Word |
English & Tamil Meaning |
---|---|
இழப்புணி | iḻappuṇi n. <>இழப்பு+உண்-. One who has suffered loss, as of child, husband. or property; இழந்தவன்-ள். (W.) |
இழப்புவெற்றிலை | iḻappu-veṟṟilai n. prob. <>இழை-+. Unassorted betel leaves; நல்லதுங் கெட்டதுங் கலந்த வெற்றிலை. Loc. |
இழவு | iḻavu n. <>இழ-. 1. Loss, deprivation, detriment; நஷ்டம். உனக்கிங் கிழவென்றான் (கம்பரா. ஊர்தேடு.83). 2. Destruction, ruin; 3. Death; 4. Funeral; 5. Trouble, worry; 6. Leavings in plates after eating; 7. Destitution; |
இழவுக்கடி - த்தல் | iḻavukkaṭi- v. intr. <>இழவு+அடி-. Colloq. 1. To beat one's breast in funeral ceremonies, a woman's way of venting her overpowering grief for the departed; செத்தவீட்டில் மார்படித்துக்கொள்ளுதல். 2. To exert oneself in vain; |
இழவுகா - த்தல் | iḻavu-kā- v. intr. <>id.+. To stay at home as mourners till the eighth day after the funeral ceremony; சாத்துக்கங் கொண்டிருத்தல். (W.) |
இழவுகூட்டு - தல் | iḻavu-kūṭṭu- v. intr. <>id.+. To cause confusion and uproar, as at a funeral; to create trouble; to be a nuisance; தொந்தரவுண்டாக்குதல். Loc. |
இழவுகொடு - த்தல் | iḻavu-koṭu- v. intr. <>id.+. See இழவுகூட்டு-. . |
இழவுகொடுப்பான் | iḻavu-koṭuppāṉ n. <>id.+. Troublesome fellow, a pest; உபத்திரவிப்பவன். Loc. |
இழவுகொண்டாடு - தல் | iḻavu-koṇṭāṭu- v. intr. <>id.+. To mourn for the dead, in a public manner, both at the funeral as well as at stated periods afterwards; சாத்துக்கங் கொண்டிருத்தல். Colloq. |
இழவுசொல்லு - தல் | iḻavu-collu- v. intr. <>id.+. To give intimation concerning a funeral; சாவறிவித்தல். |
இழவுவிழு - தல் | iḻavu-viḻu- v. intr. <>id.+. To befall, as death; மரணம் சம்பவித்தல். |
இழவுவீடு | iḻavu-vīṭu n. <>id.+. House where a death has occurred; சாவீடு. |
இழவூழ் | iḻavūḻ n. <>id.+ ஊழ். Destiny which brings on trouble and loss; கேடுதரும் வினைப்பயன். பேதைப்படுக்கு மிழவூழ் (குறள், 372). |
இழவோலை | iḻavōlai n. <>id.+ ஓலை. Funeral notice; சாவையறிவிக்கும் கடிதம். |
இழி 1 - தல் | iḻi- 4 v. intr. [K. M. Tu. iḻi.] 1. To descend, dismount; இறங்குதல். (அகநா. 66.) 2. To fall, drop down; 3. To be degraded, disgraced, reduced in circumstances; 4. To be inferior, low in comparison; 5. To be revealed; 6. To enter into; |
இழி 2 - த்தல் | iḻi- 11 v. tr. caus. of இழி1-. 1. To lower, let down, degrade; இறக்குதல். இழித் தனனென்னையானே (திருவாச. 5, 66). 2. To condemn, despise; |
இழிக்கப்பெறு - தல் | iḻikka-p-peṟu- v. intr. <>இழி1-+ To be dug or sunk, as a well; ஆழமாகத் தோண்டப்படுதல். துரவு கிண றிழிக்கப்பெறுவ தாகவும் (S.I.I. ii, 521). |
இழிகடை | iḻi-kaṭai n. <>id.+. That which is lowest, most mean, most degraded; மிக இழிந்தது. (W.) |
இழிகண் | iḻi-kaṇ n. <>id.+. Blear eye secreting matter, blepharitis; பீளைநீரொழுகுங் கண். குழிந்த கண்ண னிழிகண்ணன் (சைவச. ஆசாரிய. 11). |
இழிகுலம் | iḻi-kulam n. <>id.+. Low caste; தாழ்ந்த குடி. (அஷ்டப். திருவரங். கலம். 15.) |
இழிகை | iḻikai n. Dagger; கைச்சுரிகை. பவளப் பாய்காற் பசுமணி யிழிகை (சீவக. 558). |
இழிச்சு - தல் | iḻiccu- 5 v. tr. Var. of இழித்து-. 1. To lower, let down, help or hand down; இறக்குதல். அரிவழிபட் டிழிச்சிய விமானத் திறையவன் (தேவா. 584, 7). 2. To remit, as taxes; 3. To pull down, dismantle, as a building; 4. To disgrace; |
இழிச்சொல் | iḻi-c-col n. <>இழி2-+. Condemnatory, or depreciatory language; இழிசொல். (பிங்.) |
இழிசினர்மொழி | iḻiciṉar-moḻi n. <>இழி1-+ Vulgar dialect; currupt language, as the spoken tongue of low, uncivilized people; அவப் பிரஞ்சம். (உரி. நி.) |
இழிசினன் | iḻiciṉaṉ n. <>id. 1. Out-caste; புலைமகன். கட்டினிணக்கு மிழிசினன் (புறநா. 82). 2. Low, uncivilized person; |