Word |
English & Tamil Meaning |
---|---|
இல்லை | illai fin. v. <>இல்2. No; உணடென்பதன் எதிர்மறை. |
இல்லைசெய் - தல் | illai-cey- v. tr. <>id.+. To deny, disavow; மறுத்தல். இல்லை செய்யாதே இசைகையிறே (திவ்.திருப்பா. 15, இயா.). |
இல்லையா - தல் | illai-y-ā- v. intr. <>id.+. To be no more; to die; மரணமடைதல். இல்லை யாயின னுன்மக னின்றென (கம்பரா. இராவணன் சோ.3). |
இல்லொடுவரவு | illoṭu-varavu n. <>இல்1+. High birth; noble parentage; குடிப்பிறப்பு. இளமையும் வனப்பு மில்லொடு வரவும் (பெருங். உஞ்சைக். 36, 89). |
இல்லொழுக்கம் | il-l-oḻukkam n. <>id.+. Life of a householder; இல்லறம். கூறுமில் லொழுக்கந் தன்னை (கந்தபு. மார்க்கண்டேய. 33). |
இல்லவன் | ilvalaṉ n.<>Ilvala. A Daitya, elder brother of Vātāpi, destroyed by Agastya; வாதாபியின் தமையனான அசுரன். (வேதாரணி.மணவாள.13.) |
இல்வழக்கு | il-vaḻakku n. <>இல்2+. 1. False or untenable plea or contention; பொய் வழக்கு. 2. (Log.) Categorical denial; |
இல்வாழ்க்கை | il-vāḻkkai n. <>இல்1+. Domestic life; the order of domestic life; இல்லறத்தில் வாழ்கை. (குறள், 5, அதி.) |
இல்வாழ்வான் | il-vāḻvāṉ n. <>id.+. Householder; இல்லறத்தான். இல்வாழ்வா னென்பான் (குறள், 41). |
இல 1 | ila n. 1. Red-flowered silk-cotton tree. See இலவு1. இலமலர்ப் பஞ்சிப் பாதத்து (சீவக. 2641). |
இல 2 | ila n. prob. ஏலா. Always in the voc. case; used in ancient times in addressing a woman in a familiar manner; ஏடி யென்னும் பொருளுள்ள விளிப்பெயர். எவனில குறுமக ளியங்குதி (அகநா. 12). |
இலக்கணக்கருமம் | ilakkaṇa-k-karumam n. <>lakṣaṇa+karman. Description of marks or qualities. See சாமுத்திரிகம். (பெருங். உஞ்சைக். 38, 292.) . |
இலக்கணக்கொத்து | ilakkaṇa-k-kottu n.<>id.+. A treatise on grammar by Cuvāmināta-tēcikar, 17th c.; ஒரு நூல். |
இலக்கணச்சுழி | ilakkaṇa-c-cuḻi n.<>id.+. Lucky curve or curvature in the lines of the body, in the hair of horses, and in cattle generally; நற்சுழி. (W.) |
இலக்கணநூல் | ilakkaṇa-nūl n. <>id.+. Treatise on grammar. . |
இலக்கணப்போலி | ilakkaṇa-p-pōli n. <>id.+. (Gram.) Words which, though not strictly grammatical, have, nevertheless, by long usage secured unquestioned admission into the standard dialect and are, on that account, accepted to be as good as ilakkkaṇam-uṭaiyatu, one of three iyalpu-vazakku, q.v.; இலக்கண முடையதுபோல் தொன்றுதொட்டு வழங்குஞ் சொல். (நன். 267.) |
இலக்கணம் | ilakkaṇam n. <>lakṣaṇa. 1. Definition; accurate description; சிறப்பியல்பு. (வேதா. சூ.20.) 2. Quality, property, attribute, characteristic; 3. Sign, symbol, distinctive mark; 4. Elegance, sysmetry, comeliness, beauty; 5. Grammar, embracing five parts, viz., |
இலக்கணமுடையது | ilakkaṇam-uṭaiyatu n. <>id.+. (Gram.) Word that is regularly formed, and is part of the legitimate vocabulary, one of three iyalpu-vaḻakku, q.v.; இலக்கணவழியால் வருஞ் சொல். (நன். 267.) |
இலக்கணவழு | ilakkaṇa-vaḻu n. <>id.+. Grammatical error; இலக்கணப்பிழை. |
இலக்கணவிளக்கச்சூறாவளி | ilakkaṇaviḷakka-c-cūṟāvaḷi n. <>id.+. A treatise on Tamil grammar written by Civaāṉa-munivar, 18th c.in refutation of the Ilakkaṇa-viḷakkam; ஒரு நூல் |
இலக்கணவிளக்கம் | ilakkaṇa-viḷakkam n. <>id.+. A treatise on Tamil grammar in its five parts, by Vaittiyanāta- tēcikar, 17th c.; ஒருநூல். |
இலக்கணி | ilakkaṇi n. <>lakṣaṇin. Grammarian; இலக்கணம் வல்லவன். |
இலக்கணை | ilakkaṇai n. <>lakṣaṇā, (Gram.) Secondary significative capacity of a word, of three kinds, viz., விட்டவிலக்கணை, விடாதவிலக்கணை, விட்டும்விடாதவிலக்கணை; ஒருபொருளைக் காட்டற்கு உரிய கொல்லை மற்றொரு பொருட்குத் தந்து உரைப்பது. (நன்.269, விருத்.) |
இலக்கம் 1 | ilakkam n. <>இலங்கு-. Brightness, light; பிரகாசம். எல்லே யிலக்கம் (தொல். சொல். 271). |
இலக்கம் 2 | ilakkam n. <>lakṣa. 1. Target, butt, aim; குறிப்பொருள். இலக்கமுடம்பிடும்பைக்கு (குறள், 627). 2. One lakh, 100,000; 3. Number, digit; 4. Numerical figure; |