Word |
English & Tamil Meaning |
---|---|
இலக்கமடை - த்தல் | ilakkam-aṭai- v. intr. <>id.+. To enclose number in squares in such a manner that in whatever way they are added the total shall be the same, as device used also for magical purposes; எப்படிக் கூட்டினும் மொத்த எண் ஒன்றேயாகும்படி எண்களைச் சதுரங்களில் அடைத்தல். (W.) |
இலக்கமிடு - தல் | ilakkam-iṭu- v. tr.<>id.+. To count, reckon, compute; கணக்கிடுதல். (W.) |
இலக்கர் 1 | ilakkar n. <>id. Multitude, numbering 100,000; இலக்கமென்னுந்தொகையினர். (கந்தபு. சதமுகன்வ. 15.) |
இலக்கர் 2 | ilakkar n. cf. rakṣā. Cloth. clothing; ஆடை. (அரிசமய. குலசே. 34.) |
இலக்காரம் | ilakkāram n. cf. id.+ ஆர்-. See இலக்கர்2. (சூடா.) . . |
இலக்கி - த்தல் | ilakki- 11 v. tr. <>likh. To draw. as a sketch on a canvas; உருவரைதல். இவ்வுருவு நெஞ்சென்னுங்கிழியின்மேலிருந் திலக்கித்து (சீவக. 180). |
இலக்கிதம் | ilakkitam n. <>lakṣita. That which is marked, indicated or characterized by; குறிக்கப்பட்டது. பேசும் பொருளுக் கிலக்கிதமாம் (திருவாச. 48, 7). |
இலக்கியம் | ilakkiyam n. <>lakṣya. 1. The thing defined; இலக்கண மமைந்தது. இலக்கியமாம் பொருளில் (வேதா. சூ.20). 2. Example from classical writings to illustrate a rule of grammar, or the different meanings of a word or an expression, or to justify the use of a word or an expression; 3. Classical writings which form the basis for inductively framing the rules of grammar, literary works; 4. Mark, butt; |
இலக்கியார்த்தம் | ilakkiyārttam n. <>id.+. Secondary meaning; figurative sense of a word; இலக்கணையான் வரும் பொருள். (வேதா. சூ. 119.) |
இலக்கினச்சட்டுவருக்கம் | ilakkiṉa-ccaṭṭu-varukkam n. <>lagna+ṣad+. (Astrol.) Sixfold division of the rising sign for calculating nativities, viz., ஓரை, சுடர்ச்செலவு, திரேக்காணம், நவாமிசம், துவாதசாமிசம், கோட்கூறு. (விதான. சட்டுவருக்.) |
இலக்கினபத்திரிகை | ilakkiṉa-pattirikai n. <>id.+. Document fixing the auspicious time for religious ceremonies, esp. marriages; சுபமுகூர்த்தத்தைக் குறிப்பிடும் பத்திரிகை. |
இலக்கினம் | ilakkiṉam n. <>lagna. 1. (Astron.) Rising of sign of the zodiac; இராசியி னுதயம். (விதான. மரபி. 3, உரை.) 2. Hour fixed for auspicious ceremonies; |
இலக்கினாதிபதி | ilakkiṉātipati n. <>id.+. (Astrol.) Ruling planet of the ascendant; இலக்கினத்திற்கு உடையவன். |
இலக்கு 1 - தல் | ilakku 5 v. tr. caus. of இலங்கு-. To cause to blaze; சொலிப்பித்தல். எரியந்திரத் திலக்கியே (சைவச. பொது. 294). |
இலக்கு 2 - தல் | ilakku- 5 v. tr. <>likh. To draw, delineate; வரைதல். இரேகை யிலக்குக (சைவச. பொது. 274). |
இலக்கு 3 | ilakku n. <>lakṣa. 1. Mark, butt, target; குறிப்பொருள். 2. Target for an arrow, of four kinds, viz., பெருவண்மை, சிறு நுண்மை, சலம், நிச்சலம்; 3. Distinguishing mark or sing; 4. Place; 5. End, object in view; 6. Rival, competitor, opponent in games or tests of ability and strength; 7. Measure; 8. Favourable opportunity, convenient time; |
இலக்குப்பார் - த்தல் | ilakku-p-pār- v. intr. <>id.+. 1. To take aim; குறிபார்த்தல். 2. To watch for an opportunity, generally to do evil; |
இலக்குமணன் | ilakkumaṇaṉ n. <>Lakṣmaṇa. The brother and faithful companion of Rāma during his exile; இராமபிரான் தம்பி. (காஞ்சிப்பு. வீரராக. 8.) |
இலக்குமன் | ilakkumaṉ n. <>id. See இலக்குமணன். (திவ். பெரியதி. 2, 3, 7.) . |
இலக்குமி | ilakkumi n. <>lakṣmī. 1. The consort of Viṣṇu and the goddess of prosperity; திருமால் தேவி. 2. Good fortune, prosperity; 3. Turmeric; |