Word |
English & Tamil Meaning |
|---|---|
| வாங்கு 2 | vāṅku n. <>வாங்கு- [K. bāgu.] 1. Bending; வளைவு. (நாமதீப. 768.) 2. Blow; 3. Abuse, rebuke; |
| வாங்கு 3 | vāṅku- n. <>Hind. bānk. Dagger; பிச்சுவா. |
| வாங்கு 4 | vāṅku n. <>E. bank. See வாங்குப் பலகை. . |
| வாங்குப்பலகை | vāṅku-p-palakai n. <>வாங்கு4+. Bench, wooden seat; கால்களுள்ள பலகையாசனம். |
| வாங்கைநாராயணன் | vāṅkainārāyaṇaṉ n. A kind of paddy; நெல்வகை. (Nels.) |
| வாச்சல்லியம் | vāccalliyam n.<>vātsalya. Tenderness. See வாற்சல்லியம். (W.) |
| வாச்சாயனன் | vāccāyaṉaṉ n. <>Vātsyāyana. A Rṣi, the author of a Sanskrit treatise on erotics; வடமொழியில் காமசூத்திரம் இயற்றிய முனிவன். பன்னி யுரைத்தான் பழிப்பில் . . . வாச்சாயன பகவான் (கொக்கோ. பாயி.10). |
| வாச்சி | vācci n. <>vāsī. 1. Adze. See வாய்ச்சி. (யாழ். அக.) See ஆடாதோடை. (பரி. அக.) |
| வாச்சியம் 1 | vācciyam n. <>vācya. 1. Meaning of a word, signification of a term; வாசகத்தின் பொருள். வாதவூரன் . . . வாசகமதற்கு வாச்சியம் (சிவப். பிரபந். நால்வர்.). 2. That which is manifest or clear; 3. That which can be stated in words; 4. Blame, censure, reproach; |
| வாச்சியம் 2 | vācciyam n. <>vādya. Musical instrument; வாத்தியம். கூத்து விகற்பங்களுக்கு அமைந்த வாச்சியக்கூறுகளும். (சிலப். 3, 14, உரை). |
| வாச்சியமாராயன் | vācciya-mārāyaṉ n. <>வாச்சியம்2+. Head musician of a temple or palace; கோயிலின் தலைமை வாத்தியக்காரன். (I. M. P. Pd. 146.) |
| வாச்சியாயன் | vācciyāyaṉ n. See வாச்சாயனன். (யாழ். அக.) . |
| வாச்சியார்த்தம் | vācciyārttam n. <>vācya+. Literal meaning, expressed meaning; சொல்லுக்கு நேரே உரிய பொருள். வாச்சியார்த்தம், முக்கியார்த்தம், அபி தார்த்தம் (வேதா. சூ.118). |
| வாச்சியீடன் | vācci-y-īṭaṉ n. <>வாச்சி + இடு-. One with sharp tongue, as an adze; வாச்சியிட்டு வெட்டினாற்போலக் கண்டிப்பாகப் பேசுபவன். வாச்சியீடனாக நறுக்கறப் பேசவல்லேன் (திவ். திருமாலை, 26, வ்யா. பக். 89). |
| வாசகஞ்செய் - தல் | vācaka-cey- v. tr. <>வாசகம்+. To praise, eulogise; தோத்திரஞ்செய்தல். நீலகண்டனு நான்முகனும் . . . வாசகஞ்செய்ய நின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5). |
| வாசகஞானம் | vācaka-āṉam n. <>id.+. 1. Lip wisdom, profession of pious wisdom; போலி ஞானப்பேச்சு. (W.) 2. See வாசாஞானம். |
| வாசகதாட்டி | vācaka-tāṭṭi n. <>id.+ தாட்டி2. Skill in speech; பேச்சுவன்மை. செய்ய வாசகதாட்டி யவதானவக்கணை சிறக்குமவனே ராயசன் (திருவேங். சத. 8). |
| வாசகதீட்சை | vācaka-tīṭcai n. <>id.+. (šaiva.) A way of initiation, in which the guru teaches his disciple how to pronounce the pacākṣara mantra and its eleven accessories, one of seven tīṭcai, q.v.; தீட்சை யேழனுள் பஞ்சாக்ஷரத்தைப் பதினொரு மந்திரங்களுடன் உச்சரிக்கும் முறையைக் குரு சீடனுக்கு உபதேசிக்குந் தீட்சை. (சி. சி. 8, 3, சிவாக்.) |
| வாசகப்பா | vācaka-p-pā n. <>id.+பா4. Drama; நாடக காவியம். (W.) |
| வாசகபதம் | vācaka-patam n. <>id.+ பதம்2. Colloquial word; வழக்கச்சொல். (யாழ். அக.) |
| வாசகபுத்தகம் | vācaka-puttakam n. <>id.+. Prose reader for learners; வசன நடையில் பாடங்களமைந்த நூல். (W.) |
| வாசகம் | vācakam n. <>vācaka. 1. Speech, word of mouth; வார்த்தை. சிறியோர்க் கருளியவுயர்மொழி வாசகம் (பெருங். வத்தவ. 13, 116). 2. Message; 3. Sentence, composition; 4. Poetical composition, verse; 5. Audible muttering of a mantra; 6. (šaiva.) 7. Prose; 8. Form of speech, grammatical or otherwise; 9. Letter, epistle; 10. Words of praise; . |
