Word |
English & Tamil Meaning |
|---|---|
| விழவுக்களம் | viḻavu-k-kaḷam n. <>விழவு+களம்2. Place of celebration of a festival; உற்சவம் நடைபெறும் இடம். விழவுக்கள நந்தி (குறிஞ்சிப்.192). |
| விழவேடெடு - த்தல் | viḻa-v-ēṭeṭu- v. intr. prob. விழு- + ஏடு+. To steal one's book; கிரந்தத்தைத் திருடிக்கொள்ளுதல். அவ்வூரில் விழவேடெடுத்துக் கொண்டறிதல் . . . செய்வாரில்லை (திவ். பெரியதி, 8, 1, 8, வ்யா.). |
| விழற்கட்டு | viḻaṟkaṭṭu n. <>விழல்+. House thatched with viḷal grass; விழற்புல் வேய்ந்த வீடு. (யாழ்.அக.). |
| விழற்கிறை - த்தல் | viḷaṟkiṟai- v. intr. <>id.+இறை-. See விழலுக்கிறை-. சுத்தப் பாமரராய் விழற்கிறைத்துப் பட்டனரால் (பிரபோத. 13, 14). |
| விழற்கூரை | viḷaṟ-kūrai n. <>id.+. Roof of viḷal grass thatch; விழற்புல் வேய்ந்த கூரை. |
| விழற்பாய் | viḻaṟ-pāy n. <>id.+ பாய்2. Mat made of viḷal grass; விழற்புல்லாற் பின்னிய பாய். வெயில்நாளில் விழற்பாயும் குளிர்நாளில் கோரைப்பாயும். |
| விழா | viḻā n. <>விழை-. 1. Festive occasion, festival; உற்சவம். ஆலமர்செல்வன் . . . மகன் விழாக் கால்கோளென்று (கலித்.83). 2. Celebration of a marriage; |
| விழாக்கடி | viḷā-k-kaṭi n. <>விழா+கடி5. Sights of a festival; உற்சவக்காட்சி. (W.) |
| விழாக்கால்கோள் | viḻā-k-kāl-kōḷ n. <>id.+ கால்1 + கோள்1. Commencement of a festival; திருவிழாத்தொடக்கம். ஆலமர்செல்வன்மகன் விழாக்கால் கோள் (மணி. 3, 144). |
| விழாக்கொள்(ளு) - தல் | viḻa-k-koḷ- v. intr. <>id.+. To celebrate a festival; திருவிழா நடத்துதல். (குறிஞ்சிப். 192, உரை.) |
| விழாக்கோள் | viḻā-k-kōḻ- n. <>id.+ கோள்1. Celebration of a festival; திருவிழாக்கொண்டாட்டம். விழாக்கோளெடுத்த நாலேழ் நாளினும் (மணி.1, 7). |
| விழாக்கோளாளர் | viḻākkōḷ-āḷar n. <>விழாக்கோள்+. Those who conduct a festival, as by order of a king; அரசர் முதலியோர் ஆணைப்படி திருவிழா நடத்துவோர். விழாக்கோளாளரைக் குழாத்திடைத் தரீஇ (பெருங். உஞ்சைக். 37, 247). |
| விழாப்புறம் | viḻā-p-puṟam n. <>விழா+ புறம்1. Land-endowment for the conduct of festivals; திருவிழா நடைபெறுதற்கு விடப்பட்ட இறையிலிநிலம். (T. A. S. i, 6.) |
| விழால் | viḻāl n. cf. விழல் See விழாலரிசி. (தைலவ.) . |
| விழாலரிசி | viḻāl-arici n. <>விழால்+. [T. vidavali.] Seed of a kind of grass; ஒருவகைப்புல்லரிசி. (தைலவ). |
| விழாவணி | viḻā-v-aṇi n. <>விழா+. 1. See விழவணி. . 2. Ceremonial grandeur, as of festivities; 3. State of a warrior armed for battle; |
| விழி - த்தல் | viḻi- 11 v. intr. 1. To open the eyes; கண்திறத்தல். இமையெடுத்துப் பற்றுவே னென்றியான் விழிக்குங்கால் (கலித் 144). 2. To wake from sleep; 3. To watch; to be vigilant; to be wide awake; 4. To look at attentively; 5. To gaze, stare; 6. To shine; 7. To be clear; 8. To be alive; |
| விழி | viḻi n. <>விழி-. 1. Eye; கண். (பிங்.) விழியிலா நகுதலை (தேவா. 345, 5). 2. Eye-ball; 3. Knowledge; wisdom; |
| விழிகண்குருடு | viḻi-kaṇ-kuruṭu n. <>id.+. Blindness without any apparent defect in the eye, Amaurosis; வெளித்தோற்றத்தில் விழியில் மாறுபாடின்றியே கண்தெரியாமை. அவமுறு விழிகண்குருடொடு மாவி யயர்வுறும் (கடம்ப. பு. இல¦லா.104). |
| விழிச்சி | viḻicci n. cf. எழுச்சி. Inflammation of the internal ear, otitis; காதுக்குள் வெடிக்குங் கட்டி. (M. L.) |
| விழிஞம் | viḻiam n. A town on the seacoast of Travancore; திருவிதாங்கூரிலுள்ள ஒரு துறைமுகப்பட்டினம். விழிஞக்கடற்கோடியுள் வேல்வலங்கைக் கொண்டான் (இறை. 3, உரை). |
