Word |
English & Tamil Meaning |
---|---|
இரண்டுநினை - த்தல் | iraṇṭu-niṉai- v.intr. <>id.+. To harbous treacherous thoughts under a seemingly honest exterior; துரோகம் நினைத்தல். Colloq. |
இரண்டுபடு - தல் | iraṇṭu-paṭu- v.intr. <>id.+. 1. To disagree, dissent, become opposed; பிரிவுபடுதல். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். 2. To be doubtful; |
இரண்டெட்டில் | iraṇṭeṭṭil adv. <>id. +. எட்டு-. Soon; quickly, literally in two strides; சீக்கிரத்தில். இரண்டெட்டில் வா. Colloq. |
இரண்டொன்று | iraṇṭoṉṟu adv. <>id.+. One or two; a few; சில. இரண்டொன்றுதா. |
இரணகள்ளி | iraṇa-kaḷḷi n. <>vraṇa+. Species of Spurge; கள்ளிவகை. |
இரணகளம் | iraṇa-kaḷam n. <>raṇa+khala. 1. Battlefield, a field of blood; போர்க்களம். 2. Row, uproar, fracas; |
இரணங்கொடு - த்தல் | iraṇaṅ-koṭu- v.tr. <>vraṇa+. To cause bruises, give pepper; அடித்தல். மற்றோரிணங் கொடுத்தாலிடுவர் (நல்வ. 18). |
இரணங்கொல்லி | iraṇaṅ-kolli n. <>id.+. Wormkiller, woody climber, Aristolochia bracteata; ஆடுதின்னாப்பாளை. (மூ.அ.) |
இரணசன்னி | iraṇa-caṉṉi n. <>id.+. Traumatic delirium; புண்களால் உண்டாகும் சன்னி. |
இரணசுக்கிரன் | iraṇa-cukkiraṉ n. <>id.+. Morbid affection of the eye accompanied by change of colour and imperfect vision; leucoma; கண்ணோய் வகை. (W.) |
இரணசூரன் | iraṇa-cūraṉ n. <>raṇa+. Hero in war, warrior; வீரன். |
இரணத்துருவம் | iraṇa-t-turuvam n. prob. rṇa+. Longitude of a planet required to be substracted in astron. calculations; கிரகபுடத்திற் கழிக்கப்படுவது. (W.) |
இரணத்தொடை | iraṇa-t-toṭai n. <>raṇa+. (Pros.) A kind of toTai. See முரண்டொடை. (காரிகை, ஒழிபி. 5.) |
இரணபத்திரகாளி | iraṇa-pattira-kāḷi n. <>id.+. Durgā, conferring victory in war; துர்க்கை. |
இரணபாதகம் | iraṇa-pātakam n. <>rṇa+. Unfaithfulness to creditors; கடன் தீராத் துரோகம். Colloq. |
இரணபேரி | iraṇa-pēri n. <>raṇa+bhēri. Battle-drum; போர்ப்பறை. |
இரணபேரிகை | iraṇa-pērikai n. <>id.+. See இரணபேரி. . |
இரணம் 1 | iraṇam n. <>rṇa. Debt; கடன். (சூடா.) |
இரணம் 2 | iraṇam n. <>raṇa. War, battle, fight, conflict; போர். (திவா.) |
இரணம் 3 | iraṇam n. <>vraṇa. Wouund, sore, ulcer, cancer; புண். உள்ளிலிரு பலமிட்டுப் பூசிரணம் போமால் (தைலவ. தைல. 103.) |
இரணம் 4 | iraṇam n. <>hiraṇa. Gold; பொன். (சூடா.) |
இரணம் 5 | iraṇam n. cf. ratna. Ruby; மாணிக்கம். (சூடா.) |
இரணரங்கம் | iraṇa-raṅkam n. <>raṇa+raṅga. Battle-field; போர்க்களம். |
இரணவஞ்சம் | iraṇa-vacam n. <>hiraṇa+prob. vamša. One of six blissful regions or pōka-pūmi where the fruits of the good deeds of former births are enjoyed; போகபூமியுளொன்று. (திவா.) |
இரணவீரன் | iraṇa-vīraṉ n. <>raṇa+. 1. Hero in war; போர்வீரன். 2. A demon-hero represented by an image in Aṅkāḷammaṉ's temple; |
இரணவைத்தியம் | iraṇa-vaittiyam n. <>vraṇa+. Surgery; சத்திர சிகிற்சை. |
இரணவைத்தியன் | iraṇa-vaittiyaṉ n. <>id.+. Surgeon; சத்திரவைத்தியன். |
இரணி | iraṇi n. Water-nut, Trapa bispinosa; பன்றிமொத்தை. (மலை.) |
இரணியகசிபு | iraṇiya-kacipu n. <>hiraṇya+kašipu. Name of an impious Acuraṉ who was destroyed by Viṣṇu in His man-lion incarnation; ஓர் அசுரன். |
இரணியகர்ப்பம் | iraṇiya-karppam n. <>id.+garbha. Ceremony of passing through a golden cow, such as the one observed by the Mahāraja of Travancore, which is believed to be equivalent to a second birth and so to bestow Brāhman-hood on a Kṣatriya; ஓர் யாகம். |
இரணியகர்ப்பமதம் | iraṇiya-karppa-matam n. <>id.+ id.+. Doctrine that Brahmā is the supreme God; பிரமாவே முதற் கடவுளென்னும் மதம். |
இரணியகர்ப்பயாஜி | iraṇiya-karppayāji n. <>id.+id.+yājin. One who has performed the ceremony of passing through a golden cow; இரணியகர்ப்பயாகம் பண்ணினவன். |
இரணியகர்ப்பன் | iraṇiya-karppaṉ n. <>id.+. 1. Brahmā who was born from the golden egg; பிரமன். (பிங்.) 2. The Deity, regarded as holding in his stomach the whole universe; |