Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரியாளன் | pariyāḷaṉ, n. <>id. See பரிவாரன். (நாமதீப.138.) . |
| பரியாறுடையான் | pariyāṟuṭaiyāṉ, n. <>பரி3+ஆறு+. Moon's descending node; கேது (நாமதீப.103.) |
| பரியுதஞ்சனம் | pariyutacaṉam, n. <>paryud-acana. Debt; கடன். (யாழ்.அக.) |
| பரியுதாசனம் | pariyutācaṉam, n. <>paryupāsana. Modesty; வணக்கம். (யாழ். அக.) |
| பரிவகம் | parivakam, n. <>pari-vaha. One of capta-maruttu, q.v.; சப்தமருத்திலொன்று. |
| பரிவட்டச்சீலை | parivaṭṭa-c-cīlai, n. <>பரிவட்டம்+. Fine cloth; நேர்த்தியான ஆடை. (W.) |
| பரிவட்டணை | parivaṭṭaṇai, n. <>Pkt. parivaṭṭaṇa. <>pari-varttana. 1.Change, transformation; மாறுகை. 2. (Mus.) Sounding the strings of a lute by passing the fingers over them, one of eight kalai-t-toḷil, q.v.; 3. Paraphernalia; 4. See பஞ்சபரிவர்த்தனை. |
| பரிவட்டம் 1 | parivaṭṭam, n. <>Pkt. parivaṭṭa <>pari-varta. 1.Garment, cloth, robe; ஆடை. ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே (பெரியபு. ஏயர்கோ. 36). 2. Vestment of a deity tied round the head of its devotee, as a mark of honour; 3. Robes given by a king to a person on his appointment to an office; 4. Head-dress worn in mourning; 5. A weaver's instrument; |
| பரிவட்டம் 2 | parivaṭṭam, n. <>pari-vēṣa. See பரிவேடம். (C. G.) . |
| பரிவத்தனம் | parivattaṉam, n. <>parivariana. 1. Circumambulation, going around; சுற்றுகை. வலமிடம் பரிவத்தனஞ் செய்து (திருவாலவ.28, 34). 2. See பரிவருத்தனை,1. |
| பரிவத்தனை | parivattaṉai, n. See பரிவருத்தனை, 1. (S. I. I. vi, 165.) . |
| பரிவத்தி - த்தல் | parivatti-, 11 v. tr. <>parivarta. To circumambulate, walk round; சுற்றுதல். இடம் வலம் பரிவத்திப்ப (திருவாலவா. 28, 56) |
| பரிவதனம் 1 | parivataṉam, n. <>paridēvana. Lamentation; அழுகை. (யாழ்.அக.) |
| பரிவதனம் 2 | parivataṉam, n. <>parivadana. Abuse; நிந்தனை. (யாழ்.அக.) |
| பரிவயம் 1 | parivayam, n. <>pra-vayas. Youth; இளமை. (யாழ்.அக.) |
| பரிவயம் 2 | parivayam, n. perh. paryupta. Rice; அரிசி. (யாழ்.அக.) |
| பரிவர் | parivar, n. <>பரிவு. Those who love; அன்புள்ளவர். பரிவர்..சொல்லுகிற பாசுரத்தை (திவ்.திருவாய், 4, 2, பன்னீ. ப்ர) |
| பரிவர்த்தனம் | parivarttaṉam, n. <>parivarttana. 1. See பரிவருத்தனை, 1. . 2. A lineal measure; |
| பரிவர்த்திதம் | parivarttitam, n. <>parivarttita. (Nāṭya.) A handpose; அபிநயக்கை வகை. (சீவக.1257, உரை) |
| பரிவர்த்துளம் | parivarttuḷam, n. <>parivartula. A hell; நரகவிசேடம்.(சிவதரு. சுவர்க்க நரக.109.) |
| பரிவருத்தனம் | parivaruttaṉam, n. <>pari-varttana. 1. See பரிவருத்தனை. 1. இருநிலத்தவர் ... கொள்ளும் பரிவருத்தனம்போல் (சேதுபு. திருநா. 79). 2. A pace of a horse; |
| பரிவருத்தனை | parivaruttaṉai, n. <>id. 1. Exchange, as of one piece of land for another; barter; பண்டமாற்றுகை. 2. (Rhet.) A figure of speech describing an exchange; |
| பரிவற்சனம் | parivaṟcaṉam, n. <>parivarjana. (யாழ்.அக.) 1. Murder; கொலை. 2. Leaving, abandoning; |
| பரிவாகிதமுகம் | parivākita-mukam, n. <>pari-vāhita+ (Nāṭya.) Rolling the head a little and inclining it in pride, one of 14 muka-v-apiṉayam, q.v.; முகவபினயம் பதினான்கனுள் செருக்கால் தலையை ஒருபுறஞ்சாய்த்துச் சிறிது சுற்றி யாட்டுகை. (சது.) |
| பரிவாதம் | parivātam, n. <>pari-vāda. Abuse, reproach; பழிச்சொல். (சூடா.) |
| பரிவாதினி | parivātiṉi, n. <>pari-vādinī. A kind of lute; வீணைவகை. (பரத.ஒழிபி.15.) |
| பரிவாபம் 1 | parivāpam, n. <>pari-vāpa. (யாழ்.அக.) 1.Shaving; சவரம் பண்ணுகை. 2. Pond; |
| பரிவாபம் 2 | parivāpam, n. See பரிவாரம், 1. Loc. . |
