Word |
English & Tamil Meaning |
---|---|
அச்சுப்பூட்டியிழு - த்தல் | accu-p-pūṭṭi-yiḻu- v. intr. <>id.+. To pass the thread through the loom; தறியூடு நூலைச்செலுத்தல். (W.) |
அச்சுரம் | accuram n. cf. ikṣura. 1. Tribulus plant. See நெருஞ்சி. (மூ.அ.) 2. Horse-radish tree. See முருங்கை. |
அச்சுருவாணி | accuru-v-āṇi n. <>அஞ்சு1+உருவு-+. Central bolt of a car; தேரினகத்திற் செறிகதிர். (பிங்.) |
அச்சுலக்கை | acculakkai n. <>akṣa+ உலக்கை. Axle of a well-sweep; துலாவைத் தாங்குங் கட்டை. |
அச்சுவசாஸ்திரம் | accuva-cāstiram n. <>ašva+. Hippology; அசுவசாஸ்திரம். |
அச்சுவத்தம் | accuvattam n. <>ašvattha. Pipal. See அரசு1. (பிங்.) |
அச்சுவத்தாமன் | accuvattāmaṉ n. <>ašvatthāman. Son of Drōṇa. See அசுவத்தாமான். . |
அச்சுவத்தாமா | accuvattāmā n. See அச்சுவத்தாமன். (பாரத. பதினைந். 27.) |
அச்சுவதி | accuvati n. <>ašvinī. The first nakṣatra. See அசுவதி. மறுவில் அச்சுவதி யாதி யிரே வதி யீறா மாதர் (நல். பாரத. பதினெட். 231). |
அச்சுவம் | accuvam n. <>ašva. Horse; குதிரை. இந்த அச்சுவம் கூர்ச்சரம் (திருவிளை. நரிபரி. 105). |
அச்சுவமேதம் | accuva-mētam n. <>id.+. Horse-sacrifice. See அசுவமேதம். (உத்தரரா.) |
அச்சுவரி | accu-vari n. An ancient tax; பழையவரிவகை. (I.M.P. Tn. 104). |
அச்சுவன் | accuvaṉ n. <>ašva. (Erot.) Man of horse-like nature, one of three āṭavarcāti, q.v.; குதிரைச்சாதி ஆடவன். (கல்லா. 5, மயிலேறு.) |
அச்சுவினி | accuviṉi n. <>ašvinī. Name of the first nakṣatra, part of Aries; ஒரு நட்சத்திரம். (திவா.) |
அச்சுவினிகள் | accuviṉikaḷ n. <>ašvin. See அச்சுவினிதேவர். (பிங். 2,86.) |
அச்சுவினிதேவர் | accuviṉi-tēvar n. <>id.+. Twin Vēdic gods who are physicians of heaven; தேவமருத்துவர். (பிங்.) |
அச்சுவினிமதலையர் | accuviṉi-matalaiyar n. <>id.+. Nakula and Sahadēva, the fourth and fifth of the Pāṇdavas; நகுல சகதேவர். (பிங்.) |
அச்சுறு - தல் | accuṟu-tal v.intr. <>அச்சு1+உறு-. To fear, dread; பயமடைதல். அச்சுறு கின்ற தென் (கந்தபு. தருமகோ. 19). |
அச்சுறுகொழுந்தொடர் | accuṟu-koḻun-toṭar n. <>akṣa+ உறு -+. Iron chain put round the neck of a must elephant like a garland and fastened to a tree, calculated to keep it in check; விசையாதபடி மரங்களி லிரும்பைத் தைத்து யானைக்கழுத்திலே மலைபோலே யிடுவதொன்று. அச்சுறு கொழுந்தொடர் யாப்பழித்து (சீவக. 1836). |
அச்சுறுத்து - தல் | accuṟuttu-t v.tr. caus. of அச்சுறு -. To frighten, intimidate; பயப்படுத்துதல். அஞ்சி யச்சுறுத்தலும் (தொல். பொ. 114). |
அச்சுறை | accuṟai n. <>ac+ உறை. Body, as the sheath of the soul; உடல். (W.) |
அச்சுனிகள் | accuṉikaḷ n. <>ašvin. Twin Vēdic gods. See அச்சுவினிதேவர். அச்சுனிகள் தீர்த்தம் (வேதாரணி. தீர்த்த. 27). |
அச்செனல் | acceṉal n. Onom. expr. of swiftness; விரைவுக் குறிப்பு. அச்செனத் தணந் தேகி (கந்தபு. நகர்புகு. 97). |
அச்சேறு - தல் | accēṟu- v.intr. <>அச்சு2 +. To be printed; அச்சடிக்கப்படுதல். |
அச்சோ | accō int. [M. accō.] 1. An exclamation of pity; ஓர் இரக்கச்சொல். அச்சோ எனப்ப லிமையோரை யீண்டு சிறைவைத்த பாவம் (கந்தபு. அவைபு. 43). 2. An exclamation of wonder; |
அச்சோப்பருவம் | accō-p-paruvam n. <>அச்சோ +. Childhood, as the age when the mother seeks her child's embrace, saying அச்சோ அச்சோ. தாய் குழந்தையை யணைக்க அழைக்கும் பருவம். (திவ். பெரியாழ். 1, 9, பதி.) |
அசக்கியம் | a-cakkiyam n. <>a-šakya. That which is impossible or impracticable; செய்ய இயலாதது. தியானம் புரிதற் கசக்கிய மாதலினால் (சூத. எக்கிய. பூ. 9, 3). |
அசக்கு - தல் | acakku- v.tr. caus. of அசங்கு -. To shake; அசைத்தல். அகடசக் கரவின் மணியா (கந்தபு. கடவுள்வா.). |
அசகசாந்தரம் | aca-kacāntaram n. <>aja+gaja+antara. Wide disparity, as between a goat and an elephant. See அஜகஜாந்தரம். . |
அசகண்டா | acakaṇṭā n. Species of Cleome See தைவேளை. (மலை.) |
அசகல்லி | acakalli n. <>ajagalla. A disease of children; குழந்தைகட்கு வரும் நோய் வகை. (பதார்த்த. 1155.) |
அசகல்லிகாரோகம் | acakallikā-rōkam n. <>ajagallikā+. See அசகல்லி. (பதார்த்த. 1155, உரை.) |
அசகாயசூரன் | a-cakāya-cūraṉ n. <>a-sahāya+. Hero able to accomplish great things without assistance; துணைவேண்டாப் பெருவீரன். |