Word |
English & Tamil Meaning |
---|---|
இகுளை | ikuḷai n. 1. Woman's confidante; தோழி. (தொல்.சொல்.400, உரை.) 2. Kindred; relative; 3. Friendship; |
இங்கண் | iṅkaṇ adv. <>இ3+கண். Here, hither; இவ்விடம். இங்கண் மாஞாலத்து (திவ்.திருவாய்.9, 2, 8). |
இங்கார் | iṅkār n. <>Arab. Iṅkār. Objection, contradiction; ஆக்ஷேபிக்கை. Muham. |
இங்கிட்டு | iṅkiṭṭu adv. <>இ3. [M. iṅṅoṭṭu.] Here; இங்கு. (சம்.அக.) |
இங்கிதக்களிப்பு | iṅkita-k-kaḷippu n. <>iṅgita+. Pleasure of indulging in amorous thoughts; காமக்குறிப்போடு கூடிய களிப்பு. (சீவக.145.) |
இங்கிதக்காரன் | iṅkita-k-kāraṉ n. <>id.+. One who understands another's ways and so accommodates himself to his views and moods; பிறன்குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன். |
இங்கிதகவி | iṅkita-kavi n. <>id.+kavi. 1. Poem in which the poet brings out the inner thoughts of his patron; பாட்டுடைத்தலைவன் கருத்தை விளக்கும் பாடல். (W.) 2. Poet who expresses his thoughts in very felicitous diction; |
இங்கிதம் | iṅkitam n. <>iṅgita. 1. Hint, sign; indication of feeling by gesture; குறிப்பு. இங்கித நிலைமைநோக்கி (சீவக.765). 2. Purpose, object; 3. Sweetness, agreeableness; 4. Good manners; |
இங்கிரி | iṅkiri n. 1. Musk; கஸ்தூரி. (W.) 2. Monkey-flower, a genus of plants; mimulus; |
இங்கு 1 | iṅku adv. <>இ3. [M. iṅṅu.] Here, in this place; இவ்விடம். (திவ்.திருவாய்.8, 3, 1). |
இங்கு 2 - தல் | iṅku- 5 v.intr. [K. hiṅgu.] 1. To abide stay; தங்குதல். இங்குசுவை யின்னமிர்தமேந்த (சீவக.2025). 2. To plant, go deep, sink; |
இங்கு 3 | iṅku n. <>hiṅgu. Asafoetida. See பெருங்காயம். தசும்புறை யிங்காங் கசும்பறத் துடைத்து (ஞானா.41. 14.) |
இங்குசக்கண்டன் | iṅkucakkaṇṭaṉ n. cf. ikṣugandhā. 1.White long-flowered nail-dye. See நீர்முள்ளி. (W.) 2. A small prostrate herb; |
இங்குடுமம் | iṅku-ṭumam n. prob. hiṅgu+druma. Asafoetida. See பெருங்காயம். (W.) |
இங்குத்தை | iṅkuttai adv. <>இ3. Here; இவ்விடம். இங்குத்தை நின்றுந் துரப்பன் (திவ்.நாய்ச்.5. 10). |
இங்குதாரி | iṅkutāri n. An ore; ஒருவகை உலோகமண். (W.) |
இங்குதாழி | iṅkutāḻi n. Small Cashmere tree. See பீதரோகணி. (மூ.அ.) |
இங்குராமம் | iṅkurāmam n. <>hiṅgu+rāmaṭha (hiṅgu-rāmaṭha.) Asafoetida. See பெருங்காயம். (மூ.அ.) |
இங்குலிகம் | iṅkulikam n. <>hiṅguliha. Vermilion; red mercuric sulphide; சாதிலிங்கம். அகழுமிங்குலிக மஞ்சனவரைச் சொரிவன (சீவக.1898). |
இங்கே | iṅkē adv. <>இ3. Here; இங்கு. (திவ்.திருவாய்.8,10,3.) |
இங்ஙன் | iṅṅaṉ adv. <>id.+. See இங்ஙனம், 1. இங்ஙனியற்றிய மகத்தின் (கந்தபு.யாகசங்.127). 2. (தாயு.ஆகார.9). |
இங்ஙனம் | i-ṅ-ṅaṉam adv. <>id.+. 1. Here, in this place; இங்கு. இங்ஙனம் வருதலென்னா (தணிகைப்பு.வீராட்.102). 2. Thus, in this manner; |
இச்சகம் | iccakam n. <>icchaka. 1. Flattery, sycophancy; முகஸ்துதி. வரத்திலே கண்ணும் வாக்கி லிச்சகமும் (பிரபோத.11, 16). 2. (Arith.) Sum or result sought; |
இச்சம் | iccam n. <>icchā. Wish. See இச்சை. புணர்த்திய விச்சத்துப் பெருக்கத்திற் றுனைந்து (பரிபா.7. 37.) |
இச்சலாத்தி | iccalātti n. Trouble, difficulty; சங்கடம். Loc. |
இச்சாசத்தி | iccā-catti n. <>icchā+. (Saiva.) Siva's energy of will; one of pacacatti, q.v.; பஞ்ச சத்திகளுள் ஒன்று. (சி.சி.பாயி.சத்திவணக்கம், சிவாக்.) |
இச்சாப்பிராரத்தம் | iccā-p-pirārattam n. <>id.+. That variety of inevitably operative karma or impress of one's actions which impels a person wilfully to do forbidden or undesirable things; தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை. (வேதா.சூ.175, உரை.) |
இச்சாபத்தியம் | iccā-pattiyam n. <>id.+. 1. Avoidance of sexual relation while under medical treatment; மருந்துண்ணுங் காலத்திற் புணர்ச்சி தவிர்கை. 2. Ordinary or usual diet with very few restrictions; |