Word |
English & Tamil Meaning |
---|---|
இறங்குதுறை | iṟaṅku-tuṟai n. <>இறங்கு-+. Landing place; இழியும் நீர்த்துறை. |
இறங்குபொழுது | iṟaṅku-poḻutu n. <>id.+. Afternoon, the period of the Sun's declivity from the point overhead; பிற்பகல். |
இறங்குமட்டான் | iṟaṅku-maṭṭāṉ n. See இறங்கமட்டான். (J.) . |
இறங்குமிராசி | iṟaṅkum-irāci n. <>இறங்கு-+இராசி. The six signs through which the sun passes in its southern course; சூரியன் தக்ஷினாயனத்திற் சஞ்சரிப்பதற் கிடமாய்க் கடகமுதல் தனுசு வரையுள்ள ஆறிராசிகள். (W.) |
இறங்குமுகம் | iṟaṅku-mukam n. <>id.+. Declination, ebb in affairs; தணியும் நிலை. என்றுன்பமனைத்தும் . . . ஏறுமுகங் கொண்டதல்லா லிறங்குமுக மிலையால் (அருட்பா, 5, தனித்திருத். 12). |
இறங்குவெயில் | iṟaṅku-veyil n. <>id.+. Decreasing sunshine, as the sun descends towards the horizon; பிற்பகல்வெயில். |
இறங்கொற்றி | iṟaṅkoṟṟi n. <>id.+. ஒற்றி. Usufructuary mortgage; அனுபவ ஒற்றி. Loc. |
இறசால் | iṟacāl n. <>Port. real. See இறையால். (J.) . |
இறஞ்சி 1 | iṟaci n. cf. இறைஞ்சி. A garment of ancient times; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.) |
இறஞ்சி 2 | iṟaci n. cf. racajani. Indian indigo. See அவுரி. (மலை.) . |
இறட்டு - தல் | iṟaṭṭu- 5 v. tr. cf. இறை5-. To sprinkle, splash; முகந்து வீசுதல். முகத்திலே [நீரை] இறட்டிக்கொள்ளுதல் (திவ். திருமா. 36, இவ்யா. 118). |
இறடி | iṟaṭi n. 1. Italian millet. See தினை. இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169). 2. Black Italian millet. See கருந்தினை. (திவா.) |
இறந்தகாலம் | iṟanta-kālam n. <>இற-+. 1. Past time; சென்றகாலம். (மணி. 30, 14.) 2. (Gram.) Past tense; |
இறந்ததுவிலக்கல் | iṟantatu-vilakkal n. <>id.+. (Gram.) Rejection of an obsolete expression or usage, one of 32 utti, q.v.; ஓர் உத்தி. (நன். 14.) |
இறந்தவழக்கு | iṟanta-vaḻakku n. <>id.+. Obsolete expression; வீழ்ந்த வழக்கு. (சீவக. 2108, உரை.) |
இறந்திரி | iṟantiri n. cf. இறலி. White fig. See இத்தி. (மலை.) . |
இறந்துபடு - தல் | iṟantu-paṭu- v. intr. <>இற-+. To die; சாதல். எனதாற்றாமை கண்ட விடத்து இறந்துபடும் (இறை. 3, உரை, பக். 53). |
இறந்துபாடு | iṟantu-pāṭu n. <>id.+. Death; மரணம். இறந்துபா டாயினான்கொல் (கந்தபு. காமதகன. 91). |
இறந்துபிறப்பு | iṟantu-piṟappu n. <>id.+. Still birth; கருவினின்றும் பிள்ளை செத்துவிழுகை. Loc. |
இறப்ப | iṟappa adv. <> id. Much, exceedingly; மிகவும். இறப்பப் புகழ்ந்தன்று (பு. வெ. 11, ஆண்பாற். 7, கொளு) |
இறப்பு | iṟappu n. <>id. 1. Transgression, trespass; அதிக்கிரமம். பொறுத்த லிறப்பினை யென்றும் (குறள், 152). 2. Going, passage, passing; 3. Death; 4. Excess, abundance; 5. That which is superior; 6. Heavenly bliss, emancipation; 7. [M. iṟa.] Inside or under part of a sloping roof, eaves; 8. (Gram.) Past tense; |
இறல் | iṟal n. இறு1-. 1. Ruin, disaster; இறுதி. இறல¦னு மெண்ணாது வெஃகின் (குறள், 180). 2. Small root; 3. Bivalve shell-fish, mussel; |
இறலி | iṟali n. 1. White fig. See இத்தி. (பிங்.) . 2. Cassia; 3. Myrobalan. See மருது. (மலை.) |
இறலித்தீவு | iṟali-t-tīvu n. <>இறலி+. The second annular continent, one of ēḻu-tīvu, q.v.; எழுதீவினுளொன்று. (திவா.) |
இறவாணம் 1 | iṟavāṇam n. Tambourine; தோற்கருவி வகை. (யாழ். அக.) |
இறவாணம் 2 | iṟavāṇam n. See இறவாரம். . |
இறவாரம் | iṟavāram n. prob. இறப்பு+வார்-. [M. iṟavāram.] Eaves of a house; தாழ்வாரத்து மேற்கூரையின் முன்பாகம். |
இறவி | iṟavi n. <>இற-. Death; சாவு. இறவியொடு பிறவியற (திருப்பு. 790). |
இறவின்மை | iṟaviṉmai n. <>இறவு+இன்மை. Deathlessness, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.; இறைவனெண்குணத் தொன்று. (பிங்.) |