Word |
English & Tamil Meaning |
|---|---|
| விலங்குபோடு - தல் | vilaṅku-pōṭu v. tr. E intr. <>id.+. To handcuff, put in chains; கைகால்களில் தலையிடுதல். |
| விலங்கூண் | vilaṅkūṇ n. <>id.+ஊண். Feeding animals, considered an act of charity; விலங்குகட்கு உணவிடும் அறச்செயல். (சூடா.) |
| விலசனம் | vilacaṉam n. <>vilasana. Sporting, amusement; விநோதவிளையாட்டு. (யாழ். அக.) |
| விலட்சணம் | vilaṭcaṇam n. <>vi-lakṣaṇa. 1. Special quality, distinguishing feature; சிறப்பியல்பு. 2. Being devoid of attributes; |
| விலத்தல் | vilattal n. prob. விலகு-. cf. vil. Separation; நீங்குகை. (யாழ். அக.) |
| விலத்தி | vilatti n. <>விலத்து-. Sparseness, being not close; நெருக்கமின்மை. இந்த ஆடையில் நூலிழை விலத்தியா யிருக்கிறது. |
| விலத்து - தல் | vilattu- 5 v. tr. prob. விலக்கு-. See விலக்கு-. (யாழ். அக.) . |
| விலம் | vilam n. <>blia. Depression, pit; பள்ளம். (இலக். அக.) |
| விலம்பம் | vilampam n. <>vilamba. See விளம்பம். (யாழ். அக.) . |
| விலயம் | vilayam n. <>vi-laya. (யாழ். அக.) 1. Destruction; அழிவு. 2. Dissolution of the universe; |
| விலர் | vilar n. A kind of tree; மரவகை. விலர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை). |
| விலவில - த்தல் | vilavila- 11 v. intr. 1. To tremble exceedingly; மிகநடுங்குதல். கொக்கு வல்லூறுகண் டென்ன விலவிலத்து (தனிப்பா. i, 171, 23). 2. To become extremely weak; 3. To be sparse, not close; |
| விலவு 1 | vilavu n. See விலா. விலவறச் சிரித்திட்டேனே (திவ். திருமாலை, 34). . |
| விலவு 2 | vilavu- 5 v. intr. <>vi-lap. See விலாவி-. விலவித் தவித்தேனை விழித்தொருகாற் பாராயோ. . |
| விலா | vilā n. [M. vilāva.] 1. Sides of the body; மார்பின் பக்கம். கழுகும் பாறும் விலா விற்றுக் கிடந்தவன்றே (சீவக. 804). 2. See விலாவெலும்பு. |
| விலாக்குடை | vilā-k-kuṭai n. <>விலா+. See விலா, 1. Tinn. . |
| விலாக்கூடு | vilā-k-kūṭu n. <>id.+. Rib; மார்க்கூடு. Loc. |
| விலாக்கொடி | vilā-k-koṭi n. <>id.+. Rib; விலாவெலும்பு. (யாழ். அக.) |
| விலாங்கு | vilāṅku n. perh. விலங்கு-. Eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengalensis; கபிலவர்ணமும் நான்கு அடி வளர்ச்சியும் உள்ள மீன்வகை. (பதார்த்த. 940.) |
| விலாச்சுழி | vilā-c-cuḻi n. <>விலா+சுழி-. Rapid respiration producing flattening of the chest-walls in flanks, a lung disease; விலாவைச் சுருட்டியிழுக்கும் ஒருவகைச் சுவாசநோய். (M. L.) |
| விலாசம் 1 | vilācam n. <>vi-lāsa. 1. Sport, play, pastime, pleasure, diversion; விளையாட்டு. வீதியில் விலாச முற்றிடு நாளில் (பாரத. சம்பவ. 119). 2. Amorous act or gesture; coquetry; 3. Bashfulness; 4. Beauty; 5. Dramatic composition; 6. Pleasure-house; retreat; 7. Address, superscription; 8. Abbreviated name, as of a firm or individual; 9. Trade mark, property mark; 10. Secret code-word or sign marked on articles by traders to indicate the price; |
| விலாசம் 2 | vilācam n. prob. višāla. 1. Spaciousness, extension, width; விலாசம். விலாசமான வீடு. 2. Plantain; 3. See நீபம்,1, 2, 3, 4. (அரு. நி.). |
| விலாசனை | vilācaṉai n. <>vilāsana. Womanly sport; dalliance; மகளிர்விளையாட்டு. (சூடா.) |
| விலாசி | vilāci n. <>vilāsin. (யாழ். அக.) 1. Kāma; மன்மதன். 2. Moon; 3. šiva; 4. Viṣṇu; 5. Fire; 6. Snake; |
| விலாசினி | vilāciṉi n. <>vilāsinī. 1. Woman; பெண். பாதாள விலாசினிமார் (சிவதரு. கோபுர. 25). 2. Lustful, wanton woman; 3. Harlot; |
| விலாசு 1 - தல் | vilācu- 5 v. tr. <>vilāsa. To put on attractively; அழகுற அணிதல். (சரப. குற. 32, 3, உரை.) |
