Word |
English & Tamil Meaning |
---|---|
இக்குரார் | ikkurār n. <>Arab. Iqrar. Confession, admission; ஒத்துக்கொள்ளுகை. நாம் செய்த குற்றங்களை இக்குரார் செய்துகொள்ளவேண்டும். Muham. |
இக்கெனல் | ikkeṉal n. Onom. expr. of quickness; விரைவுக்குறிப்பு. இக்கென வினைய தீயோ னிறப்ப (கந்தபு.வரவுகேள்வி.2). |
இக்தியார் | iktiyār n. <>Arab. Ikhtiar. Control, discretion, option, will; இஷ்டம். மனிதன் உயிருடனிருப்பதும் இறப்பதும் அவனுடைய இக்தியாரிலில்லை. Muham. |
இக 1 - த்தல் | ika- 12 v.tr. 1. To leap over, jump over; தாண்டுதல். (திவா.) 2. To overflow, go beyond; 3. To transgress, violate, deviate from a rule or justice; 4. To leave behind, go away from; 5. To bear, endure; 1. To depart, go away; 2. To leave, put away, eradicate; |
இக 2 | ika part. Poet. expletive of the 2nd pers. of verbs; முன்னிலையசைச்சொல். (தொல்.சொல்.276.) |
இகசுக்கு | ikacukku n. cf ikṣuraka. White long-flowered nail dye. See நீர்முள்ளி. நீர்முள்ளி. (மலை.) |
இகணை | ikaṇai n. A kind of tree; ஒரு மரம். இலையணி யிகணையும் (பெருங்.இலாவாண.9. 8). |
இகந்துபடு - தல் | ikantu-paṭu- v.intr. <>இக-+. (Gram.) To vary from a rule, as an exception; விதியைக் கடத்தல். எய்தியதிகந்து படாமைக்காத்தலும் (நன்.176, விருத்.) |
இகந்துழி | ikantuḻi n. <>id.+ உழி. A far-off place; தூரமான இடம். (பழ.175.) |
இகபரசாதனம் | ika-para-cātaṉam n. <>iha+. Means of securing the benefits of this world and of the next; இம்மைமறுமைக் கேற்ற உபாயம். |
இகபரசுகம் | ika-para-cukam n. <>id.+. Happiness in this world and the next; earthly and heavenly bliss; இம்மைமறுமையின்பம். |
இகபரம் | ika-param n. <>id.+. This world and the next, earth and heaven; this birth and the next; இம்மைமறுமை. இகபரமு மெண்டிசையும் (தேவா.48, 3). |
இகபோகம் | ika-pōkam n. <>id.+. Earthly enjoyment, mundane pleasures; இவ்வுலக வின்பம். |
இகம் | ikam n. <>iha. This world; இம்மை. இகமொடு பரமும் (கந்தபு.திருவிளை.105). |
இகமலர் | ika-malar n. prob. இகு3-+. Full-blown flower; விரிமலர். (பிங்.) |
இகல்(லு) 1 - தல் | ikal- 3 and 5 v.intr. 1. To disagree, hate, be inimical; மாறுபடுதல். இன்னகாலையி னெல்லைமைந்த னிகன்று (சேதுபு.சேதுவந்த.12). 2. To vie, compete; 3. To be similar; |
இகல் 2 | ikal n. <>இகல்-. 1. Enmity, hatred, hostility; பகை. (திருமுரு.132). 2. [M. ihal.] Battle war; 3. Puissance, strength, intrepidity; 4. Intricacy, obscurity, involvedness; 5. Limit, bound; 6. Amatorial strifes between husband and wife; |
இகலன் | ikalaṉ n. <>இகல். 1. Warrior; படைவீரன். (பிங்.) 2. Jackal; 3. Old jackal; |
இகலாட்டம் | ikal-āṭṭam n. <>id.+. 1. Controversy, disputation, altercation; வாதாட்டம். எந்நேரமும் இகலாட்டமா யிருக்கிறவன். (W) 2. Competition, rivalry; |
இகலி | ikali n. Indian birthwort. See பெருமருந்து. (மலை.) |
இகலியார் | ikaliyār n. <>இகல்-. Enemies; பகைவர். இகலியார்புரமெய்தவன் (தேவா.75, 1). |
இகலோகம் | ikal-ōkam n. <>iha+. This world; இவ்வுலகம். (சி.சி.8. 31.) |
இகலோன் | ikalōṉ n. <>இகல். Enemy; பகைஞன். (திவா.) |
இகழ் 1 - தல் | ikaḻ- 4 v.intr.; tr. To be careless, negligent; 1. To slight, despise; opp to புகழ்-; 2. To forget; அசாக்கிரதையாதல். பிரியாரென விகழ்ந்தேன் (திருக்கோ.340).; அவமதித்தல். (குறள்.698.) ; மறத்தல். செய்யா திகழ்ந்தார்க் கெழுமையு மில் (குறள்.538). |
இகழ் 2 | ikaḻ n. <>இகழ்-. Contempt, reproach; இகழ்ச்சி. இகழறு சீற்றத் துப்பின் (காஞ்சிப்பு.கச்சி.21). |
இகழ்ச்சி | ikaḻcci n. <>id. 1. Detraction, disparagement, undervaluing; அவமதிப்பு. (குறள்.995). 2. Fault; 3. Remissness, negligence, forgetfulness; 4. Dislike, aversion; |