Word |
English & Tamil Meaning |
---|---|
இளவரசு | iḷa-v-aracu n. <>id.+. [M. iḷavarašu.] See இளவரசன். தன்போ லிளவரசாக்கினானே (சீவக. 2912). வானிளவரசு (திவ். பெரியாழ். 3, 6, 3). |
இளவல் | iḷaval n. <>id. 1. Younger brother; he who is younger than one's self; தம்பி. இளவல்பின் னெழுந்து (கம்பரா. மூலபல. 67). 2. Lad; 3. Son; 4. That which is not fully developed; |
இளவன் | iḷavaṉ n. A prepared arsenic; சோரபாஷாணம். (மூ. அ.) |
இளவாடை | iḷa-vāṭai n. <>இள-மை+. Mild north wind; வடக்கிருந்து வரும் இளங்காற்று. இன்னிளவாடை (திவ். பெரியதி. 9, 5, 2). |
இளவாளிப்பு | iḷa-v-āḷippu n. <>id.+prob. ஆள்-. Dampness, moisture; ஈரம். (J.) |
இளவிளவெனல் | iḷa-v-iḷa-v-eṉal n. <>இள+. Expr. denoting luxuriant growth of vegetation; பயிர்ச்செழிப்பைக் குறிக்குஞ் சொல். |
இளவுச்சி | iḷa-v-ucci n. <>இள-மை+. (Astron.) Period of time just a little before noon; உச்சிக்காலத்திற்கு அணித்தான முற்பொழுது. (விதான. எச்சவினை. 4.) |
இளவுடையான் | iḷa-v-uṭaiyāṉ n. <>id.+. See இளவரசு. இளவுடையானென்றேத்த (சீவக. 2568). |
இளவெந்நீர் | iḷa-vennīr n. <>id.+. Tepid water; சிறுசூடுள்ள வெந்நீர். |
இளவெயில் | iḷa-veyil n. <>id.+. [K. eḷabisil.] Morning sunshine which is warm but is not sensibly hot; காலைவெயில். Colloq. |
இளவெழுத்து | iḷa-v-eḻuttu n. <>id.+. Unformed handwriting as that of a child just learning to write; திருந்தாவெழுத்து. (W.) |
இளவேனில் | iḷa-vēṉil n. <>id.+. The period of time included in the months of Cittirai and Vaikāci, being the milder part of the hot season, one of six paruvam, q.v.; சித்திரை வைகாசி மாதங்கள். (சிலப்.8, 7.) |
இளாவிருதம் | iḷāvirutam n. <>ilāvrta. See இளாவிருதவருடம். மேருப்பூதரம்சூழ் வருட மிளா விருதமாகும் (கந்தபு. அண்டகோ. 36). |
இளாவிருதவருடம் | iḷāviruta-varuṭam n. <>id.+. A division of the earth, one of nava-varuṭam, q.v.; நவ வருடத்தொன்று. |
இளி 1 - தல் | iḷi- 4 v. tr. 1. To pluck; இணுங்குதல். இளிந்த வீயும் (சீவக. 1241). 2. To strip off;-intr. To become low-spirited because of being ridiculed by others; |
இளி 2 - த்தல் | iḷi- 11 v. cf. இளி1-. [M. iḷi.] tr. 1. To disgrace, condemn; அவமதித்தல். (W.) 2. To laugh, scorn, ridicule;-intr. To grin; to show the teeth, as in cringing or in craving servilely; |
இளி 3 | iḷi n. <>இளி2- 1. Disgrace, contempt, contumely, scorn; இகழ்ச்சி. 2. Fault, defect; 3. Laughter; 4. Derisive laughter, contemptuous grin; 5. (Mus.) The fifth tone of the gamut; |
இளிகண் | iḷi-kaṇ n. <>id.+. Blear eyes; eyes sore with rheum; ectropion; பீளைக்கண். இளிகண்ணனைப் புண்டரீகாக்ஷனென்றும் (ஈடு, 3, 9, ப்ர.). |
இளிச்சவாய்ப்பட்டம் | iḷicca-vāy-p-paṭṭam n. <>id.+. Notoriety of being a fool; ஒன்றுந்தெரியாதவன் என்ற பட்டம். முடிச்சு அவிழ்க்கக் கொடுத்ததுமல்லாமல் இளிச்சவாய்ப்பட்டமுங் கிடைத்தது. |
இளிச்சவாயன் | iḷicca-vāyaṉ n. <>id.+. Colloq. 1. One who is always showing his teeth; one who grins like a monkey; எப்போதும் பல்லைக்காட்டுபவன். 2. One who is easily misled; simpleton; |
இளிச்சற்கண் | iḷiccaṟ-kaṇ n. <>id.+. See இளிகண். (W.) . |
இளிப்படு - தல் | iḷi-p-paṭu- v. intr. cf. இளைப்படு-. To be caught, trepanned; அகப்படுதல். இளிப்பட்டன வீகைப்போர் (கலித். 95). |
இளிம்பு | iḷimpu n. <>இளி1-. Unskilfulness; சாமர்த்தியமின்மை. இடைய ரிளிம்பு கண்டால் (ஈடு, 3, 5, 3). |
இளிவரல் | iḷi-varal n. <>id.+. Emotion of disgust, one of eight mey-p-pāṭu, q.v.; இழிப்புச்சுவை. (தொல். பொ. 251.) |
இளிவு | iḷivu n. <>id. 1. Disgrace, ridicule; இகழ்ச்சி. இளிவென்னு மேதப்பாடு (குறள், 464). 2. Wretchedness, lowness in rank or character; 3. Disgust; |
இளை 1 | iḷai n. cf. மிளை1. 1. Main guard; strong watch in a fortress; தலைக்காவல். (திவா.) 2. Jungle growth maintained as a defence round a fortified city; 3. Hedge, fence, protected enclosure; |