Word |
English & Tamil Meaning |
|---|---|
| விவாதிஸ்வரம் | vivāti-svaram n. <>vivā-din+. (Mus.) Discordant note; இசையிலுண்டாம் பகைச்சுரம். |
| விவிதம் | vivitam n. <>vi-vidha. Variousness; பலவிதம். விவித முத்தழன்மீது (தக்கயாகப். 506). (சூடா.) |
| விவிலியநூல் | viviliya-nūl n. <>Gr. biblia+. The Bible; கிறிஸ்துவசமயத்தின் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய நூல். |
| விவிலியமதம் | viviliya-matam n. <>id.+ mata. Christianity; கிறிஸ்தவ மதம் |
| விவேகசிந்தாமணி | vivēka-cintāmaṇi n. A treatise on Vēdānta philosophy; ஒரு வேதாந்த நூல். (W.) |
| விவேகபருவம் | vivēka-paruvam n. <>விவேகம்+. Age of discretion; பகுத்தறியும் பிராயம். (W.) |
| விவேகம் | vivēkam n. <>vivēka. 1. Discrimination, the capacity to reason and distinguish; பகுத்தறிவு. நித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம் (கைவல். தத். 8). 2. Ingenuity, penetration, right judgment; 3. Preface of a book; |
| விவேகமதியுப்பு | vivēka-mati-y-uppu n. prob. id.+ மதி3+. Glass gall. See வளையலுப்பு. (மூ. அ.) |
| விவேகி | vivēki n. <>vivēkin. Clever person, person of understanding; பகுத்தறிவுள்ளவன். மலர்தூவித் தொழுதான் விவேகிகளின் மிக்கோன் (ஞானவா. பிரகலா. 23). |
| விவேகி - த்தல் | vivēki- 11 v. tr. <>விவேகம். To discriminate; to understand with discrimination; பகுத்தறிதல். |
| விவேசனம் | vivēcaṉam n. <>vi-vēcana. Discrimination, distinguishing truth from falsehood, reality from semblance; பகுத்தறிவு. (W.) |
| விழ | viḻa n. <>விழா. See விழா. விழ வித்தாய் வீடு பெற்றான் (சீவக. 3114). |
| விழக்குழிபாய்ச்சு - தல் | viḻa-k-kuḻi-pāyccu- v. intr. <>விழு-+. (W.) 1. To throw into a pit; படுகுழியில் வீழ்த்துதல்; 2. To thwart an undertaking by putting obstacles in the way; |
| விழத்தட்டு - தல் | viḻa-t-taṭṭu- v. tr. <>id.+. (W.) 1. To overthrow, fell down; கீழ்விழும்படி தள்ளுதல். 2. To dash out of another's hand; |
| விழத்தள்ளு - தல் | viḻa-t-taḷḷu- v. tr. <>id.+. See விழத்தட்டு-. (W.) . |
| விழத்தாட்டு - தல் | viḻa-t-tāṭṭu- v. tr. <>id.+ தாட்டு-. See விழத்தட்டு-. (W.) . |
| விழம்பு | viḻampu n. Boiled rice; சோறு. (யாழ். அக.) |
| விழல் | viḻal n. <>விழு-. 1. Falling; விழுகை. பாவாடை விடலொன்றே நரகத்தில் விழலொன்றே. 2. Worthlessness, being valueless; 3. Dharba grass. 4. A kind of sedge; 5. Cuscus grass. See இலாமிச்சை. (W.) |
| விழல்கட்டி | viḻal-kaṭṭi n. <>விழல்+கட்டு-. One who plaits darbha grass; விழற்புல்லாற் பின்னுவோன். Loc. |
| விழலன் | viḻalaṉ n. <>id. cf. vrṣala. Idler; worthless man; ஒன்றுக்கும் உதவாதவன். விழலனெனையாள நினைவாய் (திருவேங். சத. 86) . |
| விழலாண்டி | viḻal-āṇṭi n. <>id.+. Idler, saunterer; சோம்பித்திரியும் வீணன். (W.) |
| விழலி | viḻali n. Fem. of விழலன். Idle woman; worthless woman; ஒன்றுக்கும் உதவாதவள் வீணிகள் விழலிகள் (திருப்பு. 890). |
| விழலுக்கிறை - த்தல் | viḻalukkiṟai- v. intr. <>விழல்+. To labour unprofitably, as watering unproductive grass; வீண்பாடுபடுதல். |
| விழவணி | viḻa-v-aṇi n. <>விழவு+. Adornment of the person on festive occasions, as marriage, etc.; சுபகாலங்களில் அணியும் அலங்காரம். வதுவை விழவணி வைகலுங் காட்டினை (கலித். 98). |
| விழவர் | viḻavar n. <>id. Those who celebrate a festival; உற்சவங் கொண்டாடுவோர். தண்பதங்கொள் விழவ ரோதை சிறந்தார்ப்ப (சிலப்.7, பக்.206). |
| விழவாற்றுப்படு - த்தல் | viḻavāṟṟuppaṭu- v. intr. <>id.+. To bring a festival to a close; உற்சவத்தை முடிவுசெய்தல். விழவாற்றுப்படுத்தபிற் புல்லென்ற களம்போல (கலித். 5). |
| விழவு | viḻavu n. <>விழா. 1. See விழா. முந்நீர் விழவி னெடியோன் (புறநா.9). 2. Pastime; 3. Desire; 4. Gemini of the zodiac; |
