Word |
English & Tamil Meaning |
---|---|
இரட்டு 2 | iraṭṭu n. <>இரட்டு-. 1. Doubleness; இரட்டையாயிருக்கை. இரட்டைக்கிளவி யிரட்டிற்பிரிந் திசையா (தொல். சொல். 48). 2. Dungaree, as double-threaded cloth; sackcloth; 3. Noise, vibrating sound; |
இரட்டுறக்காண்டல் | iraṭṭuṟa-k-kāṇṭal n. <>இரண்டு+உறு-+. Indistinct perception; production of double images; problematical or hypothetical knowledge; ஐயக்காட்சி. திரியக்காண்டலும் இரட்டுறக்காண்டலும் தெளியக்காண்டலுமெனக் காட்சி மூவகைப்படும் (சி. போ. பா. 9, பக். 190). |
இரட்டுறமொழிதல் | iraṭṭuṟa-moḻital n. <>id.+. (Gram.) Making intentionally a statement capable of being interpreted in two ways; one of 32 utti, q.v.; ஓர் உத்தி. (நன். 14.) |
இரட்டுறல் | iraṭṭuṟal n. <>id.+. உறு-. Paronomasia, in which a word or phrase has a double sense; சிலேடை. (மாறன. 299, உரை.) |
இரட்டுறு - தல் | iraṭṭuṟu- v.intr. <>id.+. 1. To be ambiguous; இருபொருள் படுதல். 2. To be in doubt; 3. To change, metamorphose; |
இரட்டை | iraṭṭai n. <>இரண்டு. [M. iraṭṭa.] 1. Pair; சோடு. 2. Married couple; 3. Twins; 4. Two things naturally conjoined, as a double fruit; 5. Even numbers, as 2,4,6, opp. to ஒற்றை; 6. Pair of cloths, one tied round the waist and the other thrown over the shoulders; 7. Double sheet; 8. The sign Gemini in the Zodiac; 9. The month Aṉi, June-July; 10. A particular method of reciting the Vēdas; |
இரட்டைக்கத்தி | iraṭṭai-k-katti n. <>id.+. Double-bladed knife; இரண்டு அலகுள்ள கத்தி. |
இரட்டைக்கதவு | iraṭṭai-k-katavu n. <>id.+. Double doors; இரண்டு பிரிவாயுள்ள கதவு. |
இரட்டைக்கற்றூண் | iraṭṭai-k-kaṟṟūṇ n. <>id.+. Coupled column of granite; இரண்டு கற்களால் ஆகிய தூண். (C.E.M.) |
இரட்டைக்கிளவி | iraṭṭai-k-kiḷavi n. <>id.+. Double imitative words, as சுறுசுறுப்பு; இரட்டையாகநின்றே பொருளுணர்த்துஞ் சொல். (தொல். சொல். 48.) |
இரட்டைக்குண்டட்டிகை | iraṭṭai-k-kuṇṭaṭṭikai n. <>id.+. Necklace of double gold beads; கழுத்தணிவகை. |
இரட்டைக்கை | iraṭṭai-k-kai n. <>id.+. (Nāṭya.) Gesture with both hands. See இணைக்கை. (சிலப். 3,18, உரை.) |
இரட்டைக்கொடியடுப்பு | iraṭṭai-k-koṭi-y-aṭuppu n. <>id.+. Oven with three chambers for the passage of flames, a small chamber being on either side of the fire, for the cooking of side dishes; அடுப்புவகை. (இந்துபாக. பக். 66.) |
இரட்டைச்சிரட்டை | iraṭṭai-c-ciraṭṭai n. <>id.+. Shell with a scaly lining, from its looking like a double shell; இரட்டைக்கொட்டாங்கச்சி. (W.) |
இரட்டைச்சுழி | iraṭṭai-c-cuḻi n. <>id.+. 1. Two curls, as marks on horses and cattle; இருசுழி. (W.) 2. Secondary consonantal symbol ¬ of the vowel ஐ, from its being a double loop; |
இரட்டைத்தவிசு | iraṭṭai-t-tavicu n. <>id.+. Double seat, seat for two; இருவர் இருத்தற்கு உரிய ஓராசனம். (பெருங். உஞ்சைக் 34, 42.) |
இரட்டைத்தொடை | iraṭṭai-t-toṭai n. <>id.+. (Pros.) Concatenation in which the same word is repeated throughout a line of verse; ஓரடிமுழுதும் ஒருசொல்லேவரத் தொடுப்பது. (காரிகை, உறுப். 17, உரை.) |
இரட்டைநாகபந்தம் | iraṭṭai-nāka-pantam n. <>id.+. Variety of cittira-kavi which is so composed that the letters in which words may naturally fit into a fanciful diagram representing two interwined snakes; சித்திரகவி வகை. (தண்டி. 95, உரை.) |
இரட்டைநாடி | iraṭṭai-nāṭi n. <>id.+. Corpulent body; ஸ்தூலித்த உடம்பு. Colloq. |
இரட்டைப்படை | iraṭṭai-p-paṭai n. <>id.+ படு2-. 1. Double; இரட்டிப்பு. Colloq. 2. Even number; |
இரட்டைப்பாக்கு | iraṭṭai-p-pākku n. <>id.+. Areca-nut with two eyes or germpores; இருகண்ணுள்ள பாக்கு. (W.) |
இரட்டைப்பிள்ளை | iraṭṭai-p-piḷḷai n. <>id.+. 1. Twins; ஒரேகர்ப்பத்தினின்றும் தனித் தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர். 2. Double shoot of the young coconut or areca-nut tree; |