Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரிவேஷ்டம் | parivēṣṭam, n. See பரிவேடம். (மேருமந்.1148, உரை) . |
| பரிவேஷம் | parivēṣam, n. See பரிவேடம். பரிவேஷத்தினைக் காணாயென்று மருட்டி (பாரத வெண். வாசுதே.124, உரைநடை) |
| பரிவை | parivai, n. 1.Gulancha. See சீந்தில். (L.) 2. East Indian rosebay. |
| பரிஷ்கரி - த்தல் | pariṣkari-, 11 v. tr. <>pariṣkr. 1. To reform; சீர்திருத்துதல். 2. To refine; to polish; 3. To improve; |
| பரிஷ்காரம் | pariṣkāram, n. <>pari-ṣ-kāra. 1. Reform; சீர்திருத்தம். தேவஸ்வம் பரிஷ்காரம் மகாராணியார் காலத்தில் ஏற்பட்டது. 2. Refinement, purification; 3. Improvement; 4. Civilisation; 5. Clearness; 6. Adorning, decoration; 7. Splendour; 8. Definiteness; firmness; |
| பரிஷத்து | pariṣattu, n. <>pari-ṣad. Assembly of scholars; பண்டிதர்சபை. |
| பரிஷேசனம் | pariṣēcaṉam, n. <>pariṣēcana. Sprinkling water reciting mantra, as round a plate before eating; உண்கலம் முதலியவற்றை மந்திரத்தை யுச்சரித்து நீராற் சுற்றுகை. |
| பரிஷை | pariṣai, n. cf. pariṣad. [K. parise.] Company of pilgrims; யாத்திரைக்கூட்டம். Loc. |
| பரீக்கை | parīkkai, n. <>parīkṣā, See பரீட்சை,1,2. (சங்.அக.) . |
| பரீகம் | parīkam, n. <>parigha. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.; யோகம் இருபத்தேழனுள் ஒன்று. (யாழ். அக.) |
| பரீகாசம் | parīkācam, n. <>pari-hāsa. See பரிகாசம். (யாழ். அக.) . |
| பரீசாரம் | parīcāram, n. <>pari-cāra. Going round; சுற்றுகை. (யா.அக.) |
| பரீட்சகன் | parīṭcakaṉ, n. <>parīkṣaka. Examiner; பரீட்சை செய்வோன். (சங்.அக.) |
| பரீட்சணம் | parīṭcaṇam, n. <>parīkṣaṇa. See பரீட்சை,1,2. . |
| பரீட்சி - த்தல் | parīṭci-, 11 v. tr. <>parīkṣ. 1.To examine; to try; to experiment; சோதித்தல். 2. To search, investigate; |
| பரீட்சித்து | parīṭcittu, n. <>Parīkṣit. A king, son of Abhimanyu; அபிமன்யுவின் மகன் கண்ணன் றன்னைப் பார்த்தலிற் பரீட்சித்தென்றும் (பாகவத. 1, பரீட்சித்துவின்றோற்ற. 12). |
| பரீட்சை | parīṭcai, n. <>parīkṣā. 1 Examination; trial; experiment; சோதனை. 2. Investigation, research; 3. Habit; practice; |
| பரீதாபி | parītāpi, n. <>paritāpin. The 46th year of the Jupiter cycle of sixty years; ஆண்டு அறுபதனூள் நாற்பத்தாறாவது. |
| பரு - த்தல் | paru-, 11 v. intr. cf. brh. To become large, bulky, plump; to swell; பெருத்தல். பருத்தா தோளு முடியும் பொடிபட (தேவா. 489, 11). |
| பரு | paru, n. <>paru. cf. பரு-. 1. Pimple, as on the face; pustule; blotch; முகமுதலியவற்றிலுண்டாஞ் சிறு கட்டிவகை. Colloq. 2. Boil; 3. Node; 4. Sea; 5. Mountain; 6. Heaven; 7. Sprout of paddy plant; |
| பருக்கன் | parukkaṉ n. <>id. Coarseness; roughness, as of cloth; clumsiness of work; பரும்படியானது. (J.) |
| பருக்காங்கல் | parukkāṅkal, n. <>பருக்கை +. See பருக்கைக்கல். . |
| பருக்கு - தல் | parukku-, 5 v. tr. Caus. of பருகு-. To cause to drink; பருகச்செய்தல். நீர் தான் கொணர்ந்து . . . பருக்கி யிளைப்பை நீக்கிரே (திவ். நாய்ச். 13, 4). |
| பருக்கென்(னு) - தல் | parukkeṉ-, v. intr. <>பரு-. 1. To be thick, bulky; பருத்துக்காட்டுதல். (சீவக. 2339.) 2. To blister; |
| பருக்கை | parukkai, n. <>id. 1. Becoming bulky; பருமனாகை. 2. Single grain of cooked rice; 3. See பருக்கைக்கல். (புறநா. 246, உரை.) 4. cf. bhargas. Crystal; 5. A mean fellow; |
| பருக்கைக்கல் | parukkai-k-kal, n. <>பருக்கை +. 1. Small pebbles; சிறு கூழாங்கல். திருவடிகளிடத்தே செம்பருக்கைக் கல்லுறுத்த (அருட்பா, iv, அருட்பிர. 79). 2. See பருக்கை, 4. (சூடா) 3. Kankar, limestone, an impure concretionary carbonate of lime; |
