Word |
English & Tamil Meaning |
---|---|
இருப்புமுள் | iruppu-muḷ n. <>id.+. Spike of a goad; தாறு. (திவா.) |
இருப்புமுறி | iruppu-muṟi n. Silvery-leaved indigo, m.sh., Indigofera, argentea; செடிவகை. (L.) |
இருப்புயிர் | iruppuyir n. <>இரும்பு+உயிர். Jaina. Literally, Iron-soul; fig., Souls that undergo purgation in hell, one of five classes of souls arranged accg. to spiritual purity; நரகருயிர். இருப்புயி ராகி வெந்து (சீவக. 3108). |
இருப்புலக்கை | iruppulakkai n. <>id.+ உலக்கை. Iron pestle, a weapon in wargare ஓர் ஆயுதம். |
இருப்புலி | iruppuli n. Pigeon-pea. See துவரை. (மலை.) . |
இருப்பூறல் | iruppūṟal n. <>இரும்பு+ஊறல் Iron stain on cloth; இரும்புக்கறை. |
இருப்பூறற்பணம் | iruppūṟaṟ-paṇam n. <>id.+ Adulterated silver coin; கலப்பு வெள்ளி நாணயம். (W.) |
இருப்பெழு | iruppeḻu n. <>id.+ எழு. Cross-bar made of iron; உழலை. மருப்புநிலைக் கந்தி னிருபெழுப் போக்கி (பெருங். இலாவாண. 5, 38). |
இருப்பை | iruppai n. [T. ippa, K. ippe, M. iruppa.] South Indian mahua, l.tr., Bassia longifolia; இலுப்பைமரம். (பெருங். உஞ்சைக். 50, 33.) |
இருப்பைப்பூச்சம்பா | iruppai-p-pū-ccampā n. <>இருப்பை+. A kind of paddy, of the campā variety, from its having the odour of the iruppai flower; நெல்வகை. |
இருபத்துநாலாயிரப்படி | iru-pattu-nālāyira-p-paṭi n. <>இருபது+. A commentary on the Tiruvāymoḷi, by Periya-v-āccāṉ-piḷḷai, aggregating 24, 000 granthas of 32 syllables each. . |
இருபது | iru-patu n. <>இரண்டு+பத்து. [T. iruvadi, K. ippattu, M. irupatu, Tu. iruva.] The number 20, being twice ten. . |
இருபன்னியம் | irupaṉṉiyam n. Marking-nut. See செங்கோட்டை. (மலை.) . |
இருபாவிருபஃது | iru-pā-v-iru-paḵtu n. <>இரண்டு+. 1. A species of composition of 20 verses, in which veṇpā and akaval alternate in antāti-t-totai; பிரபந்த வகை. (பன்னிருபா. 337.) 2. A text-book of the šaiva Siddhānta philosophy by Aruṇanti-civācāriyar; one of 14 meykaṇṭa-cāttiram, q.v.; |
இருபாவிருபது | iru-pā-v-iru-patu n. <>id.+. See இருபாவிருபஃது. . |
இருபான் | iru-pāṉ n. <>id.+ பத்து. Twenty; இருபது. இருபான் கணைதுரந்து (கந்தபு. அக்கினிமு. 82). |
இருபிறப்பாளன் | iru-piṟappāḷaṉ n. <>id.+. 1. The twice-born; men of the first three castes, as those born a second time when they have been invested with the sacred thread; துவிசன். 2. Brāhman; |
இருபிறப்பு | iru-piṟappu n. <>id.+. Two births; of persons as those of the first three castes; of animals as those of birds and other oviparous creatures; and of teeth in general; இரண்டுசன்மம். (சூடா.) |
இருபிறவி | iru-piṟavi n. <>id.+. Hybrid animal; இருசாதி சேர்ந்து பிறக்கும் பிராணிவர்க்கம். |
இருபுடைமெய்க்காட்டு | iru-puṭai-meyk-kāṭṭu n. <>id.+. That which appears in two functions, as the discus of Viṣṇu which is at once a pleasing ornament as well as a destructive weapon; ஒன்றே இருவேறு வகையாகத் தோற்றுவது. (திவ். திருநெடுந். 21, வ்யா.) |
இருபுரியா - தல் | irupuri-y-ā- v. intr. <>id.+. To be contrariwise one to another, as a rope twisted contrariwise at the two ends; மாறுபாடாதல். (திவ். கண்ணிநுண். 11, வ்யா.) |
இருபுலன் | iru-pulaṉ n. <>id.+. Twofold evacuation, urine and excrement; மலசலங்கள. உமிழ்வோ டிருபுலனுஞ் சோரார் (ஆசாரக். 33). |
இருபுறவசை | iru-puṟa-vacai n. <>id.+. Censure which, apparently, is such in form, but is really praise; வகைபோன்ற வாழ்த்து. (யாப். வி. 95, பக். 512.) |
இருபுறவாழ்த்து | iru-puṟa-vāḻttu n. <>id.+. Praise which is seemingly such in form, but is really censure; வாழ்த்துப்போன்ற வசை. (யாப். வி. 95, பக்.512.) |
இருபுனல் | iru-puṉal n. <>id.+. Two sources of water, viz., underground water as that in springs, wells and tanks, and surface water as in lakes and rivers; கீழ்நீர் மேல்நீர்கள். (குறள், 737.) |
இருபூ | iru-pū n. <>id.+. See இருபோகம். 1 (ஈடு.) . |
இருபூலை | irupūlai n. 1. Small Indian snow-berry. See பூலா. (L.) . 2. Indian snowberry. See வெள்ளைப்பூலாஞ்சி. (L.) |
இருபெயரொட்டாகுபெயர் | iru-peyaroṭṭāku-peyar n. <>இரண்டு+. Two nouns in apposition, one of which is used figuratively. (நன். 290, விருத்.) |
இருபெயரொட்டு | iru-peyar-oṭṭu n. <>id.+. (Gram.) Combination of two nouns in apposition where the adj. particle ஆகிய is understood; ஆகிய என்னும் பண்புருபு தொக்குநிற்பப் பெயர்கள் இணைந்துவருவது. (நன். 365, உரை.) |