Word |
English & Tamil Meaning |
---|---|
இளையான் | iḷaiyāṉ n. <>id. 1. Younger brother; தம்பி. அவனுமுனக் கிளையானோ (கம்பரா. சூர்ப்ப. 132). 2. Lad, youth; |
இளையான்குடிமாறநாயனார் | iḷaiyāṉkuṭi-māṟa-nāyaṉār n. <>id.+. A canonized šaiva saint, one of Aṟupattu-mūvar, q.v.; அறுபத்துமூவர் நயன்மாருள் ஒருவர். (பெரியபு.) |
இளையெள் | iḷai-y-eḷ n. <>id.+ ஏள். Unripe rape seed; முற்றாத எள். (பிங்.) |
இளையோன் | iḷaiyōṉ n. <>id. 1. Boy, lad, youth; சிறுவன். (பிங்.) 2. Younger brother; |
இற்கடை | iṟ-kaṭai n. <>இல்1+. Entrance to a house; வீட்டுவாயில். இற்கடை. . . யூர்ந்தா யுநீ (கலித். 97). |
இற்கிழத்தி | iṟ-kiḻatti n. <>id.+. Wife, who is the mistress of the house; மனையாள். தனதிற்கிழத்தி தனையிகழின் (கூர்மபு. தக்கன். 56). |
இற்செறி - த்தல் | iṟ-ceṟi- v. tr. <>id.+. (Akap.) To restrain the heroine within the parental house in view of her adolescence, and thus indirectly impede her meeting her lover; தலைவனைச்சந்தித்தற்கிடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயதுமுதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துதல். (திருக்கோ. 134.) |
இற்செறிவு | iṟ-ceṟivu n. <>id.+. (Akap.) The restraint placed by her parents on the heroine, in view of her reaching adolescent womanhood, to stay within the house, which impedes her meeting her lover; தலைவனைச்சந்தித்தற்கிடமின்றி பெற்றோர் தலைவியை அவள் வயது முதிர்ச்சி நோக்கி வீட்டினுள் இருத்துகை. (திருக்கோ. 133. கொளு.) |
இற்பரத்தை | iṟ-parattai n. <>id.+.(Akap.) Concubine, kept mistress, dist. fr. காதற்பரத்தை; காமக்கிழத்தியாகக்கொண்ட பரத்தை. (பரிபா. 6, உரை.) |
இற்பாலர் | iṟ-pālar n. <>id.+ பான்மை. Persons of good birth, those born in a respectable family; நற்குடிப்பிறந்தவர். (பழ. 184.) |
இற்பிறப்பு | iṟ-piṟappu n. <>id.+. Descent from a good family, noble extraction; உயர்குடிப் பிறப்பு. இற்பிறப் பறியீர் (திவ். பெரியதி.1, 1, 7) |
இற்புலி | iṟ-puli n. <>id.+. Lit. domestic tiger, a familiar name for the cat; பூனை. (பிங்.) |
இற்றி 1 | iṟṟi n. <>இறு1-. Meat; ஊன். (பிங்.) |
இற்றி 2 | iṟṟi n. cf. இத்தி. Tailed oval-leaved flg. See இத்தி. கல்லிவ ரிற்றி (ஐங்குறு. 279). |
இற்று 1 | iṟṟu fin. v. <>இ3. Form of a verb, meaning, (It) is of such a nature; இத்தன்மை யுள்ளது. இயற்கைப் பொருளை யிற்றெனக் கிளத்தல் (தொல். சொல். 19). |
இற்று 2 | iṟṟu part. A euphonic particle occurring in the combination of the different parts of the same word, or of two distinct words, as in அவையிற்றை, பதிற்றுப்பத்து; ஒரு சாரியை. (நன். 244.) |
இற்றுச்சொட்டு - தல் | iṟṟu-c-coṭṭu- v. intr. <>இறு1- To exude and drip at intervals, as water; நீர் இடைவிட்டுச் சொட்டுதல். |
இற்றுப்போ - தல் | iṟṟu-p-pō- v. intr. <>id.+. To be worn off, reduced, broken; to become decayed; நைந்துபோதல். |
இற்றும் | iṟṟum adv. cf. இன்னும். Moreover, besides, further; மேலும். இற்றுங் கூறுவேன் (பெருங். வத்தவ. 6, 38). |
இற்றுவிழு - தல் | iṟṟu-viḻu- v. intr. <>இறு1-+. To decay and fall; நைந்துகெட்டுவிழுதல். மரம் இற்றுவிழுந்தது. (W.) |
இற்றை | iṟṟai <>இன்று. adv. To-day; -n. This day; இன்றைக்கு. இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் (திவ். திருப்பா.29).இன்று. இற்றையில் விளித்தனை (கந்தபு. தெய்வயா. 5). |
இற - த்தல் | ira- 12 v. tr. To go beyond, transcend, pass over; கடத்தல். புலவரை யிறந்த தோன்றல் (புறநா. 21). -intr. 1. To pass by, elapse, as time; 2. To transgress, trespass, over-step; 3. To excel, to be preminent; 4. [M.iṟa.] To die; 5. To cease to be current, become obsolete; 6. To depart, leave; |
இறக்கம் | iṟakkam n. <>இறங்கு-. 1. Descent, debarkation; இறங்குகை. 2. Declivity, slope, depression; 3. Ford, crossing of a river; 4. Tracks of beasts in a jungle; 5. Decline from a high position; |
இறக்காது | iṟakkātu n. <>E. record. Message, information, report; செய்தி. (J.) |
இறக்கிடு - தல் | iṟakkiṭu- v. tr. <>இறக்கு-+ To bow low or bend, as one's head; தாழ்த்துதல். தலையிறக்கிட்டுச்செல்வார் (திருவிளை. திருமண. 125). |
இறக்கு 1 - தல் | iṟakku- 5 v. tr. caus. of இறங்கு-. [K. eṟagu, M. irakku.] 1. To lower, let down, put down, as a load; to land, unload, as from a boat; இறங்கச்செய்தல். 2. To distil; 3. To reduce or bring down, as pride; 4. To praise ironically; 5. To injure; to annul, as a charitable gift; 6. To kill, slay; 7. To counteract the effect of; |