Word |
English & Tamil Meaning |
|---|---|
| வன்பொறை | vaṉ-poṟai n. <>வன்-மை+. Heavy burden; ponderous weight; பெரும்பாரம். (W.) |
| வன்மத்தானம் | vaṉma-t-tāṉam n. <>வன்மம்+தானம்2. See வன்மம்2. (W.) . |
| வன்மம் 1 | vaṉmam n. <>வன்-மை. 1. Malice, grudge, spite; தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58). 2. Force; 3. Vow; |
| வன்மம் 2 | vaṉmam n. <>மர்மம். 1. Vital part of the body; மருமஸ்தானம். (W.) 2. Words that must be spoken in secret; |
| வன்மரம் | vaṉ-maram. n. <>வல்+. 1. Exogenous plant; அகக்காழுள்ள மரம் (திவா.) 2. East Indian satin-wood. See புரசு2, 1. (W.) |
| வன்மரை | vaṉ-marai n. cf. வன்மரம் East Indian satin-wood. See புரசு2, 1. வன்மரையென்னு மரமேயுற்று (s. 1.1.III,408). . |
| வன்மனம் | vaṉ-maṉam n. <>வல்1+. Hard heart; கன்னெஞ்சு. (W.) |
| வன்மா | vaṉ-mā n. <>id.+மா1. 1. See வன்மான். . 2. Horse; |
| வன்மான் | vaṉ-māṉ n. <>id.+மான்1. Lion; சிங்கம். வன்மானுகைத்த கொடி (தக்கயாகப். 75). |
| வன்மி - த்தல் | vaṉ-mi- 11 v. intr. <>வன்மம்1. (W.) 1. To be hard-hearted; கன்னெஞ்சு படைத்தல். 2. To bear malice; 3. To make a vow; 4. To be indurated, as trees; |
| வன்மிகம் | vaṉmikam n. 1. See வன்மீகம், 1. சிதலை மெய்த்தொகை வன்மிகத் தெழுந்தென (கந்தபு. மோனநீ. 2). . 2. See வன்மீகரோகம். (யாழ். அக.) |
| வன்மீகநாதர் | vaṉmīka-nātar n. <>val-mīka+. šiva at Tiruvārūr in the Tanjore District; திருவாரூரிற் கோயில் கொண்டுள்ள சிவபிரான். எங்கள் வன்மீகநாத போற்றி (திருவாரூ. பு. வன்மீக. 83). |
| வன்மீகம் | vaṉmīkam n. <>valmīka. 1. Ant-hill; கறையான்புற்று. (பிங்.) 2. The Rāmā-yaṇa of vālmīki; 3. Cancer; 4. See வன்மீகரோகம். loc. |
| வன்மீகர் | vaṉmīkar n. <>valmīka. See வன்மீகநாதர். வன்மீகர் தாமோர் தமிழுருவாய்ச் சார்ந்த சதாசிவனை (தனிச்.சிந்.263, 1). . |
| வன்மீகரோகம் | vaṉmīka-rōkam n. <>வன்மீகம்+. Swelling in the neck, chest or other part of the body; elephantiasis; ஓருவகை உடல் வீக்கநோய். Loc. |
| வன்மீன் | vaṉ-mīṉ n. <>வல்+மீன்2. Crocodile; முதலை. (பிங்.) மிடைந்து வன்மு¦னுயிர் கவர (பிரமோத். 6, 35). |
| வன்மீனம் | vaṉ-mīṉam n. <>id.+மீனம்2. See வன்மீன். ஒரு வன்மீன நீரிடை நின்று (காஞ்சிப்பு. புண்ணிய. 11). . |
| வன்மை | vaṉmai n. <>வல்1. 1. Strength; வலிமை. வன்மையுள் வன்மை மடவார்ப்பொறை (குறள், 153). 2. Hardness; 3. See வன்சொல். மற்று நீ வன்மை பேசி (பெரியபு. தடுத்தாட். 70). 4. Skill, ability; 5. Force, violence; 6. Accent, emphasis; 7. Anger; 8. Thought, attention; 9. (Gram.) Hard consonant; |
| வன்மொழி | vaṉ-moḻi n. <>id.+மொழி2. See வன்சொல், 1. (W.) . |
| வன்றி | vaṉṟri n. perh. id. [K. handi.] Swine; பன்றி. வன்றி படர்ந்த வழி (தொல். பொ. 102, உரை). |
| வன்றிசை | vaṉṟricai n. <>id.+ திசை2. North; வடதிசை. வன்றிசைக் காளிதாசன் வடமொழி (இரகு. பாயிர.8). |
| வன்றொடர்க்குற்றியலுகரம் | vaṉṟoṭar-k-kuṟṟiyal-ukaram n. <>id.+. The shortened vowel u of a vowel consonant following a hard consonant; வல்லெழுத்து அடுத்துத் தொடரப்பெற்ற குற்றியலுகரம். (நன். 94.) |
| வன்றொண்டன் | vaṉṟoṇṭaṉ n. <>id.+. Cuntaramūrtti-nāyaṉār. See சுந்தரமூர்த்திநாயனார். நாவலூராளி நம்பி வன்றொண்டன் (தேவா. 942, 10). . |
| வன்னக்கல் | vaṉṉa-k-kal n. <>வன்னம்1+. A medicinal stone. See மந்தாரச்சிலை. (சங் .அக.) . |
| வன்னசரம் | vaṉṉa-caram, n. <>id.+. A neck ornament set with various precious stones; பலவகை இரத்தினங்களினாலியன்ற கழுத்தணிவகை. மண்மகடன் மார்பினணி வன்னசரமென்ன (கம்பரா. வரைக்காட்சி. 13). |
