Word |
English & Tamil Meaning |
---|---|
இல்லது | illatu n. <>id. Non-spirit, matter; பிரகிருதி. (திவ். திருவாய். 1, 2, 4.) |
இல்லம் | illam n. <>இல்1. [M.illam.] 1. House, home; வீடு. இல்லங்க டோறு மெழுந்தருளி (திருவாச. 7, 17). 2. [cf. T.cilla-giṇdza, K.cilla.] Clearing-nut tree. See தேற்றா. (அகநா.4.) |
இல்லல் | illal n. [Bra. illing = to leave.] Walking; நடக்கை (பிங்.) |
இல்லவள் | illavaḷ n. <>இல். Wife, mistress of the house; மனைவி. (குறள், 53.) |
இல்லறம் | il-l-aṟam n. <>id.+. 1. Domestic life, life of the householder, opp. to துறவறம்; இல்வாழ்க்கை. |
இல்லாக்குடி | illā-k-kuṭi n. <>இல்2+. Destitute family; தரித்திர குடும்பம். |
இல்லாண்முல்லை | illāṇ-mullai n. <>இல்லாள்+. 1. (Puṟam.) Theme of a faithful wife thinking about her husband during his absence in a military camp; பாசறைத்தலைவனை இல்லாள் நினையும் புறத்துறை. (திவா.) 2. (Puṟam.) Theme of a wife's loving adoration of her husband and her exulting praise of his unstinting hospitality as a householder; |
இல்லாண்மை | il-l-āṇmai n. <>இல்1+. Ability to support one's family and manage domestic affairs; குடியினையாளுந் தன்மை. (குறள், 1026). |
இல்லாத்தனம் | illā-t-taṉam n. <>இல்2+. Poverty, destitution; தரித்திரம். Colloq. |
இல்லாததும்பொல்லாததும் | illātatum-pollātatum n. <>id.+. Falsehood and slander; பொய்யும் தீங்குவிளைப்பதும். Colloq. |
இல்லாதபொய் | illāta-poy n. <>id.+. Downright lie, utter flashood; முழுப்பொய். Colloq. |
இல்லாதவன் | illātavaṉ n. <>id. One uttterly destitute, an impecunious person; வறியவன். |
இல்லாமை | illāmai n. <>id. 1. Absence; non-existence; இன்மை. 2. Poverty, want; |
இல்லாள் | illāḷ n. <>இல்1. [T. illālu.] 1. Wife, mistress of the house; மனைவி. (குறள், 52.) 2. Term used to designate a lady of rank in towns or in forest-pasture tracts; |
இல்லாளன் | il-l-āḷaṉ n. <>id.+. 1. Householder; கிருகஸ்தன். 2. Husband, ruler of the home; |
இல்லாளி | il-l-āḷi n. <>id.+. Householder, one who has entered on the order of a house-holder; கிருகஸ்தன். (சைவச. பொது. 376.) |
இல்லான் | illāṉ n. <>இல்2 Poor man, one in want; வறியவன். இல்லானை யில்லாளும் வேண்டாள் (நல்வ. 34). |
இல்லி 1 | illi n. prob. id. 1.Small hole, as in a pitcher; பொள்ளல். இல்லிக்குடம் (நன். 38). 2. Orifice, as of the teat; |
இல்லி 2 | illi n. <>இல்1. 1. Clearing-nut tree. See தேற்றா. (மூ. அ.) . 2. Cubeb pepper. See வால்மிளகு. (மூ. அ.) 2. A small mollusc without shell found on the seashore and used by fishermen as bait; |
இல்லிக்கண்ணன் | illi-k-kaṇṇaṉ n. <>இல்லி1+. 1. One who has eyes which appear like two small holes in the head; one with very small eyes; மிகச்சிறிய கண்ணுடையான். Loc. 2. One whose eyes are sensitive to light and who, therefore, contracts his eyes to a small aperture when facing light; |
இல்லிக்காது | illi-k-kātu n. <>id.+. Bored ear with a small hole, opp. to தொள்ளைக் காது; சிறுதுளைக் காது. (W.) |
இல்லிடம் | il-l-iṭam n. <>இல்1+. 1. House, abode; வீடு. (பிங்.) 2. Town, village; |
இல்லிமூக்கு | illi-mūkku n. <>இல்லி1+. Bleeding from nose, epistaxis; சில்லிமூக்கு. |
இல்லுறைகல் | il-l-uṟai-kal n. <>இல்1+. Mashing stone, a domestic utensil; அம்மிக்கல். இல்லுறைகல்லின் . . . செங்கால்பிடித்து (கல்லா. 18). |
இல்லுறைதெய்வம் | il-l-uṟai-teyvam n. <>id.+. The deity of a house; கிருகதேவதை. இல்லுறை தெய்வ மன்னார் (சீவக. 1095). |
இல்லெலி | il-l-eli n. <>id.+. House-rat, Mus decumanus; வீட்டெலி, இல்லெலி பார்த்து (சீவக. 2985). |
இல்லெனல் | il-l-eṉal n. <>இல்2+. 1. Death; மரணம். (பிங்.) 2. The state of becoming extinct; 3. Negating existence; |