Word |
English & Tamil Meaning |
|---|---|
| விழுக்கு 1 | viḻukku n. <>விழுங்கு-. Gulp, swallow; மென்றுதின்னாமல் ஒருசேர வுட்கொள்ளுகை. ஒரு விழுக்கு விழுங்கினான். |
| விழுக்கு 2 | viḻukku n. cf. விழுது. 1. Fat, suet ஊன்விசேடம். விழுக்கொடு விரைஇய வெண்ணிணச் சுவையினள் (புறநா. 371). 2. Oiliness, grease; |
| விழுக்குப்புரட்டு | viḻukku-p-puraṭṭu n. <>விழுக்கு2+. A relish prepared in oil; எண்ணெயில் வேகவைத்தெடுத்த கறிவகை. Nā. |
| விழுங்கு - தல் | viḻuṅku- 5 v. tr. [T. miṅgu, K. muṅgu, M. viḻumuṅga.] 1. To swallow, gulp, as food; மென்றுதின்னாமல் ஒர்சேர வுட்கொள்ளுதல் துண்டிற்பொன் மீன் விழுங்கி யற்று (குறள், 931). 2. To devour; consume; to absorb; to exhaust; 3. To utter indistinctly; 4. To be hesitant in speech, slurring over words; 5. To overcome; 6. To seize, capture; 7. To kill; 8. To pervade; to swarm everywhere; |
| விழுங்கும்பாம்பு | viḻuṅkum-pāmpu n. <>விழுங்கு-+. A deadly defensive machine in a fortress; மதிற்பொறிவகை. (சிலப்.15, 216, உரை.) |
| விழுச்சிறை | viḻu-c-ciṟai n. <>விழு4+. Imprisonment without loss of dignity or honour; சீரிய சிறைவாசம். விலங்கி வில்லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்டபோழ்தும் (சீவக.1167). |
| விழுச்செல்வம் | viḻu-c-celvam n. <>id.+. Great fortune, immense wealth; பெருஞ்செல்வம். கேடில் விழுச்செல்வங் கல்வி (குறள், 400). |
| விழுசுமை | viḻu-cumai n. <>விழு1-+. Heavy burden; பெரும்பாரம். (யாழ். அக.) |
| விழுத்தகை | viḻu-t-takai n. <>விழு4+. Unequalled excellence; பிறர்க்கில்லாத சிறப்பு. விழுத்தகை பெறுகென (பரிபா. 11, 117). |
| விழுத்தண்டு | viḻu-t-taṇṭu n. <>id.+. Large stick for support in walking; பெரிய ஊன்றுகோல். தொடித்தலை விழுத்தண்டூன்றி (புறநா. 243). |
| விழுத்தம் | viḻuttam n. Black cumin. See கருஞ்சீரகம். (W.) |
| விழுத்தாட்டு - தல் | viḻu-t-tāṭṭu- v. tr. <>விழு1-+தாட்டு-. See விழத்தட்டு-. . |
| விழுத்திணை | viḻu-t-tiṇai n. <>விழு4+. Noble family; உயர்குலம். வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து (புறநா.27). |
| விழுத்து - தல் | viḻuttu- 5 v. tr. Caus. of விழு1-. [K. biḷisu.] See விழு2-. விழுத்தினன் சிரமெனும் வெகுளி மீக்கொள (கம்பரா. இராவணன் வதை. 155). . |
| விழுத்து | viḻuttu n. perh. விழு2-. Direction, aim; இலக்கு அந்த விழுத்திலே ஓடினேன். Loc. |
| விழுதி | viḻuti n. A straggling shrub with simple oblong leaves and greenish flowers, m.sh., cadaba indica; மருந்துச் செடிவகை. |
| விழுதிக்கீரை | viḻuti-k-kīrai n. <>விழுதி+. Leaves of viḻuti; விழுதியின் இலை. |
| விழுது | viḻutu n. <>விழு1-. [K. bilalu, M. viḻudu.] 1. Aerial root, as of the banyan; ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி. (பெரும்பாண். 357, உரை.) 2. Lock of hair; 3. (Weav.) Heddles; 4. Lead for sounding; 5. Ghee in congealed state; 6. Butter; 7. Fat; 8. Paste, pulpy mass; |
| விழுதுக்கயிறு | viḻutu-k-kayiṟu n. <>விழுது+. 1. (Weav.) Thread of linen, wound on the two beams, which the slay moves up and down; நெசவுக் கயிறுவகை. 2. Sounding-line; |
| விழுதுசாந்து | viḻutu-cāntu n. <>id.+. Mortar ground to a pulpy mass, dist. fr. iṭicāntu; மையாக அரைத்த சுண்ணச்சாந்து. Loc. |
| விழுதுவிடு - தல் | viḻutu-viṭu- v. intr. <>id.+. 1. To drop or let down aerial roots, as banyan; ஆல் முதலியனவற்றின் கிளைகளினின்றும் வேர் வெளிப்பட்டுத் தோன்றுதல். 2. To take soundings; to cast the lead-line; |
| விழுந்தான்கொட்டு | viḻuntāṉ-koṭṭu n. <>விழு1-+கொட்டு2. A peculiar beat of drum, indicating the death of a person; ஒருவன் இறந்த தைக் குறிக்கும் பறைமுழக்கு. Loc. |
