Word |
English & Tamil Meaning |
---|---|
இளங்கம்பு | iḷaṅ-kampu n. <>id.+. Bulrush millet, sown in September and October, Pennisetum typhoideum; கம்புவகை. (M. Rd. D. 52.) |
இளங்கலையன் | iḷaṅ-kalaiyaṉ n. <>id.+ A paddy that ripens early; நெல்வகை. (W.) |
இளங்கன்று | iḷaṅ-kaṉṟu n. <>id.+. 1. Young calf; பசுமுதலியவற்றின் கன்று. 2. Sapling; |
இளங்கன்றுக்கழிச்சல் | iḷaṅ-kaṉṟu-k-kaḻiccal n. <>id.+. Scour; diarrhoea among cattle; மாட்டுநோய்வகை. |
இளங்கஷாயம் | iḷaṅ-kaṣāyam n. <>id.+. (Med.) Weak decoction, extract not kept on the fire sufficiently long to boil, dist. fr. முதிர்கஷாயம்; சிறுகக் காய்ச்சிய கஷாயம். |
இளங்காட்டுத்தரிசு | iḷaṅ-kāṭṭu-t-taricu n. <>id.+. Land left waste for ten years so as to allow of a young growth of jungle; பத்து வருஷத்துத் தரிசு. Loc. |
இளங்காய் | iḷaṅ-kāy n. <>id.+. Fruit just formed; முதிராக்காய். (W.) |
இளங்கார் | iḷaṅ-kār n. <>id.+. Variety of paddy which is reaped in the early part of the rainy season; நெல்வகை. (W.) |
இளங்கால் 1 | iḷaṅ-kāl n. <>id.+. 1. Lit. gentle breeze, genlly applied to the south wind; தென்றல். இளங்காற் றூத னிசைத்தன னாதலின் (சிலப். 8, 9). 2. Betel creeper recently planted; |
இளங்கால் 2 | iḷaṅ-kāl n. <>id.+. kāla. Period of youth; இளமைப்பருவம். இளங்காற் றுறவாதவர் (சிறுபஞ். 24). |
இளங்கால்வெற்றிலை | iḷaṅ-kāl-veṟṟilai n. <>id.+. Well developed betels plucked from creepers planted comparatively recently; இளங்கொடியிற் கிள்ளிய முதுவெற்றிலை. (C.G.) |
இளங்காலை | iḷaṅ-kālai n. <>id.+. 1. Early morning; அதிகாலை. இளங்காலையிற் புதுமலர் கவர்ந்து (செவ்வந்திப்பு. உறையூரழித்.5). 2. Period of youth; |
இளங்காற்று | iḷaṅkāṟṟu n. <>id.+. Gentle breeze; மந்தமாருதம். |
இளங்கிளை | iḷaṅ-kiḷai n. <>id.+. Younger sister; தங்கை. மாலவற் கிளங்கிளை (சிலப். 12, 68). |
இளங்குத்தி | iḷaṅ-kutti n. Dial. var. of இளங்கொற்றி. . |
இளங்குரல் | iḷaṅ-kural n. <>இள-மை+. Shrill, fine voice, as of a child; குழந்தைகளின் குரல். |
இளங்கேள்வி | iḷaṅ-kēḷvi n. <>id.+. Subordinate supervising officer, as of a temple; உபவிசாரணைக்கர்த்தா. (கோயிலொ.) |
இளங்கொடி | iḷaṅ-koṭi n. <>id.+. 1. Slim woman as resembling a young vine; பெண். இருங்குன்ற வாண ரிளங்கொடியே (திருக்கோ. 15). 2. After-birth of a cow; |
இளங்கொற்றி | iḷaṅ-koṟṟi n. <>id.+. Cow that has recently calved; இளங்கன்றுடைய பசு (W.) |
இளங்கோ | iḷaṅ-kō n. <>id.+. 1. Prince who is either a brother or a son of the king; யுவராசன். இளங்கொடி தோன்றுமா லிளங்கோ முன்னென (மணி. 4, 125.). 2. Agriculturist considered to be a member of a sub-division of the Vaišya caste; |
இளங்கோயில் | iḷaṅ-kō-y-il n. <>id.+. Temporary shrine put up for worshipping while a temple is under repair; பாலாலயம். (T.A.S. i, 177.) |
இளங்கோவடிகள் | iḷaṅ-kō-v-aṭikaḷ n. <>id.+. The ascetic brother of the Cēra king Ceṅkuṭṭuvaṉ, and the author of the Cilappatikāram; சிலப்பதிகார நூலாசிரியர். |
இளசாட்சசம் | iḷacāṭcacam n. Cassia. See கொன்றை. (மலை.) . |
இளசு | iḷacu n. <>இள-மை. That which is young or tender. See இளைது. Colloq. . |
இளஞ்சாயம் | iḷa-cāyam n. <>id.+. Slight tinge in dyeing; நன்றாய்ப் பற்றாத சாயம். (W.) |
இளஞ்சார்வு | iḷa-cārvu n. <>id.+. Tender leaf of the palmyra or talipot palm next to the core of the tree; குறுத்தோலை. (J.) |
இளஞ்சிவப்பு | iḷa-civappu n. <>id.+. Light red, pink; வெண்சிவப்பு. (W.) |
இளஞ்சூடு | iḷa-cūṭu n. <>id.+. Gentle heat, warmth; சிறுசுடுகை. |
இளஞ்சூல் | iḷa-cūl n. <>id.+. 1. Young ears of corn which have not yet shot forth; பயிரி னிளங்கரு. (பிங்.) 2. Embryo; |
இளந்தண்டு | iḷan-taṇṭu n. <>id.+. A plant the leaves of which serve as a pot-herb, Amarantnus gangeticus; முளைக்கீரை. (தைலவ. பாயி. 57.) |
இளந்தலை | iḷan-talai n. <>id.+. 1. Youth, juvenility; இளமைப்பருவம். இளந்தலைப் பெண். 2. Lowness of spirit or of circumstances; poverty dejection; 3. Lightness; 4. The tender part of timber; dist. fr. முதுதலை; |