Word |
English & Tamil Meaning |
|---|---|
| வன்கைவாரம் | vaṉ-kaivāram n. <>id.+. Cruel crime; கொடும்பழி. (யாழ். அக.) |
| வன்கொடியன் | vaṉ-koṭiyaṉ n. <>id.+ கொடியன்1. (W.) 1. Very strict and severe man; மிக்க கண்டிப்புள்ளவன். 2. Wicked and cruel man; |
| வன்கொலை | vaṉ-kolai n. <>id.+. Cruel murder; கடுங்கொலை. (W.) |
| வன்சா 1 | vaṉ-cā n. <>id.+. சா3. See வன்சாவு. (W.) . |
| வன்சா 2 | vaṉ-cā n. <>id.+சாவி1. See வன்சாவி. (W.) . |
| வன்சாவி | vaṉ-cāvi n. <>id.+id. Complete failure of crops on account of drought or insect-pest; மழையின்மையலாவது பூச்சிவெட்டா லாவது உண்டாம் பயிர்க்கேடு. |
| வன்சாவு | vaṉ-cāvu. n. <>id.+. 1.Cruel death; கடுஞ்சாவு. 2. Premature or untimely death; |
| வன்சிரம் | vaṉ-ciram n. prob. id+சிரம்1. cf. Seer fish, bluish, attaining 6 ft. in length, Cybium guttalum; நீலநிறழள்ளதும் ஆறு அடி வளர்வதுமான கடல்மீன்வகை. |
| வன்சிரமுள்ளி | vaṉ-cira-mulli n. prob. id.+id.+முள். A kind of fish-hook; தூண்டில் வகை. Loc. |
| வன்சிறை | vaṉ-ciral n. <>id.+. 1. Strict confinement; rigorous imprisonment; கடுங்காவல். வன்சிறையி லவன் வைக்கில் (திவ். திருவாய். 1, 4, 1). 2. Fortress; 3. Cruel slavery; |
| வன்செலல் | vaṉ-celal n. <>id.+செல்-. Rapid movement, forced march; விரைந்து செல்லுகை. வன்செல லத்திரி (சீவக. 1773). |
| வன்செவி | vaṉ-cevi n. <>id.+செவி1. Insensitive ear; உணர்ச்சியற்ற காது. வன்செவியோ நின்செவிதான் (திருவாச். 7, 1). |
| வன்சொல் | vaṉ-col n. <>id.+சொல்1. 1. Rude speech, harsh word, opp. to iṉ-col; கடுஞ்சொல். எவன்கொலோ வன்சொல் வழங்குவது (குறள், 99). 2. Barbarous tongue; |
| வன்பகை | vaṉ-pakai n. <>id.+. Deep enmity; implacable hatred; கடுமையான விரோதம். (W.) |
| வன்பாடு | vaṉ-pāṭu n. <>id.+. 1. Strength; hardness; வலிய தன்மை. 2. Rudeness, effrontery; முருட்டுத்தன்மை. இரந்து தீர்வா மென்னும் வன்மையின் வன்பாட்ட தில் (குறள், 1073). |
| வன்பார் | vaṉ-pār n. <>id.+பார். Hard, rocky soil; இறுகிய பாறைநிலம். |
| வன்பால் | vaṉ-pāl n. <>id.+.பால்2. 1. See வன்பார். வன்பாற் றெள்ளறல் (குறுந். 65). . 2. Desert tract, barren and sterile ground; 3. Hilly tract; 4. Rising ground, mound; |
| வன்பிழை | vaṉ-piḻai n. <>id.+. Heinous crime; கடுங்குற்றம். (W.) |
| வன்பு | vaṉpu n. <>id. [K. balpu.] 1. Strength, firmness; வலிமை. தடுத்தேன் வன்பால் (ஞானவா. புசுண். 99). 2. Hardness, as of heart; 3. Thought, attention; 4. cf. வள்பு. Strap, as of leather; |
| வன்புல் | vaṉ-pul n. <>id.+புல்1. Endogenous plant; புறக்காழுள்ள மரம் செடி முதலியன. (திவா.) |
| வன்புலம் | vaṉ-pulam n. <>id.+. 1. Hard soil; வலிய நிலம். வன்புலந் தழீஇ (பதிற்றுப். 75, 8). 2. Hilly tract; 3. Jungle tract; |
| வன்புறு - த்தல் | vaṉpuṟu 11 v. tr. <>வன்பு+உறு2-. (Akap.) To assure, comfort, as the lover his beloved; தலைவியைத் தலைவன் ஆற்றுவித்தல். கிழவன். வன்புறுத்தல்லது சேறவில்லை (தொல். பொ. 184). |
| வன்புறை | vaṉpuṟai n. <>வன்புறு-. 1. (Akap.) Assurance, comfort, given by a lover to his beloved; தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் (தொல். பொ. 185). 2. (Akap.) Theme in which the heroine is comforted by her companions and friends, during her separation from the hero; 3. Assurer, comforter; |
| வன்புறையெதிரழிதல் | vaṉpuṟai-y-etir-aḻital n. <>வன்புறை+. (Akap.) Theme describing the sufferings of a heroine in her loneliness after her lover has consoled and left her; தலைவன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை. வன்புறை யெதிரழிந்தாட்குத் தோழி... கூறியது (கலித். 28, துறை). |
