Word |
English & Tamil Meaning |
|---|---|
| வறற்காலை | vaṟar-kālai n. <>வறல்+காலை1. Times of drought; நீரில்லாத காலம். அருவியற்ற பெருவறற் காலையும் (பதிற்றுப். 43, 14). |
| வறன் | vaṟaṉ. n. <>வறம். See வறம் வறனுண் டாயினு மறஞ்சா லியரோ (ஐங்குறு. 312). . |
| வறனுழ - த்தல் | vaṟaṉ-uḻa- v. intr. <>வறன்+. 1. To suffer by drought; to wither for want of rain, as crops; நிரின்றி வருந்துதல். வறனுழக்கும் பைங்கூழ்க்கு (இனி. நாற் 16). 2. To be stricken with poverty; |
| வறிஞன் | vaṟiaṉ n. <>வறு-மை. Poor man, destitute person; தரித்திரன். வறிஞராய்ச் சென்றிரப்பர் (நாலடி, 1). |
| வறிது | vaṟitu n. <>id. [K. baṟidu, bare, M. varu, Tu. bare.] 1. That which is little, small or insignificant; சிறிது. (தொல். சொல். 336.) 2. Worthlessness; purposelessness; 3. Ignorance; 4. Defect, deficiency; 5. Poverty, destitution; 6. Emptiness, hollowness; 7. Impossibility; |
| வறியன் | vaṟiyaṉ n. See வறிஞன். (சூடா.) . |
| வறியான் | vaṟiyāṉ n. See வறிஞன். வறியார்க்கொன் றீவதே யீகை (குறள், 221). . See வறியோன், 2. |
| வறியோன் | vaṟiyōṉ n. 1. See வறிஞன். . 2. Man devoid of sense, senseless person; |
| வறு - த்தல் | vaṟu- 11 v. tr. 1. To dry, grill, fry, parch, toast; பொரியச் செய்தல். வெயில் வறுத்த வெம்பரன்மேல் (திவ். இயற். பெரிய. ம. 50). 2. To annoy, distress; |
| வறு - தல் | vaṟu- 4 v. intr. To be fried, parched or grilled; வறுபடுதல். (w.) |
| வறுகடலை | vaṟu-kaṭalai n. <>வறு1-+. Fried pulse; வறுத்த கடலை. |
| வறுகறி | vaṟu-kaṟi n. <>id.+. Fried curry; வறுத்த கறி. (நாமதீப. 403.) |
| வறுகிப்பிடி - த்தல் | vaṟuki-p-piṭi- v. tr. <>வறுகு-+. To calsp; to hold fast; இறுக்கிப் பற்றுதல். (w.) |
| வறுகு - தல் | vaṟuku- 5 v. tr. [T. baruku.] (w.) 1. To cling to இறுகப் பிடித்தல். 2. To scratch, paw; |
| வறுகுமுள் | vaṟuku-muḷ n. <>வறுகு-+. Carpenter's nail for marking lines in wood; மரத்தில் கோடுகிழிக்கும் தச்சுக்கருவிவகை. |
| வறுங்காலம் | vaṟu-ṅ-kālam n. <>வறு-மை+. 1. Times of destitution; வறுமைக்காலம். 2. Times of drought; 3. Times of scarcity or famine; |
| வறுங்கோட்டி | vaṟu-ṅ-kōṭṭi n. <>id.+கோட்டி2. Ignorant assembly; அறிவிலார் கூட்டம். புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி (நாலடி, 155). |
| வறுங்கோடை | vaṟu-ṅ-kōṭai n. <>id.+கோடை1. Very dry season; அருங்கோடை. (w.) |
| வறுத்துப்பேரி | vaṟuttuppēri n. <>வறு1-+உப்பேரி. A kind of curry; கறிவகை. Nā. |
| வறுத்துறுப்பு | vaṟuttuṟuppu n. See வருத்துறுப்பு. (யாழ். அக.) . |
| வறு - நகை | vaṟu-nakai n. <>வறு-மை+. Smile; புன்சிரிப்பு. (w.) |
| வறு நிலம் | vaṟu-nilam n. <>id.+. Waste land; பாழ்நிலம். கடிமலரி னன்னறுவாசம் . . . வறுநிலத்து வாளாங் குகுத்தது போல் (திவ். இயற். பெரிய. ம. 89). |
| வறு நுகர்வு | vaṟu-nukarvu n. <>id.+. Unreal experience; மித்தியானுபவம். பிராரத்த வறு நுகர்வுண்டாம் (வேதா. சூ.159). |
| வறுபடு - தல் | vaṟu-paṭu- v. intr. <>வறு2+. To be fried, parched or grilled; தீயாற் பொரிதல். |
| வறுபயறு | vaṟu-payaṟu n. <>வறு1-+. Chow-chow of various fried pulses; வறுத்த பயறுவகைகள். Colloq. |
| வறும்புனம் | vaṟu-m-puṉam n. <>வறு-மை+. 1. Dry land lying fallow after harvest; அறுவடையானபின் தரிசாய்க்கிடாக்கும் புன்செய்நிலம். வறும்புனங் கண்டு. வருந்தல் (திருக்கோ.146). 2. Desert; |
| வறுமை | vaṟumai n. 1. Poverty, indigence; தரித்திரம். நல்லார்கட் பட்ட வறுமையின் (குறள், 408). 2. Difficulty, trouble; 3. Vacuity, emptiness; 4. Helpless loneliness; |
| வறுமொழி | vaṟu-moḻi n. <>வறுமை+ மொழி2. Useless word; பயனில் சொல். வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு (சிலப். 16,63). |
