Word |
English & Tamil Meaning |
---|---|
இலைச்சுமி | ilaiccumi n. prob. lašuna. See இலைச்சுனி. (கல்லா. 97, 23.) . |
இலைச்சுருள் | ilai-c-curuḷ n. <>இலை+ Roll of betel leaf; வெற்றிலைச்சுருள். இலைச்சுருளைப் பிளவோடேகுதட்டிய (திருப்பு. 124). |
இலச்சை | ilaccai n. Colour; நிறம். வெண் சங்கே ரிலைச்சை (சூளா. துற. 226). |
இலைசுனி | ilaicuṉi n. <>lašuna. White speck, a property of ruby; மாணிக்கக் குணத் தொன்று, மாணிக்கம், சட்டமும் இலசுனியும் ஒன்றும் உட்பட (S.I.I. ii, 430, 434, ft.). |
இலைஞெமல் | ilai-emal n. <>இலை+ Dry leaves; இலைச்சருகு. மகளி ரிலைஞெமலு ளீன்ற குழவி (முத்தொள்.). |
இலைத்தட்டு | ilai-t-taṭṭu n. <>id.+. Salver for keeping betel leaves; வெற்றிலைத்தட்டம். (S.I.I. ii, 419.) |
இலைத்தடை | ilai-t-taṭai n. <>id.+. 1. Section of a plantain leaf cut lengthwise for a plate; வாழையிலையேடு. Loc. 2. Plate made by pinning together pieces of plantain sheaths; |
இலைத்திரி | ilai-t-tiri n. <>id.+. Roll of palmyra leaf inserted in the bored perforation of the ear; காதுத்துளையிற் செருகும் ஓலைச்சுருள். (W.) |
இலைநரம்பு | ilai-narampu n. <>id.+. Fibre of a leaf. . |
இலைப்பசளி | ilai-p-pacaḷi n. <>id.+. Large-flowered purslane. See பெரும்பசலை. (மலை.) . |
இலைப்பணி | ilai-p-paṇi n. <>id. Ornaments on which foliage art work is traced; இலை வடிவாகச் செய்யுந் தொழிலமைந்த அணி. (பெருங். மகத. 5, 22.) |
இலைப்பருப்பு | ilai-p-paruppu n. <>id.+. Inferior dhal which is as thin as a leaf; மட்டமான துவரம்பருப்பு. Colloq. |
இலைப்பாசி | ilai-p-pāci n. <>id.+. Species of duckweed, lemna obeordata; பாசிவகை. (மூ. அ.) |
இலைப்புரைகிளை - த்தல் | ilai-p-purai-kiḷai- v. tr. <>id.+. To make a thorough search everywhere, as a person who is looking out for something hid among leaves turns them all over one by one; எங்குந்தேடுதல். ஈட்டமும் வேறுமாகி யிலைப்புரை கிளைத்திட்டேமே (சீவக. 1741). |
இலைப்புரைதடவு - தல் | ilai-p-purai-taṭavu- v. tr. See இலைப்புரைகிளை-. (கலிங். புதுப். 448.) . |
இலைப்புல் | ilai-p-pul n. <>id.+. Species of panic grass, Panicum marginatum; புல் வகை. (மூ. அ.) |
இலைப்பூச்சி | ilai-p-pūcci n. <>id.+. Insect which eats through leaves, pulchriphyllium; இலைதின்னும் புழு. |
இலைப்பொல்லம் | ilai-p-pollam n. <>id.+.(J.) 1. Sewing leaves together for plates; இலை தைக்கை. 2. Piece of plantain leaf used as a plate to eat from; |
இலைப்போடு - தல் | ilai-ppōṭu- v.intr.<>id.+. To set leaf-plates in order for serving food; உணவுக்கு இலைக்கலம் இடுதல். |
இலைமறைகாய் | ilai-maṟai-kāy n. <>id.+. Hidden meaning contained in an expression. just as the fruit of a tree is hidden among the rich foliage; மறைபொருள். |
இலைமூக்கரிகத்தி | ilai-mūkkari-katti n. <>id.+. Special kind of knife for cutting the stem of the betel leaf; வெற்றிலைக்காம்பரியுங் கத்தி. (திவா.) |
இலைமேற்காய் | ilai-mēṟ-kāy n. <>id.+. 1. Bridal-couch plant, l.tr., Hymenodictyon excelsum; வெள்ளைக்கடம்பு. (L.) 2. Oliovate-leaved bridal-couch plant, l.tr., Hymenodictyon olivatum; |
இலையடை | ilai-y-aṭai n. <>id.+. Kind of flat sweet cake prepared by steaming the dough enclosed in a leaf; அப்பவருக்கம். (பிங்.) |
இலையமுதிடுவார் | ilai-y-amutiṭuvār n. <>id.+amutu+. Betel sellers; வெற்றிலை விற்பார். (சிலப். 5, 26, உரை.) |
இலையமுது | ilai-y-amutu n. <>id.+. Betel leaf; வெற்றிலை. அடைக்காயமுது இரண்டும் இலையமுது நாலும் (S.I.I. iii, 138). |
இலையான் | ilaiyāṉ n. <>id. Fly; ஈ. (J.) |
இலையுதிர்காலம் | ilai-y-utir-kālam n. <>id.+. The season when leaves drop off from trees; இலைகள் உதிர்தற்குரிய பருவம். |
இலையுதிர்வு | ilai-y-utirvu n. <>id.+. 1. Deciduousness of leaves from trees; இலையுதிர்கை. 2. Cremation ground; |
இலையெடு - த்தல் | ilai-y-eṭu- v. intr. <>id.+. To remove leaf-plates after eating; எச்சிலிலையெடுத்துச் சுத்திசெய்தல். |
இலைவடகம் | ilai-vaṭakam n. <>id.+. Wafers of rice flour prepared on leaves and steamed; இலையில் எழுதிச்சமைக்கும் வடகம். |
இலைவடாம் | ilai-vaṭām n. <>id.+. See இலைவடகம். Colloq. . |