Word |
English & Tamil Meaning |
---|---|
இழிசு - தல் | iḻicu- 5 v. tr. cf. இழுகு-. To smear, plaster, spread over; பூசுதல். சாந்திழிசிய கோலம் (திவ். பெரியதி. 3, 8, 7). |
இழிசொல் | iḻi-col n. <>இழி2-+. 1. Calumny, slander; பழிச்சொல். (பிங்.) 2. Blameworthy, improper language, of four kinds, viz., |
இழிஞன் | iḻiaṉ n. <>இழி1-+. See இழிசினன் புலைக்கரந் தீண்டி (காஞ்சிப்பு. பரசிரா. 42). . |
இழித்து - தல் | iḻittu- 5 v. tr. caus. of இழி1-. 1. To lower, let down; இறக்குதல். 2. To remit, as taxes; |
இழிதகவு | iḻi-takavu n. <>இழி1-+. Inferiority, baseness, meanness; இழிவு. (பிங்.) |
இழிதிணை | iḻi-tiṇai n. <>id.+. (Gram.) Nouns and verbs referring to impers. beings. See அஃறிணை. எல்லா மென்ப திழிதிணை யாயின் (நன். 245). |
இழியினன் | iḻiyiṉaṉ n. <>id. See இழிசினன். இழியினர்க்கேயானும் பசித்தார்க ணீதல் (சிறுபஞ். 77) |
இழிவுசிறப்பும்மை | iḻivu-ciṟappummai n. <>id.+. (Gram.) The particle um expressing marked inferiority; இழிவின் மிகுதியை விளக்கும் உம்மை. |
இழிப்பு | iḻippu n. <>இழி2-. 1. Contemptuous treatment; நிந்திக்கை. கையறியா மாக்களிழிப்பு மெடுத்தேத்தும் (நாலடி. 163). 2. (Poet.) Sentiment of disgust; |
இழிபிறப்பினோன் | iḻi-piṟappiṉōṉ n. <>இழி1-+. See இழிசினன். (புறநா. 363.) . |
இழிபு | iḻipu n. <>id. See இழிவு. வெள்ளைக் கிழிபு (காரிகை, உறுப். 15). |
இழிவழக்கு | iḻi-vaḻakku n. <>id.+. Vulgar usage; இழிசினர் வழக்கு. (தொல். எழுத். 64, நச்.) |
இழிவு | iḻivu n. <>id. 1. Inferiority, lowness, baseness; தாழ்வு. (பிங்.) 2. Disgrace, dishonour, ignominy; 3. Diminution, decrease, deficiency; 4. Ruin, destruction; 5. Fault, blemish; 6. Pollution, defilement; 7. Hollow, depression, pit; |
இழினெனல் | iḻiṉ-eṉal n. Onom. expr. to denote the bustle and stir in an inhabited house; ஓர் ஒலிக்குறிப்பு. ஏந்து மாடங்க டாமிழி னென்பன (சீவக. 2395). |
இழு - த்தல் | iḻu- 11 v. [T. īdu, īdtsu, K. iḻ, M. iḻu.] tr. 1. To draw, pull, haul, drag along the ground; ஈர்த்தல். 2. To draw to oneself, attract, as a magnet; 3. To influence, persuade by coaxing, wheedle; 4. To lengthen, stretch, attenuate by pulling, draw out; 5. To drag one into an affair; to haul up a person, as to court; to deliberately bring in one's name in support of an argument; 6. To protract, as time; 7. To lengthen, as the sound in singing, speaking, or in reading; 8. To draw into, as a whirlwind; to swallow up, engulf, as a vortex in a stream; 9. To absorb, as a sponge; -intr. 1. To have one's features or limbs distorted in spasms, have convulsion; to be twitched with pain, often used impersonally; 2. To gasp for breath, as from asthma or from approach of death; 3. To draw back, retreat; |
இழுக்கடி - த்தல் | iḻukkaṭi- v. tr. <>இழுக்க+அடி-. To cause vexatious trouble to a person by constantly putting off the fulfilment of an obligation to him; அலையவைத்தல். இழுக்கடித்தாய் நெஞ்சே (தாயு. உடல்பொய். 65). |
இழுக்கம் | iḻukkam n. <>இழுக்கு-. 1. Fault, offence, transgression; பிழை. நாளிழுக்க நட்டார் செயின் (குறள், 808). 2. Violation of social and caste rules; 3. Ignominy, discomfiture; |
இழுக்கல் | iḻukkal n. <>id. 1. Languor, lassitude, enfeeblement; தளர்வு. (திவா.) 2. (K. izaku.) Slipping, gliding; |
இழுக்காறு | iḻukkāṟu n. <>id.+. Evil way; path of iniquity; தீநெறி. இழுக்காற்றி னேதம் படுபாக் கறிந்து (குறள், 164). |
இழுக்கு - தல் | iḻukku- 5 v. (K. iḻaku.) intr. 1. To slip down from a great height, fall from a high rank; தவறுதல். (சீவக. 2238.) 2. To suffer misery, undergo pain; 3. To slip, slide; 4. To grow weak, lose vigour; to become dispirited; 5. To be caught, entrapped; -tr. 1. To forget; 2. To lose; 3. To give up avoid; 4. To destroy; |