றுவைத்தல். பண்டம் பகர்வான் பரியான் (பு.வெ.12, ஒழிபு. 2). 2.To be affectionate; 3. To sympathise; 4. To Plead, intercede; 5. To be troubled, distressed; to suffer; 6. To part, separate; 7. To be sundered; 8. To break off; 9. To be destroyed; to perish; 10. [K.pari] To run; 11. To go out; to escape; 1. To fear; 2. cf.pr. To guard with difficulty; 3. To discern, discriminate; 4. To know; 5. To cut asunder; 6. cf.spr. To destroy; 7. To be free from, as sin; 8. To pass beyond, cross over; 9. To shake down; 10. To get, take; |
