Word |
English & Tamil Meaning |
---|---|
இளம்பாடு | iḷam-pāṭu n. <>id.+. 1. Sufferings peculiar to the period of youth; இளமையிற்படும் பாடு. 2. Immaturity, unripeness; |
இளம்பிள்ளை | iḷam-piḷḷai n. <>id.+. Baby, infant, child; சிறுபிள்ளை. (திவா.) |
இளம்பிள்ளைவாதம் | iḷam-piḷḷai-vātam n. <>id.+. Infantile paralysis; குழந்தைகளுக்கு வரும் வாதவகை. Colloq. |
இளம்பிறை | iḷam-piṟai n. <>id.+. 1. Crescent moon; பாலசந்திரன். இளம்பிறை நோக்கினன். (உபதேசகா. சிவவிர. 355). 2. (Nāṭya.) Gesture with one hand in which the four fingers are joined and curved like a crescent, while the thumb is kept apart; |
இளம்புல் | iḷam-pul n. <>id.+. 1. Fresh, tender grass; முதிராப்புல். (திவா.) 2. Bermuda grass. See அறுகு. (மலை.) |
இளம்பூரணர் | iḷam-pūraṇar n. <>id.+. The first commentator of the Tolkāppiyam; தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர். (நன். 359, மயிலை.) |
இளம்பூரணவடிகள் | iḷam-pūraṇa-v-aṭikaḷ n. <>id.+. Iḷampūraṇar, who was an ascetic. See இளம்பூரணர்.(சிலப். 8, 1, உரை.) . |
இளம்பெண் | iḷam-peṇ n. <>id.+.=kumārī. Aloe. See கற்றாழை. (தைலவ. தைல. 94.) . |
இளமகன் | iḷa-makaṉ n. <>id.+. Member of a cultivating caste found chiefly in the Zamin taluq of Tirupputtūr in the Ramnad district; அகம்படியச் சாதியான். |
இளமட்டம் | iḷa-maṭṭam n. <>id.+. 1. Small pony; குறுமட்டக்குதிரை. (W.) 2. Little boy or girl; stripling, youth; young woman; |
இளமண் | iḷa-maṇ n. <>id.+. Sandy soil; மணற்றரை. (R.) |
இளமணற்பாய் - தல் | iḷa-maṇaṟ-pāy- v. intr. <>id.+. To be irresistably drawn to, as a devotee of God in meditating on His attributes and benignity, just as fine sand is carried away by a flood; மனமிளகி யீடுபடுதல். (ஈடு, 1, 3, ப்ர.) |
இளமத்தியானம் | iḷa-mattiyāṉam n. <>id.+. Forenoon, somewhere about 11 o'clock மதியானப்பொழுதிற்குச் சிறுதுழந்தின காலம். மதியானப்பொழுதிற்குச் சிறுதுழந்தின காலம். (W.) |
இளமரக்கா | iḷa-mara-k-kā n. <>id.+ மரம்+கா. Grove reared in the midst of green fields; வயல்சூழ்ந்த சோலை. (சிலப். 11, 14, உரை.) |
இளமழை | iḷa-maḻai n. <>id.+. Drizzling cloud; சிறுபெயலுள்ள மேகம். இளமழையாடும் (கலித். 41). |
இளமார்பு | iḷamārpu n. Kind of camphor; கருப்பூரவகை. (சிலப். 14, 109, உரை.) |
இளமை | iḷamai n. [M. iḷama.] 1. Childhood, youth; பாலியம் அல்லது யௌவன பருவம். இளமையிற் கல் (ஆத்தி.) 2. Tenderness; 3. Indiscretion; immaturity of knowledge and intellect; 4. Illusion; 5. Inferiority, baseness; 6. Amorousness; |
இளமைச்செவ்வி | iḷamai-c-cevvi n. <>இள-மை+. Charm or beauty of youth; கோமளம். (திவா.) |
இளமையாடு - தல் | iḷamai-y-āṭu- v. intr. <>id.+. To be deluded into believing one thing to be quite a different one; திரிபுணர்ச்சி யுறுதல். மந்தி . . . இளமையாடி யிருக்கும் வனத்து (சீவக. 2491). |
இளவட்டக்கல் | iḷa-vaṭṭa-k-kal n. <>id.+ See இளந்தாரிக்கல். . |
இளவட்டப்பணம் | iḷa-vaṭṭa-p-paṇam n. <>id.+. 1. A customary present of a quarter-rupee coin which a newly married bridegroom has to pay to the people of the village or villages through which he passes on his return home after his marriage in the bride's house; மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம். Rd. வேற்றூரிலிருந்து வந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம் வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம் புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும் மரியாதைப்பணம். R |
இளவட்டம் | iḷa-vaṭṭam n. <>id.+ மட்டம். See இளமட்டம் . |
இளவடி | iḷa-vaṭi n. <>id.+ வடி2-. Imperfect distillation; இளம்பதத்தில் வடிக்கை. (W.) |
இளவணி | iḷa-v-aṇi n. <>id.+. Infantry; காலாட்படை. நின்ற இளவணி கலங்கி (ஈடு, 7, 4, 1). |
இளவரசன் | iḷa-v-aracaṉ n. <>id.+. 1. Crown prince, heir-apparent to a throne; யுவராஜா. (அருங்கலச். 53.) 2. King in his minority; |