Word |
English & Tamil Meaning |
|---|---|
| பருதி | paruti, n. <>pari-dhi. See பரிதி. சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி (பதிற்றுப். 46, 8). . |
| பருந்தலை | paru-n-talai, n. <>பரு-மை +. 1. Large head; பெரியதலை. (W.) 2. Swelled head, haughty person; 3. See பருந்தலைக்காரன். (W.) 4. A defect in cattle; |
| பருந்தலைக்கறையான் | paruntalai-k-kaṟaiyāṉ, n. <>பருந்தலை +. A large-headed white-ant; கறையான்வகை. (W.) |
| பருந்தலைக்காரன் | paruntalai-k-kāraṉ, n. <>id. +. Bigwig; person of property, authority, respectability or dignity; பெரியதனக்காரன். (W.) |
| பருந்தலையெறும்பு | paruntalai-yeṟumpu, n. <>id. +. A large-headed emmet; பருத்த தலையையுடைய எறும்புவகை. (W.) |
| பருந்தாட்டம் | paruntāṭṭam, n. <>பருந்து + ஆட்டம். Extreme torment, as the pecking and tossing of its prey by the kite; [பருந்து தன் இரையைக் கொத்தியாட்டுஞ் செயல்] பெருந்துன்பம்.பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்ட மாட்டி (தனிப்பா i, 170, 22). |
| பருந்தின்விருந்து | paruntiṉ-viruntu, n. <>id. +. Lit., kite's feast.. [பருந்தினது விருந்து] Crab; |
| பருந்தின்விழுக்காடு | paruntiṉ-viḻu-k-kāṭu, n. <>id. +விழு-. See பருந்தின்வீழ்வு. (நன். 18, மயிலை.) . |
| பருந்தின்வீழ்க்காடு | paruntiṉ-vīḻkkāṭu, n. <>id. +. See பருந்தின்வீழ்வு. (இறை, 4, 57.) . |
| பருந்தின்வீழ்வு | paruntiṉ-vīḻvu, n. <>id. +. The principle of the kite's swoop whereby a sūtra occurring in a treatise is not directly connected either with its preceding or succeeding sūtra, but connected with some remote sūtra, one of four cūttira-nilai, q.v.; சூத்திரநிலை நான்கனுள் முன்பின் சூத்திரங்களோடு இயைபில்லாது சேய்மையிலுள்ள சூத்திரத்தினோடு இயைபுபட்டு நிற்பது (நன்.19.) |
| பருந்து | paruntu, n. 1. [K. pardu, M. paruntu.] Common kite; பறவைவகை. (பு. வெ. 3, 12.) 2. cf. குருகு. Bracelet; |
| பருந்துவால் | paruntu-vāl, n. <>பருந்து +. Dove-tailing; பருந்துவால்போல் வெட்டி இணைக்கும் பலகையின் மூலைப்பொருத்து. Loc. |
| பருந்துவாயன் | paruntu-vāyaṉ, n. <>id. +. A kind of fish; மீன்வகை. தோகை பருந்துவாயன் மட்டி மீன் (பறாளை. பள்ளு. 15.) |
| பருந்தேக்கு | paru-n-tēkku, n. <>பரு-மை +. A kind of teak; தேக்குவகை. (தைலவ. தைல. 135.) |
| பருநன்னாரி | paru-naṉṉāri, n. <>id. +. A kind of sarsaparilla. See மாகாளிக்கிழங்கு. (பதார்த்த. 428.) |
| பருநெல் | paru-nel, n. <>id. +. An inferior kind of paddy. See பெருநெல். Tinn. |
| பருப்பதம் | paruppatam, n. <>parvata. Hill, mountain; மலை. பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதிபோல் (திவ்.பெரியாழ். 5, 4, 7). |
| பருப்பதி | paruppati, n. <>Pārvatī. Pārvatī; பார்வதி. (அக. நி.) |
| பருப்பம் 1 | paruppam, n. <>பரு-. Loc. 1. Extension, dilation; பருக்கை. 2. See பருப்பு,1. |
| பருப்பம் 2 | paruppam, n. <>parvata. Mountain; மலை நீலப் பருப்பமுந் தீபமும் (பெருங். நரவாண. 1, 181). |
| பருப்பமுது | paruppamutu, n. <>பருப்பு +அமுது. Dholl; பருப்பு. பருப்பமுது நாழிக்கு நெல்லு முன்னாழியும் (S. I. I. ii, 147). |
| பருப்பாணி | paruppāṇi, n. <>id. +. Brad; shoe-peg; ஆணிவகை. |
| பருப்பி - த்தல் | paruppi-, 11 v. tr. Caus. of பரு-. (W.) 1. To enlarge, thicken; பருக்கச்செய்தல். 2. To magnify in description, exagerate; |
| பருப்பு | paruppu, n. <>பரு-. [T. K. pappu.] 1. Thickness, largeness; பருமை. பருப்புடைப் பவளம்போல (சீவக. 2273). 2. Soft or inner kernel of beans, almond , etc.; 3. Dholl, kernel of cajanus indicus; |
| பருப்புக்கஞ்சி | paruppu-k-kaci, n. <>பருப்பு +. A liquid preparation made of pulse and sugar; பயற்றம்பருப்பாற் செய்யப்பட்ட கஞ்சி வகை. (W.) |
| பருப்புக்கந்தகம் | paruppu-k-kantakam, n. <>id. +. A kind of sulphur; கந்தகவகை. Loc. |
| பருப்புக்கீரை | paruppu-k-kīrai, n. <>id. +. 1. Common cock's greens, Portulaca oleracea; கீரைவகை. (M. M. 363.) 2. [T. pappukūra.] White goose-foot, Chenopodium album; |
