Word |
English & Tamil Meaning |
|---|---|
| வறட்காமாலை | vaṟaṭ-kāmālai n. <>வறள்+. A kind of jaundice; காமாலைவகை. (சீவரட். 135.)¦ |
| வறட்காய்ச்சல் | vaṟaṭ-kāyccal n. <>id.+. A kind of emaciating fever; வறட்சியுண்டாக்கும் சுரநோய்வகை. (w.) |
| வறட்காலம் | vaṟaṭ-kālam n. <>id.+. 1. Times of drought மழையில்லாக் காலம். 2. Times of famine; |
| வறட்காற்று | vaṟaṭ-kāṟṟu n. <>id.+. Dry wind; ஈரப்பசையற்ற காற்று. |
| வறட்கேடு | vaṟaṭ-kēṭu n. <>id.+. Distress from want of rain; மழையின்மையாலுண்டாந் துன்பம். வெள்ளக்கேடும் வறட்கேடு மின்றிக்கே (திவ். திருப்பா. 3, வ்யா. பக். 56). |
| வறட்சாவி | vaṟaṭ-cāvi n. <>id.+சாவி1. Blighted crop; மழையீல்லாமையாலான பயிர்ச் சாவி. (Insc. Pudu. 323.) |
| வறட்சி | vaṟaṭci n. <>வறள்-. 1. Drought; dryness; நீர்ப்பசையறுகை. நாக்குவறட்சி. 2. Low temperature of the body; 3. Wasting disease; 4. Eruption on the skin; |
| வறட்சித்திமிரம் | vaṟaṭci-t-timiram n. <>வறட்சி+. A kind of eye disease; கண்ணோய் வகை. (சீவரட். 264.) |
| வறட்சுண்டி | vaṟaṭ-cuṇṭi n. prob. வறள்+சுண்டி1. 1. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) 2. Floating sensitive-plant, Mimosa triquetra; |
| வறட்சூலை | vaṟaṭ-cūlai n. <>id.+. A disease causing shooting pain in the intestines; குடலைச் சுருட்டிப்பிடிக்கும் நோய்வகை. Loc. |
| வறட்சேம்பு | vaṟaṭ-cēmpu n. <>id.+. A garden plant, Colocasia indica; சேம்புவகை. (w.) |
| வறட்சை | vaṟaṭcai n. See வறட்சி. Colloq. . |
| வறட்சொறி | vaṟaṭ-coṟi n. <>வறள்+. A kind of itch; சொறிவகை. (இராசவைத். 105.) |
| வறட்டடை | vaṟaṭṭaṭai n. <>வறடு+. A kind of rice-cake baked in iron pan; இருப்புச் சட்டியிற் சுடப்படும் ஒருவகை யடை. Colloq. |
| வறட்டடைப்பான் | vaṟaṭṭaṭaippāṉ n. <>id.+. A cattle-disease; மாட்டுநோய்வகை (பெ. மாட்.) |
| வறட்டாடு | vaṟaṭṭāṭu n. <>id.+. Dry sheep; பால்கறவாத ஆடு. Loc. |
| வறட்டி | vaṟaṭṭi n. <>வறட்டு-. [T. varaṭa, varaṭe, K. baṟaṭi, M. varadi, Tu. varaṭe.] Bratty, dried cow-dung cake; அடைபோல் தட்டிக் காயவைத்த சாணம். |
| வறட்டிருமல் | vaṟaṭṭirumal n. <>id.+. Dry cough; தொண்டையை வறளச்செய்யும் இரு மல்வகை. (சீவரட்.18.) |
| வறட்டு - தல் | vaṟaṭṭu- 5 v. tr. Caus. of வறள்-. (w.) 1. To cause to dry up; வற்றச்செய்தல். 2. To parch, scorch; 3. To fry; |
| வறட்டுச்சாணை | vaṟaṭṭu-c-cāṇai n. <>வறடு+சாணை1. Grindstone of black sand and gum lac; ஒருவகைச் சாணைக்கல். |
| வறட்டுச்சோகை | vaṟaṭṭu-c-cōkai n. <>id.+. Bright's disease; சோகைநோய்வகை. (M. L.) |
| வறட்டுப்பசு | vaṟaṭṭu-p-pacu n. <>id.+. Dry cow; பால் கறவாத பசு. வறட்டுப் பசுக்களென் றுந்தீபற (திருவுந்தி. 43). |
| வறட்டுப்பாக்கு | vaṟaṭṭu-p-pākku n. <>id.+பாக்கு1. Tender arecanut cut, boiled and dried; வெட்டி அவித்து உலர்த்திய முற்றாத பாக்கு. Nā. |
| வறட்டுமஞ்சள் | vaṟaṭṭu-macaḷ n. <>id.+மஞ்சள்1. See வறளிமஞ்சள். Nā. . |
| வறட்பசிரி | vaṟaṭ-paciri n. <>வறள்-+. A kind of purslane; பசளைவகை. (மூ. அ.) |
| வறட்பால் | vaṟaṭ-pāl n. <>id.+பால்1. Milk dried into a mass; காய்ந்து கட்டியான பால் மேதி . . . கல்லறைப் பொழிந்த வறட்பால் (கல்லா 95, 22). |
| வறட்புள்தோடம் | vaṟaṭ-puḷ-tōṭam n. <>id.+புள்+தோடம்1. A children's disease; குழந்தைநோய்வகை. (பாலவா. 69.) |
| வறட்பூல் | vaṟaṭ-pūl n. See வறடபூல (w.) . |
| வறட்பூலா | vaṟaṭ-pūlā n. <>வறள்-+.(L.) 1. Indian snowberry, 1. sh., Flueggia leucopyrus; வெள்ளைப்பூலாவகை. 2. Small Indian snowberry, s. tr., Flueggia microcarpa; |
| வறட்போக்கிரி | vaṟaṭ-pōkkiri n. <>id.+. Impudent rogue; வெட்கங்கெட்ட அயோக்கியன். Loc. |
